Published:Updated:

பிப்ரவரி 2019-ல் மஹிந்திராவின் ட்ரீட்... XUV 3OO காம்பேக்ட் எஸ்யூவி!

பிப்ரவரி 2019-ல் மஹிந்திராவின் ட்ரீட்... XUV 3OO காம்பேக்ட் எஸ்யூவி!
பிப்ரவரி 2019-ல் மஹிந்திராவின் ட்ரீட்... XUV 3OO காம்பேக்ட் எஸ்யூவி!

XUV 5OO காரைப்போலவே இதுவும் சிறுத்தையை அடிப்படையாகக் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் டாப் எண்ட் வேரியன்ட்டும் W8தான்!

S201 எனும் குறியிட்டுப் பெயரில், மஹிந்திரா ஒரு காம்பேக்ட் எஸ்யூவி-யை டெஸ்ட் செய்துவந்தது தெரியும். தற்போது அதற்கு `XUV3OO' எனப் பெயர் சூட்டியிருக்கும் அந்த நிறுவனம், விட்டாரா பிரெஸ்ஸா - நெக்ஸான் - எக்கோஸ்போர்ட் - க்ரெட்டா - எஸ்-க்ராஸ் - கிக்ஸ் - கேப்ச்சர் ஆகியவற்றுக்குப் போட்டியாக இந்த காம்பேக்ட் எஸ்யூவி-யை பொசிஷன் செய்திருக்கிறது. உலகச் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் ஸாங்யாங் டிவோலி எஸ்யூவி தயாரிக்கப்படும் அதே x100 பிளாட்ஃபார்மில் தயாராகப்போகும் XUV3OO, பயணிகள் பாதுகாப்பில் சிறந்து விளங்கலாம். 50-க்கும் அதிகமான நாடுகளில் விற்பனை செய்யப்படும் டிவோலி, இதுவரை 2.6 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் விற்பனையாகியுள்ளன. அதே வெற்றி இந்தியாவிலும் தொடரலாம். 

இந்நிலையில், நாம் ஏற்கெனவே பலமுறை ஸ்பை படங்களில் பார்த்த  XUV3OO-ன் அதிகாரபூர்வமான படங்களை வெளியிட்டுள்ளது மஹிந்திரா. XUV5OO காரைப்போலவே இதுவும் சிறுத்தையை அடிப்படையாகக்கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் டாப் எண்ட் வேரியன்ட்டும் W8தான்! இதன் வெளிப்புறத்தில் HID புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், LED DRL, LED டெயில் லைட், 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில், ரூஃப் மவுன்டட் ஸ்பாய்லர், ஃப்ளோட்டிங் ரூஃப், ரியர் வைப்பர் வித் Defogger, இண்டிகேட்டர்களுடன்கூடிய மிரர்கள், முன்பக்க & பின்பக்கப் பனிவிளக்குகள், Diffuser உடனான முன்பக்க & பின்பக்க பம்பர்கள், க்ரோம் க்ரில், கறுப்பு நிற பில்லர்கள், சன்ரூஃப், 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக், பார்க்கிங் சென்சார் எனக் கலக்குகிறது XUV3OO.

டூயல் டோன் கேபினைப் பொறுத்தவரை டூயல் ஸோன் ஆட்டோமேட்டிக் ஏசி, சில்வர் & பியானோ பிளாக் ஃப்னிஷ், எலெக்ட்ரிக் அட்ஜஸ்டபிள் மிரர்கள், MID உடனான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பலவித கன்ட்ரோல்களுடன்கூடிய ஸ்டீயரிங் வீல், 7 காற்றுப்பைகள், 8 இன்ச் டச் ஸ்க்ரீன், லெதர் சீட்கள், ABS, ESP, க்ரூஸ் கன்ட்ரோல் என இந்த காம்பேக்ட் எஸ்யூவி-யில் வசதிகளை வாரி இரைத்திருக்கிறது மஹிந்திரா. மேலும், பின்பக்க சீட்டில் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் இருப்பதுடன், 3 ஹெட்ரெஸ்ட்களையும் அட்ஜஸ்ட் செய்யலாம். நாசிக்கில் அமைந்திருக்கும் மஹிந்திராவின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது XUV 3OO. 2015 KNCAP-ல் பங்கேற்ற டிவோலி, அதிகமான கிரேடு - 1 சேஃப்ட்டி ரேட்டிங்கைப் பெற்றது ப்ளஸ். S210 எனும் இதன் EV வெர்ஷன், 2020-ம் ஆண்டில் வெளிவரலாம். 

XUV 3OO-ல் மஹிந்திராவின் புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அறிமுகப்படுத்தப்படும். மேலும் மராத்ஸோவில் இருக்கும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினும் வழங்கப்படலாம். இரண்டு BS-IV இன்ஜின்களுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் லேட்டாகவே வரும். மஹிந்திராவின் World of SUVs டீலர்களில் அதிகாரபூர்வமற்ற புக்கிங் (11 ஆயிரம் ரூபாய்) தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன. பிப்ரவரி 15, 2019 அன்று அறிமுகமாக உள்ள XUV 3OO காம்பேக்ட் எஸ்யூவியின் விலை, உத்தேசமாக 7 - 12 லட்ச ரூபாய் வரை இருக்கலாம். இந்தியச் சாலைகளுக்கு ஏற்றபடி இதன் சஸ்பென்ஷன் செட்-அப், கிரவுண்ட் க்ளியரன்ஸ் அமைந்திருக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு