கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

“மோட்டோ ஜிபி-க்கு வருவேன்னு சொல்லு!” - ரேஸ் ‘கபாலி’ ரஜினி

“மோட்டோ ஜிபி-க்கு வருவேன்னு சொல்லு!” - ரேஸ் ‘கபாலி’ ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
News
“மோட்டோ ஜிபி-க்கு வருவேன்னு சொல்லு!” - ரேஸ் ‘கபாலி’ ரஜினி

சாதனை - ரேஸ்

லேசிய மண்ணில் நம் தேசியகீதத்தை அடிக்கடி ஒலிக்கவிட்டு வருகிறார் ரஜினி கிருஷ்ணன். ஆம், லேட்டஸ்ட்டாக மலேசியாவில் நடந்த மலேசியன் சூப்பர் பைக் ரேஸில், சாம்பியன்ஷிப் ரவுண்டில் 3-வது போடியம் ஏறிவிட்டு வந்திருக்கிறார் ரஜினி.

“மோட்டோ ஜிபி-க்கு வருவேன்னு சொல்லு!” - ரேஸ் ‘கபாலி’ ரஜினி

சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால், ரேஸுக்கு ரஜினி கிருஷ்ணன். மோ.விகடனில் மூன்று முறை சிறந்த ரேஸர் விருது, ஒன்பது தடவை நேஷனல் சாம்பியன்ஷிப் போடியம், இந்தியன் சாம்பியன் மட்டுமல்ல, 600சிசி பிரிவின் கத்தார் சாம்பியன்ஷிப், 2015 மலேசிய சாம்பியன்ஷிப் என வெளிநாட்டு சாம்பியன்ஷிப்களையும் தட்டிய தமிழன், தமிழ்நாட்டில் ரஜினி மட்டும்தான்.

நேஷனல் சாம்பியன்ஷிப்பில் ஓட்டுவதே கஷ்டம். இந்நிலையில் வெளிநாடுகளில் நடக்கும் சாம்பியன்ஷிப் ரேஸ்களில் கலந்துகொள்வதை நினைத்தே பார்க்க முடியாது. இதில் போடியம் ஏறுவதெல்லாம் அதையும் தாண்டி... வேற லெவல். ஒவ்வொரு தடவையும் சாம்பியன்ஷிப் நடக்கும்போதும், ரஜினியின் வரவை எதிர்பார்க்கிறது ரேஸ் உலகம். பொதுவாக, ரேஸர்களுக்கு ஒரு விநாடி என்பதே சில நேரம் வில்லனாகிவிடும். மைக்ரோ செகண்ட் வித்தியாசத்தில் சாம்பியன்ஷிப் கோப்பையைத் தவறவிட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்த முறை ரஜினி மலேசியன் சாம்பியன்ஷிப்பைத் தவறவிட்டது, விநாடியால் அல்ல; பணத்தால். ஆம், இரண்டு லட்சம் ரூபாய் பற்றாக்குறையால், மலேசியன் சாம்பியன்ஷிப்பைத் தவறவிட்டிருக்கிறார்.

“மோட்டோ ஜிபி-க்கு வருவேன்னு சொல்லு!” - ரேஸ் ‘கபாலி’ ரஜினி

மலேசியன் சூப்பர் பைக் ரேஸ் என்பது, 5 ரவுண்டுகளாக நடக்கும் ரேஸ். ஒவ்வொரு ரவுண்டிலும் நம்பர் தட்டினால்தான், ஃபைனலில் போடியம் ஏற முடியும். இதுமட்டுமல்லாமல், இங்கே சாதாரணமான ரைடர்கள் இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு ரேஸரும் 4 முதல் 5 வயதிலிருந்தே பயிற்சி எடுப்பவர்கள். ரிட்டையர்டு மோட்டோ ஜிபி ரைடர்களும் இதில் பைக் ஓட்டுவார்கள். இதுபோக, ஆஃப்டர் மார்க்கெட்டில் இருந்து வெறித்தனமான ஸ்பேர்களை பைக்கில் ஃபிட் செய்து ஓட்டுவார்கள்.

