Published:Updated:

சரக்குப்பெயர்ச்சிப் பலன்கள் - 10 - வாசலுக்கே வருவதால் வேலைவாய்ப்பு பெருகுது!

சரக்குப்பெயர்ச்சிப் பலன்கள் - 10 - வாசலுக்கே வருவதால் வேலைவாய்ப்பு பெருகுது!
பிரீமியம் ஸ்டோரி
News
சரக்குப்பெயர்ச்சிப் பலன்கள் - 10 - வாசலுக்கே வருவதால் வேலைவாய்ப்பு பெருகுது!

தொடர் - 10

யிலோ, பஸ்ஸோ எந்தப் போக்குவரத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். `இதுல போனீங்கன்னா சுத்திக்கிட்டுப் போகும், நார்மல் சர்வீஸ். இதுல போனீங்கன்னா வழியில் எங்கேயும் நிக்காது. சீக்கிரமா போயிடலாம். இது எக்ஸ்பிரஸ் வண்டி’ என்று சில ஸ்பெஷல் சர்வீஸ்களைச் காட்டுவார்கள். லாஜிஸ்டிக்ஸிலும் இப்படி ஓர் அம்சம் உண்டு. அதன் பெயர்: எக்ஸ்பிரஸ் அண்ட் லாஸ்ட் மெயில் சர்வீஸ். அதாவது, இடையில் எங்கும் தேங்கி நிற்காமல் கடைசியாகச் சேரவேண்டிய கன்ஸ்யூமருக்கு சரக்கைத் துரிதமாகக் கொண்டு போய்ச் சேர்க்கும் முறை.

சரக்குப்பெயர்ச்சிப் பலன்கள் - 10 - வாசலுக்கே வருவதால் வேலைவாய்ப்பு பெருகுது!

இந்த இதழில் நாம் பார்க்கப்போவது  இந்த சர்வீஸ் பற்றித்தான். இந்த `எக்ஸ்பிரஸ்’ என்ற ஒரு விஷயம் எப்படி உருவானது? இதுவும் வாடிக்கையாளர்களின் அவசரத் தேவைக்காக ஏற்பட்ட ஒரு விஷயம். அதாவது, ஒரு டிராவல் சர்வீஸ் இருக்கிறது. 10 பேரை ஏற்றிக்கொண்டு போனால், ஆளுக்குப் பத்து ரூபாய் வீதம் 100 ரூபாய் வருமானம் வருகிறது என்றால், 5 பேரை ஏற்றிக்கொண்டு போனாலும் அதே வருமானம் வருவதற்கு ஏதேனும் ஐடியா இருக்கிறதா என யோசித்தார்கள். அந்த 5 பேரும் குறிப்பிட்ட நேரத்தைவிட முன்பாகவே அங்கு போய்ச் சேர்ந்தால், அவர்களுக்கும் மகிழ்ச்சி; நமக்கும் வருமானம். அப்படியென்றால், நடுவில் எங்கேயும் நிற்காமல் போய்ச் சேர வேண்டிய கடைசி ஸ்டாப்பில் மட்டும் நின்றால் போதும். நடுவில் நிறுத்தி ஆட்களை ஏற்றாததால் ஏற்படும் இழப்பைச் சரிக்கட்ட சற்றே கூடுதல் கட்டணம் வசூலிப்பார்கள். அதுதான் எக்ஸ்பிரஸ். இப்படித்தான் சதாப்தி போன்ற எக்ஸ்பிரஸ் ரயில் சர்வீஸ் உருவானது. சென்னையில் இருந்து பெங்களூர் போகிறவர்களுக்கு மட்டும்தான் இது லாபம். நடுவில் வாலாஜா, குடியாத்தம், கிருஷ்ணகிரி போன்ற ஊர்களைப் போய்ச் சேர்பவர்களுக்கு இந்த எக்ஸ்பிரஸ் பயன்படாது.

நீங்கள் ஆன்லைனில் பொருள்களை ஆர்டர் செய்தும். ஆர்டர் செய்த பொருள் உங்களை வந்து சேர்வதும்தான் லாஜிஸ்டிக்ஸ் மொழியில் ‘எக்ஸ்பிரஸ் அண்ட் லாஸ்ட் மெயில் கனெக்டிவிட்டி’.  கூரியர் சர்வீஸும் இதே வகையைச் சார்ந்ததுதான்.

