Published:Updated:

சொந்த பயன்பாட்டுக்கான கார்... வாடகைக்கு விடலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சொந்த பயன்பாட்டுக்கான கார்... வாடகைக்கு விடலாமா?
சொந்த பயன்பாட்டுக்கான கார்... வாடகைக்கு விடலாமா?

கேள்வி - பதில்

பிரீமியம் ஸ்டோரி

சொந்த உபயோகத்திற்கான வாகனத்தை சிலர் வாடகை வாகனமாகப் பயன்படுத்துகிறார்கள். அப்படிப் பயன்படுத்த அனுமதி உண்டா, அதில் பயணிப்பவர்களுக்கு விபத்துக் காப்பீடு வசதி செல்லுபடியாகுமா?

மகேஷ்குமார், ராஜபாளையம்

வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்

“சொந்த உபயோகத்திற்கான வாகனத்தை வர்த்தகரீதியாக வாடகை வாகனமாகப் பயன்படுத்தக்கூடாது. சொந்த உபயோகத்திற்கான காரை வாடகைக்குப் பயன்படுத்தினால், கார் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். அதேபோல், சொந்த உபயோகத்திற்கான வாகனத்தை வாடகைக்குப் பயன்படுத்தும்போது, விபத்து நேர்ந்தால் இன்ஷூரன்ஸ் நிறுவனம் பொறுப்பேற்காது.”

சொந்த பயன்பாட்டுக்கான கார்... வாடகைக்கு விடலாமா?

ஏற்றுமதி செய்வதற்கான ஐ.இ கோட்    (Importer Exporter Code) பெறுவதற்காக வாடகை ஒப்பந்தம் மற்றும் ரத்து செய்யப்பட்ட காசோலையை ஆன்லைனில் அப்லோட் செய்ய பலமுறை முயற்சி செய்தும் முடிய வில்லை. என்ன செய்வது?

மணிகண்டன், சென்னை

கே.எஸ்.கமாலுதீன்,  இயக்குநர், புளூபாரத் எக்சிம்
 
“ஆன்லைனில் அப்லோட் செய்யும் பலருக்கும் இந்தச் சிரமம்  இருக்கிறது. இது பிரவுசர் பயன்பாட்டால் ஏற்படும் சிக்கல். கூகுள் குரோம், ஃபயர்பாக்ஸ் போன்ற பிரவுசர்கள் இதற்கு சப்போர்ட் செய்வ தில்லை. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வெர்சன் 10 மற்றும் அதற்கு மேலுள்ள வெர்சன்கள் மட்டுமே சரியாக சப்போர்ட் செய்கின்றன. எனவே, அதில் முயற்சி செய்யுங்கள்.”

சொந்த பயன்பாட்டுக்கான கார்... வாடகைக்கு விடலாமா?

நான் தற்போது பணியாற்றும் நிறுவனத்தில் மாதச் சம்பளமாக 32,000 ரூபாயைக் கையில் பணமாகத்தான் தருகிறார்கள். வருமான வரி கட்டுவது எப்படி?

கிருஷ்ணமூர்த்தி, வந்தவாசி

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

“உங்களுடைய வருமானம் குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட சம்பளம் என்பதை நிரூபிக்க, நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் அடையாள அட்டை அல்லது சம்பளச் சான்றிதழ் அல்லது பணி நியமன ஆணை ஆகியவற்றில் ஏதேனுமொன்றை ஆதாரமாகக் காட்ட வேண்டியது அவசியம். உங்களுடைய மாதச் சம்பளத்தை வைத்துக் கணக்கிட்டால், ஆண்டு வருமானம் ரூ.3,84,000 வருகிறது. இதிலிருந்து ரூ.40,000 வரிக் கழிவாகப் போய்விடும். மேலும், லைஃப் இன்ஷூரன்ஸ், கல்விக் கட்டணம் வேறு ஏதேனும் செலவுகள் இருந்தால் வருமான வரிச் சட்டம் 80சி-யின்படி வரிக் கழிவுக்குப் பயன்படுத்தலாம். மெடிக்ளெய்ம் பாலிசி இருந்தால் வருமான வரிச் சட்டம் 80டி-யின்படி வரிக்கழிவு செய்யலாம். வரிக் கழிவுக்குப்பின் ரூ.2,50,000-க்கு அதிகமாக இருந்தால் மட்டும் அதற்கு வரி கட்ட வேண்டியிருக்கும்.”

சொந்த பயன்பாட்டுக்கான கார்... வாடகைக்கு விடலாமா?