நமது பைக்குக்கும் அவர்கள் பைக்குக்கும் பெர்ஃபாமென்ஸிலேயே ஏகப்பட்ட வித்தியாசம் தெரியும். இதில் ரேஸை ஃபினிஷ் செய்வது என்பதே பெரிய சவால். ஆனால், இதையெல்லாம் தாண்டி ரஜினி இதில் 3-வது இடம் வந்தது பெருமைதான். காரணம், இந்த 5 ரவுண்டுகளில் ஒரு ரேஸில் ரஜினி கலந்துகொள்ளவே இல்லை. அப்படி இருந்தும் மூன்றாவது இடம் வந்ததற்காக ரேஸ் உலகம், ரஜினியைத் தலையில் தூக்கிக் கொண்டாடுகிறது.

“மோட்டோ ஜிபி-க்கு வருவேன்னு சொல்லு!” - ரேஸ் ‘கபாலி’ ரஜினி

``என்னாச்சு?’’ என்றபோது, சோகமாகவே சொன்னார் ரஜினி. ``எல்லாம் ஸ்பான்சர் பிரச்னைதான். முதல் ரவுண்டு, 4-வது ரவுண்டு பிரச்னை இல்லை. நல்லாவே போச்சு. செகண்ட் ரேஸில் 5-வது ரவுண்டில்தான் பிரச்னை ஆகிடுச்சு. ஸ்லிக் டயர் மாட்டித்தான் ரேஸ் ஓட்டிக்கிட்டிருந்தேன். ஒரு ரவுண்டில் ரேஸ் ஆரம்பிக்கிறதுக்கு 2 நிமிஷத்துக்கு முன்னாடி திடீர்னு மழை வந்துடுச்சு. இந்த ஸ்லிக் டயர், ஈரமான சாலைகளுக்கு எடுபடாது. பிரேக் பிடிச்சா கிரிப் கிடைக்காது. க்ராஷ் ஆகிடும். வெட் டயர் கொண்ட வீலும் ஆல்டர்நேட் இருக்கணும். அதுவும் 45 நிமிஷத்துக்கு முன்னாடியே ஸ்பேர் வீல் மாட்டி தனியா வெச்சிருக்கணும். இதுதான் ரூல். என்கிட்ட வெட் டயர் வாங்க காசு இல்லை. 2 லட்சம் ரூபாய் ஆகிடும். இந்த வீலை வெச்சுக்கிட்டு ரேஸ் ஓட்ட விடலை. ஆனா, எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. கிரிட்லேயே எல்லோரும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பிச் சுட்டாங்க. இப்படித்தான் நான் அந்த ரவுண்டிலிருந்து எலிமினேட் ஆகி, ஒரு பாயின்ட்டில் இத்தாலி ரைடர்கிட்ட மிஸ்ஸாகி சாம்பியன்ஷிப் பறி போயிடுச்சு!’’ - ரஜினி சொன்னபோது எனக்கே கஷ்டமாகத்தான் இருந்தது.

உலகிலேயே முதன் மையானது MotoGP. அடுத்தது WSBK. MSBK போன்ற ரேஸ்கள்தான் இதற்கான முதல் படி. வெளிநாட்டு சூப்பர் பைக் ரேஸ்களில் ஒரு தமிழன் கலந்துகொள்வதே பெருமையான விஷயம். WSBK என்றால்... நிச்சயம் இந்தியாவுக்கே பெருமை. ``ஆனா, நான் மோட்டோ ஜிபி-யிலே கலந்துக்கிட்டு வின் பண்ணுவேன். அதான் என் லட்சியம்! கவர்ன்மென்ட் சப்போர்ட் இருந்தா அல்லது சரியான ஸ்பான்சர் இருந்தா, நிச்சயம் மோட்டோ ஜிபி-யில என் பைக் பறக்கும்!’’ என்றார் ரேஸ் `கபாலி’ ரஜினி.

தமிழ்