கடந்த மூன்றாண்டுகளில் செலுத்தப்பட்ட வருமான வரி மற்றும் நேரடி வரிகள் குறித்த புள்ளி விவரங்களை மத்திய நேரடி வரிகள் ஆணையம் (சி.பி.டி.டி) வெளியிட்டுள்ளது. அதன்படி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்குப்பிறகு 2016-17 மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரித் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 13.5% அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கடுத்த மதிப்பீட்டு ஆண்டில் வரித் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 0.8% மட்டுமே அதிகரித்துள்ளது.

அதேபோல, அனைத்துப் பிரிவைச் சேர்ந்த வருமான வரித் தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை மதிப்பீட்டு ஆண்டு 2015-16-ல் 4.36 கோடியிலிருந்து, 2016-17-ல் 4.95 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மதிப்பீட்டு ஆண்டு் 2017-18-ல் 4.99 கோடியாகக் குறைந்த எண்ணிக்கையில் உயர்வு கண்டுள்ளது.

வருமான வரி கணக்குத் தாக்கல் எண்ணிக்கை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், 2015-16-ம் நிதியாண்டில் ரூ.33.6 லட்சம் கோடியாகவும், 2016-17-ம் நிதியாண்டில் ரூ.38.52 லட்சம் கோடியாகவும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ.43 லட்சம் கோடியாகவும் உள்ளது. இந்த உயர்வானது முறையே 25%, 15% மற்றும் 12% என்ற அளவில் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைதான்.

மேலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, அதுவரை வருமான வரி செலுத்தாதவர் களும், நிதியாண்டில் இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ளவர் களும், தங்கள் கைவசமுள்ள அதிகப்படியான பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். அடிப்படை வருமான வரி 10% வரம்பு, 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதால், ரூ.2.5 லட்சம் வரம்பில் வரிக் கணக்குத் தாக்கல் செய்வது குறைந்துவிட்டதுதான் இதற்குக் காரணம். அதுமட்டுமல்லாமல், அடிப்படை வருமான வரிவரம்புக்குக் குறைவாகச் சம்பாதிப்பவர்கள், வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்வதை, வருமான வரித்துறை ஊக்குவிப்பதில்லை. இந்தக் காரணங்களால் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்வது வெகுவாகக் குறைந்துள்ளது. அதேநேரத்தில், உயர் வருமான வரி வரம்பில் வருபவர்கள் அதிகரித்ததால், அரசுக்கு வருமான வரி வசூல் அதிகரித்துவிட்டது.

இதுகுறித்து ஆடிட்டர் கே.ஆர்.சத்ய நாராயணனிடம் கேட்டோம்.

“பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட நவம்பர் 8, 2016 முதல் அனைத்துத் தரப்பு மக்களும் இரண்டு மாத காலத்திற்கு தங்களின் கையிருப்பாக இருந்த பணத்தையெல்லாம் வங்கிகளில் டெபாசிட் செய்யத் தொடங்கினார்கள். பலரும் புதிதாக வங்கிக் கணக்குத் தொடங்கினார்கள். இதன்மூலம் தங்களிடமிருந்த பழைய நோட்டு களை வங்கிக் கணக்கில் செலுத்தி புதிய நோட்டுகளாகப் பெற்றார்கள்.

அடுத்ததாக, அவர்கள் வாங்கியிருந்த நகைக் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடனை அடைத்தார்கள். பல தவணைகளாகப் பணம் செலுத்தாமல் இழுத்தடித்த பலரும்கூட பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு தாங் களாகவே முன்வந்து கடன்களை அடைத்தார்கள்.

எனவே, இதை அடிப்படையாகக் கொண்டு, நவம்பர் 8, 2016 முதல் டிசம்பர் 31, 2016 வரை வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுக்கு, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யக்கோரி வருமான வரித்துறையிலிருந்து லட்சக்கணக்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டன. அந்த நோட்டீஸ் களுக்குப் பதிலளிக்காதவர்களுக்கும், வரிக் கணக்குத் தாக்கல் செய்யாதவர்களுக்கும் அவர்கள் அதிக தொகை டெபாசிட் செய்தவர் களாக இருந்தால் நேரடியாகவே சென்று ஆய்வு நடத்தவும் வருமான வரித் துறை நடவடிக்கை எடுத்தது. இந்தக் கறாரான நடவடிக்கைகள் காரணமாக பணமதிப்பு நீக்கத்திற்குப்பிறகு வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன் அரசின் வரி வருமானமும் அதிகரித்துள்ளது” என்றார்.

அரசாங்கத்துக்குக் கட்ட வேண்டிய வரியை முறையாகக் கட்டத் தேவையான நடவடிக்கை களை மத்திய அரசாங்கம் தொடர்ந்து கட்டாயம் எடுக்க வேண்டும்.

- தெ.சு.கவுதமன்