Published:Updated:

தித்திக்கும் தீபாவளி!

தித்திக்கும் தீபாவளி!
பிரீமியம் ஸ்டோரி
தித்திக்கும் தீபாவளி!

தித்திக்கும் தீபாவளி!

தித்திக்கும் தீபாவளி!

தித்திக்கும் தீபாவளி!

Published:Updated:
தித்திக்கும் தீபாவளி!
பிரீமியம் ஸ்டோரி
தித்திக்கும் தீபாவளி!

நான்கு நாள் கொண்டாட்டம்!

ட மாநிலங்களில் தீபாவளிப் பண்டிகையை நான்கு நாள்கள் கொண்டாடுவார்கள். முதல் நாளான சதுர்த்தசி, நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நாள்.  

தித்திக்கும் தீபாவளி!

இரண்டாம் நாளான அமாவாசை தினத்தன்று லட்சுமி பூஜை செய்வார்கள். அன்று லட்சுமிதேவி பக்தர்களின் இல்லம் தேடி வந்து, அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுவாள் என்பது ஐதீகம்.

மூன்றாவது நாள் சுத்த பாட்டிமையாகும். இதைப் `பலி பாட்டிமை’ என்றும் சொல்வர். இது, மகாவிஷ்ணுவின் திருவருளால் பலிச் சக்ரவர்த்தி பாதாள லோகத்திலிருந்து வெளிப்பட்டு, பூலோகத்தை ஆளத் தொடங்கிய நாளாகும்.

நான்காவது நாள் `யம துவிதியை' எனப்படும். அன்று பெண்கள் தங்கள் சகோதரர்களை தமது வீட்டுக்கு அழைத்து உபசரிப்பார்கள்.

- மகாதேவன், திருநெல்வேலி-2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புத்தாடை அணியும்போது...

‘தீப தேவி மகா சக்தீ சுபம் பவது மே சதா
ஓம் நமோ நாராயணாய வாசுதேவாய

ஓம் நமசிவாய’ இந்த ஸ்லோகத்தை, தீபாவளியன்று புத்தாடை அணியும்போது மூன்று முறை சொல்லி வழிபட வேண்டும். இதனால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். அதேபோல் தீபம் ஏற்றும்போது...

ஸுவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரீ
ஸுதான்ய வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரீ
கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரீ ’’


- இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுவதால், வீட்டில் பொன்பொருள் பெருகும், தான்யங்கள் விருத்தியாகும், சர்வமங்கலங்களும் உண்டகும்.

- ராஜலக்ஷ்மி, சென்னை-16

தீபாவளியும் திருக்கோயில்களும்!

தீ
பாவளி தினத்தன்று விசேஷ பூஜை ஆராதனைகள் நடைபெறுவதற்காக ஆலயங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்ட தகவலைத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் பல உள்ளன. குடந்தை சாரங்கபாணி ஆலயத்திலுள்ள ஒரு கல்வெட்டு. தீபாவளியன்று பெருமாளுக்கு விசேஷ பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றதாகத் தெரிவிக்கிறது. காளஹஸ்தி ஆலயத்திலுள்ள கல்வெட்டு ஒன்றில், தீபாவளித் திருநாளில் இறைவனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற மானியம் வழங்கப்பட்டதாகச் செய்திகள் காணப்படுகின்றன.

- சரஸ்வதி, திருச்சி-21

தெய்வ கடாட்சம்!

தீ
பாவளிக்குப் பயன்படுத்தும் பொருள் ஒவ்வொன்றிலும் தெய்வத்தின் கடாட்சம் நிறைந்திருப்பதாகச் சொல்கிறது சாஸ்திரம். எண்ணெய் - லட்சுமி. சிகைக்காய்- சரஸ்வதி. சந்தனம்- பூமா தேவி. குங்குமம்- கௌரி. மலர்கள்- மோகினி, தண்ணீர்- கங்கை. இனிப்பு - அமிர்தம். தீபம்- பரமாத்மா. நெருப்புப்பொரி- ஜீவாத்மா. புத்தாடை- மகாவிஷ்ணு. இனிப்பு மருந்து- தன்வந்திரி.

- வி.சீனிவாசன், திருச்சி-13

வீடு தேடி வருவாள் மகாலட்சுமி!

ஞ்சாப் மாநிலத்தில், சீதையை சிறைப்படுத்திய ராவணனை அழித்து, ராமர் அயோத்திக்கு வெற்றியுடன் திரும்பிய நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று மாலையில் பூஜை நடைபெறும். லட்சுமிதேவி படத்தின் முன் உலர்ந்த பழங்கள், வீட்டில் பரம்பரை பரம்பரையாக இருந்து வரும் நகைகள், பாத்திரங்கள் ஆகியவற்றை வைத்து விளக்கேற்றுவார்கள். படம் இருக்கும் அறையில் இரவு முழுவதும் ஒரு விளக்கு எரிய விடப்படும். இந்த ஒளியைக் கண்டு லட்சுமிதேவி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை.

- எஸ்.பவித்ரா,காரைக்குடி

தீபங்கள் எதற்கு?

தீ
பாவளி என்றால், தீப+அவளி அதாவது `தீபங்களின் வரிசை’ என்று பொருள். வடமாநிலத்தவர், தீபாவளியையொட்டி தங்களின் இல்லங்களில் தீபங்களை ஏற்றிவைத்து வழிபடுவார்கள். தங்கள் வீட்டுக்கு வருகை தரும் திருமகளை வரவேற்று மகிழ்விக்கும் பொருட்டு, தீபங்கள் ஏற்றிவைப்பார்களாம். வங்காளிகள், நந்தவிஜயன் என்ற அசுரனைக் காளி வதைத்த திருநாளாகக் கருதி, தீபாவளியன்று தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுகிறார்கள்.

- ராதா, திருச்சி-21