நீங்கள் அமேசானில் ஒரு பொருள் ஆர்டர் செய்கிறீர்கள்? அந்தப் பொருள் குறிப்பிட்ட தேதியில் உங்களை வந்தடைகிறது என்றால், இதற்கு எத்தனை பேரின் உழைப்பும் ஒருங்கிணைப்பும் தேவை. எத்தகைய கட்டுக்கோப்பான நெட்வொர்க் வேண்டும்!

சரக்குப்பெயர்ச்சிப் பலன்கள் - 10 - வாசலுக்கே வருவதால் வேலைவாய்ப்பு பெருகுது!

ஒரு விவசாயி, விளைபொருள்களை விளைவிக்கிறார்; அவற்றைச் சுத்தம் செய்து மூட்டை பிடிக்கிறார்; வண்டியில் ஏற்றுகிறார்; சந்தைக்குச் செல்கிறார்; விற்பனை செய்கிறார்; நடுவில் ஏஜென்ட் வரலாம், ஹோல்சேல் பண்ணலாம். அதை டிஸ்ட்ரிபியூட்டர் வாங்கலாம். அது ரீடெய்ல் வியாபாரிகளிடம் கைமாறலாம். இத்தனை படிகளைத் தாண்டி அந்த விளைபொருள் பிறகு சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கிறது. அந்தப் பொருள் மளிகைக்கடைகளில் விற்பனையாகிறது.  இது பழைய நடைமுறை. பல பேரின் கைமாறுவதால், இதில் ஏகப்பட்ட விலை வித்தியாசம் வரலாம்.

இப்போதைய நடைமுறை என்னவென்றால், நடுவில் உள்ள எல்லாப் பொறுப்புகளையும் இவர்களே ஏற்றுச் செய்கிறார்கள். இதனால் நடுவில் இடைத் தரகர்கள் இல்லை. நேரமும் குறைகிறது. உதாரணத்துக்கு, ஒரு செல்போன் வாங்க விரும்புகிறீர்கள். சாம்சங், நோக்கியா, ஹானர், ரெட்மீ என ஏகப்பட்ட பிராண்டுகள் இருக்கின்றன. இதில் எந்த மாடல் வேண்டும் எனக் குறிப்பிட்டால், அந்த உற்பத்தியாளர் களிடமோ, டீலர்களிடமோ நேரடியாகச் சென்று பொருள்களை வாங்கி, கடைசியாக நம் கையில் சேர்ப்பதுதான் எக்ஸ்பிரஸ் அண்ட் லாஸ்ட் மெயில் கனெக்டிவிட்டி.

இந்த லாஸ்ட் மெயில் கனெக்டிவிட்டிதான், லாஜிஸ்டிக்ஸுக்கே பெரிய ஆதாரம். இப்போது இருக்கும் ஸ்விகி, ஊபர் போன்ற இணையதளங்கள் இந்த லாஸ்ட் மெயில் கனெக்டிவிட்டியால் தான் பயனடைந்து கொண்டிருக்கின்றன. பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகுகின்றன. ஆரம்பத்தில் உணவுப்பொருள்களைக் கடைக்குத் தேடிச் சென்று வாங்கும் நடைமுறையில் கடை ஊழியர்களுக்கும் வியாபாரிகளுக்கும் மட்டும்தான் பயன். ஆனால் ஸ்விகி, ஊபர் போன்ற ஃபுட் ஆப்ஸ் வருகையினால் பல இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள். உணவகங்களுக்கும் வியாபாரம் அதிகமாகிறது. அதனால் உணவகங்களுக்குத் தேவையான தானியங்கள், காய்கறிகள் துவங்கி பல பொருட்களின் வியாபாரம் பெருகுகிறது. இதுதான் ‘லாஸ்ட் மெயில் கனெக்டிவிட்டி’ செய்யக்கூடிய மாயாஜாலம்.

- சரக்கு பெயரும்

தொகுப்பு: தமிழ்