பிரீமியம் ஸ்டோரி

பொருளாதாரம், பங்குச் சந்தை, வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கு மூன்று பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க்.  இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

நாணயம் QUIZ

1. தொடர்ந்து 11 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப் பெரிய பணக்காராகத் திகழ்ந்து வருபவர்

அ. அனில் அம்பானி
ஆ. முகேஷ் அம்பானி
இ. அசீம் பிரேம்ஜி

2. இந்தியர்கள் செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மீதான  லாபத்துக்கு டிடிஎஸ்...

அ. பிடிப்பார்கள்
ஆ. பிடிக்க மாட்டார்கள்
இ. நிபந்தனைக்கு உட்பட்டது 

3. ஓர் அமெரிக்க டாலர் என்பது

அ. 100 சென்ட்
ஆ. 10 சென்ட்
இ. 1,000 சென்ட்

4. கீழ்க்கண்டவற்றில் எது நிதி இலக்கு (Financial Goal)? 

அ. மகளின் திருமணத்துக்கு ரூ.50 லட்சம் தேவை 
ஆ. இரண்டு ஆண்டுகளில் வீடு வாங்க பெரிய தொகை தேவை
இ. இரண்டு ஆண்டுகளில் மகளின் படிப்புக்கு ரூ.5 லட்சம் தேவை

5.  ஒருவருக்குக் கீழே காணும் எந்த நிலையில் ஆயுள் காப்பீடு இருக்காது?

அ. பெய்ட்-அப் பாலிசி
ஆ. டேர்ம் பிளான்
இ. பாலிசி சரண்டர்

6. உரத் தொழிற்சாலை இந்தியாவில் முதலில் எங்கு தொடங்கப்பட்டது? 

அ. ராணிப்பேட்டை - தமிழ்நாடு
ஆ. கோரக்பூர் - உத்தரப்பிரதேசம்
இ. கொச்சி - கேரளா

நாணயம் QUIZ

7. இந்தியாவில் முதல் ரயில் போக்குவரத்து தானே மற்றும் மும்பை இடையே எப்போது நடைபெற்றது?

அ. 1853
ஆ. 1900
இ. 1954

8.  22 கேரட் தங்கம் என்பது

அ. 75% தங்கம்
ஆ. 91.6% தங்கம்
இ. 99.99% தங்கம்

9. தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) எங்கு அமைந்துள்ளது?

அ. புது டெல்லி
ஆ. மும்பை
இ. கொல்கத்தா

10. பணியாளர் பிராவிடெண்ட் ஃபண்டுக்கு இப்போது ஆண்டுக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது?

அ. 8.5%
ஆ. 8.55%     
இ. 8.65%

- சி.சரவணன்

சரியான விடை 

1.    ஆ. முகேஷ் அம்பானி

2.    ஆ. பிடிக்க மாட்டார்கள்

3.    அ. 100 சென்ட்

4.    இ. இரண்டு ஆண்டு கழித்து மகளின் படிப்புக்கு ரூ. 5 லட்சம் தேவை

5.    இ. பாலிசி சரண்டர்

6.    அ. ராணிப்பேட்டை - தமிழ்நாடு

7.    அ. 1853

8.    ஆ. 91.6% தங்கம்

9.    ஆ. மும்பை

10.    ஆ. 8.55%

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு