கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

ஜாவா என்றால் ஒன்றுகூடிவிடுவோம்!

ஜாவா என்றால் ஒன்றுகூடிவிடுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஜாவா என்றால் ஒன்றுகூடிவிடுவோம்!

சங்கமம் - வின்டேஜ் பைக் கிளப்

ரசியல் கட்சிகளுக்கு இணையாக, பைக் கிளப்புகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகம். மும்பை, புனே, ஒடிசா, பெங்களூர், கேரளா என எல்லா மாநிலங்களில் இருக்கும் பைக் கிளப்புகளும் இணைந்து, ஆண்டுக்கு ஓர் இடத்தைத் தேர்வுசெய்து அங்கு சங்கமிக்கிறார்கள். இந்தமுறை 10-வது ஆண்டாக கும்பகோணத்தில் குழுமி இருந்தது பைக் பிரியர்கள் பட்டாளம். கூடியிருந்த ஜாவா பைக்குகளில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு, குழுவை ஒருங்கிணைக்கும் சென்னை ரோரிங் கிளப்பைச் சேர்ந்த சீனிவாசனிடம் முதலில் பேசினேன்.

ஜாவா என்றால் ஒன்றுகூடிவிடுவோம்!

``நான் சின்னச் சின்ன ரைடுகள் சென்று கொண்டிருந்தபோது, பெங்களூரில் இருக்கும் ஒரு ஜாவா கிளப்பைத் தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடம் பேசும்போது, நாமெல்லாம் ஒன்றாக ஒரு ரைடு போக வேண்டும் என யோசித்து, வின்டேஜ் பைக் பிரியர்கள் உள்ள பல கிளப்களை ஒருங்கிணைத்தோம். இந்தியா முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஓர் இடத்தைத் தேர்வு செய்து அங்கு ஒன்றுகூடுவோம். இதை `சதர்ன் ரைடு’ என்ற பெயரில் நடத்துகிறோம். இந்தமுறை கும்பகோணத்தைத் தேர்ந்தெடுத்துள்ளோம். நாங்கள் பெரிய அளவில் கூடும்போது இந்த பைக்குகளைப் பற்றிய பேச்சுகளும் இதன் நினைவுகளும் பேசப்படும்’’ என்றார்.

ஜாவா என்றால் ஒன்றுகூடிவிடுவோம்!

ஜாவா 250CC, 350CC, யெஸ்டி D250, D350CC போன்ற காலத்தால் அழியா பைக்குகள், பிரதானமாக அணிவகுத்திருந்தன.  ``இதையெல்லாம் பராமரித்து இன்னும் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறீர்களா?’’ என்றவுடன், ``வார விடுமுறையின்போது ரைடு போவோம். தற்போதைய பைக்குகளைக் காட்டிலும் இதில் ரைடு போவது இன்னும் மகிழ்ச்சி. ஜாவாவில் கம்ஃபர்ட் ஒரு பெரிய குறையில்லை. தற்போதுள்ள பைக்குகள் எப்போது வேண்டுமானாலும் கோளாறாகலாம். ஆனால், இந்த பைக்குகள் அப்படியல்ல. இன்ஜின் முதற்கொண்டு எல்லாமே பல ஆண்டுகள் சிறப்பாக இயங்கும். பெரிய பிரச்னை எதுவும் இருந்தால் இதற்கென்றே சில மெக்கானிக்குகளும் இருப்பதால் கவலையில்லை.’’ என்றார் கன்னியாகுமரியைச் சேர்ந்த சிபின்.

பயணங்கள் தொடரட்டும்!

அப்துல்லா.மு - படம்: அ.சி.ஈஸ்வர்