Published:Updated:

``விரைவில் 20 அடியில் தமிழன்னைக்கு சிலை; 100 அடி சாத்தியமில்லை!” - அமைச்சர்  மாஃபா  பாண்டியராஜன்

``விரைவில் 20 அடியில் தமிழன்னைக்கு சிலை; 100 அடி சாத்தியமில்லை!” - அமைச்சர்  மாஃபா  பாண்டியராஜன்
``விரைவில் 20 அடியில் தமிழன்னைக்கு சிலை; 100 அடி சாத்தியமில்லை!” - அமைச்சர்  மாஃபா  பாண்டியராஜன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவான தமிழன்னைக்கு 100 அடி சிலை வைக்கும் திட்டத்தில் சிக்கல் உள்ளதாக அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும், 20 அடிக்கு வேண்டுமானால் சிலை வைக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

மதுரை உலகத் தமிழ் சங்க வளாகத்தில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பாக மாவட்ட அரசு இசைப்பள்ளிகளின் கலை நாள் விழா நடைபெற்றது. இதில் தமிழக தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், ``சிலைக் கடத்தல் என்பது பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. இது காங்கிரஸ் காலத்திலிருந்தே உள்ளது. ஆனால், அம்மாவின் வழியில் ஆட்சியை நடத்திவரும் எடப்பாடி அரசு சிலைகளை மீட்டெடுத்து வருகிறது. பாதுகாக்கவேண்டிய பொக்கிஷ சிலைகளை மீட்க வேண்டும் என்பது ஒருத்தரால் மட்டுமே இயலாது. அது கூட்டு முயற்சியே. அனைவரும் இதில் விழிப்பு உணர்வோடு இருக்கும்போதுதான் சாத்தியமாகும்.

தி.மு.க வைக் காட்டிலும் சிறுபான்மையினருக்கு அ.தி.மு.க மட்டுமே அதிகளவு முன்னுரிமை கொடுத்துச் சலுகைகள்  செய்துள்ளது. மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் 100 அடி உயரத்தில் தமிழன்னை சிலை நிறுவப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், இப்போது அந்த உயரத்தில் சிலை அமைப்பது சாத்தியமில்லை. எனவே, 100 அடி தமிழன்னை சிலை அமைப்பதில் சிக்கல் உள்ளது. அதற்குப் பதிலாக மதுரையில் 20 அடி தமிழன்னை சிலை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது” என்று தெரிவித்தார்.