எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு மெகா சேல் ஆஃபரை வழக்கம்போல வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றன ஃப்ளிப்கார்ட்டும், அமேசானும். இந்த மெகா சேல் ஆஃபரில் நீங்கள் எவ்வளவு ரூபாய்க்குப் பொருள்களை வாங்கினீர்கள் என்று நாணயம் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு கேள்வி கேட்டு சர்வே செய்தோம். இந்தக் கேள்விக்கு எந்தப் பதிலை அதிகம் பேர் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று பார்ப்போமா?

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 43% பேர், 1,000 ரூபாய்க்குக்கீழே ஆன்லைனில் பொருள்களை வாங்கியதாகச் சொல்லி யிருக்கிறார்கள். இவர்களில் பலர், முதல்முதலாக ஆன்லைன்மூலம் பொருள்களை வாங்கியவர்களாக இருக்கலாம். எனவே, குறைந்த அளவு பணத்தில் தங்களுக்குத் தேவையான பொருள்களை மட்டும் வாங்கிப் பார்க்க நினைத்திருக்கலாம். அல்லது, அதிக மதிப்பிலான பொருள்களை நேரடியாக வாங்கிவிட்டு, குறைந்த மதிப்பில் உள்ள பொருள்களை மட்டும் ஆன்லைனில் வாங்கியிருக்கலாம்.

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 28% பேர், ரூ.10,000 ரூபாய்க்கும் அதிகமாக வாங்கியதாகச் சொல்லியிருக்கிறார்கள். செல்போன், எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை இவர்கள் வாங்கி யிருக்க வாய்ப்புண்டு. 10,000 ரூபாய்க்குமேல் என்பது கணிசமான தொகை. ஏறக்குறைய 25% பேருக்குமேல் 10,000 ரூபாய்க்குமேல் வாங்கி யிருக்கிறார்கள் எனில், குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான அதிக மதிப்பிலான பொருள்களை ஆன்லைனில் வாங்கத் தொடங்கி யிருக்கிறார்கள் என அர்த்தம்.

இதுமட்டுமல்ல, 12% பேர் 5,000 ரூபாய்க்குமேல் பொருள்களை வாங்கியிருப்ப தாகவும், 17% பேர் ரூ.1,001- 5,000- ரூபாய் மதிப்பிலான பொருள்களை வாங்கியிருப்ப தாகவும் சொல்லியிருக் கிறார்கள்.

ஆக, 1,000 ரூபாய்க்குக் கீழ் பொருள்களை வாங்கியவர் களைவிட, ரூ.1,001 முதல் 10,000 ரூபாய்க்குமேல் பொருள்களை வாங்கியவர் களே அதிகமாக இருக்கி றார்கள். ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்கும் போக்கு இனிவரும் காலத்தில் அதிகரிக்கும் என்றேபடுகிறது.

இந்த மெகா சேல் ஆஃபரில் எந்தப் பொருளை யும் வாங்காதவர்கள் பல கோடிபேர் இருக்கின்றனர். அவர்களும் அடுத்துவரும் ஆண்டுகளில் ஆன்லைனில் பொருள்களை வாங்கத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்!

- ஏ.ஆர்.கே