Published:Updated:

ஏமாற்றிய ரியல் எஸ்டேட் நிறுவனம்... விளம்பரத் தூதராக நடித்த கம்பீர்... அதிரடி காட்டிய நீதிமன்றம்

ஏமாற்றிய ரியல் எஸ்டேட் நிறுவனம்... விளம்பரத் தூதராக நடித்த கம்பீர்... அதிரடி காட்டிய நீதிமன்றம்
ஏமாற்றிய ரியல் எஸ்டேட் நிறுவனம்... விளம்பரத் தூதராக நடித்த கம்பீர்... அதிரடி காட்டிய நீதிமன்றம்

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.

இந்திய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கவுதம் கம்பீர் டெஸ்ட் - ஒருநாள் - டி20 என்று, எல்லா வகைப் போட்டிகளிலும் எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். கடந்த சில வருடங்களாக அவர் சரியான ஃபார்மில் இல்லாததால் பல முறை இந்திய அணியில் இடம்பெறமுடியாமல் திணறி வந்தார். இதையடுத்து, இந்த மாத தொடக்கத்தில், தான் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார். 

இந்த நிலையில், தற்போது அவருக்கு மற்றொரு சோதனையும் நிகழ்ந்துள்ளது. 2011-ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனம் உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தின் இந்திராபுரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. இதற்கு கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் விளம்பர தூதராக செயல்பட்டார். 17 பேர், வீடுகள் வாங்குவதற்காக 1.98 கோடி ரூபாய் அந்த நிறுவனத்திடம் அளித்துள்ளனர். பணம் அளித்து சில வருடங்கள் கடந்தும் வீடு கட்டுவதற்கான எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை. இதனால் அந்த நிறுவனத்தின் மீதும் விளம்பரத் தூதராக இருந்த கவுதம் கம்பீர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

இது தொடர்பான விசாரணையில் கம்பீர் நேரில் ஆஜராக வேண்டும் எனப் பலமுறை நீதிமன்றம் வலியுறுத்தியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக கம்பீருக்கு ரூ.10,000 அபராதத்துடன் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். மேலும், அந்த மாநிலத்தில் உள்ள ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமும் அந்தத் தனியார் நிறுவனம் மோசடி செய்துள்ளதாக அறிவித்துள்ளது.