வீடு கட்டுவதற்கு ஆற்று மணலுக்குப் பதிலாக மலேசியா விலிருந்து இறக்குமதியான மணலை வாங்கிப் பயன்படுத்தலாமா என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.

செல்வராஜ், திருச்சி

ஆர்.குமார், இயக்குநர், நவீன் ஹவுஸிங் & பிராப்பர்ட்டீஸ் பி. லிட்

“சென்னை எண்ணூர் துறைமுகத்தில் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஆற்று மணல் விற்பனைக்கான முன்பதிவு நடக்கிறது. இந்த மணலை www.tnsand.gov.in இணையதளத்திலும், கைபேசி செயலி மூலமாகவும் ஆன்லைனில் கட்டணம் செலுத்திப் பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக,  12,000 யூனிட் மணல் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது. ஆகவே, முதலில் பதிவு செய்பவர் களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த மணலின் ஒரு யூனிட் விலை ரூ.10,350 என நிர்ணயம் செய்து உள்ளார்கள். இது, உள்ளூர் விலையைவிட அதிகம். அதிக விலை கொடுத்து வாங்கலாமா என முடிவெடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.”

சொந்த பயன்பாட்டுக்கான கார்... வாடகைக்கு விடலாமா?

நானும், என் மனைவியும் இணைந்து வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கியுள்ளோம். வீட்டுக் கடனுக்கான மாதத் தவணைக் கான வட்டியை வரிக் கழிவுக்கு 50% - 50% என்ற விகிதத்தில் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இந்த விகிதத்தை எனது சம்பளத்தில் 70%, என் மனைவியின் சம்பளத்தில் 30% என்ற அளவீட்டில் கணக்கில் காட்ட முடியுமா?

தமிழரசன், மதுரை

எஸ்.பாலாஜி, சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

“ஒரு சொத்தை இருவர் இணைந்து வாங்கும்போது, எந்த விகிதாசாரம் குறிப்பிட்டிருக்கிறார்களோ, அதே விகிதத்தில்தான் வருமான வரிக் கழிவும் இருக்கும். எந்த விகிதமும் குறிப்பிடப்படாவிட்டால் தானாகவே 50% - 50% என்று கணக்கிடப்பட்டுவிடும். இங்கே 50%-50% என்று குறிப்பிடப் பட்டு இருப்பதால், வருமான வரிக் கழிவுக்கு மட்டும் 70% - 30% என்ற விகிதத்தைக் காட்ட முடியாது. அப்படிக் காட்டவும் கூடாது.”

என் வயது 26. பிறவியிலேயே இளம்பிள்ளை வாதத்தால் கால் ஊனமான என்னால் நடக்க முடியும். ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க முடியுமா?

வடிவேல், சேலம்

பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்

“ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கலாம். ஆனால், ஏற்கெனவே இருக்கிற உடல்நலக்குறைவுக்கான சிகிச்சைக்கு மருத்துவக் காப்பீட்டைப் பயன்படுத்த முடியாது.”

சொந்த பயன்பாட்டுக்கான கார்... வாடகைக்கு விடலாமா?

நான் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். நான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். இதற்கு என்ன நடைமுறை என்பதைச் சொல்லவும்.

கார்த்திகேயன், காரைக்குடி

ஸ்ரீனிவாசன், நிதி ஆலோசகர், மணிகேர்

“மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கான செயல்முறை எளிது. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தொடர்ச்சியாக முதலீடு செய்வதற்கு எஸ்.ஐ.பி (systematic investment plan) என்று பெயர். நீங்கள் பான் கார்டு வசதி இல்லாமலேயே முதலீடு செய்வதாக இருந்தால், மைக்ரோ எஸ்.ஐ.பி முறையைப் பயன்படுத்தலாம். குறைந்தபட்சம் 500, 1,000 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம். உங்களுடைய பான் கார்டு எண், புகைப்படம், முகவரிச் சான்று உள்ளிட்டவற்றை வழங்கி  கே.ஒய்.சி-க்கு (KYC) விண்ணப்பித்து, அதன்பிறகு முதலீட்டைத் தொடங்கலாம்.

முதலீட்டைத் தொடங்க, உங்கள் பகுதியிலுள்ள நிதி ஆலோசகரையோ, அல்லது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கிளையையோ அணுகலாம். முதன்முறை முதலீடு செய்யும்போது மல்டிகேப் வகை ஃபண்டைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்கள். அதன்பின்னர் மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் குறித்து நன்கு தெரிந்துகொண்டு,  முதலீட்டை விரிவுபடுத்தலாம்.”

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

சொந்த பயன்பாட்டுக்கான கார்... வாடகைக்கு விடலாமா?

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-2.
nav@vikatan.com.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு