சூப்பர் ஹீரோஸ் என்றால் ஸ்பைடர் மேன், பேட் மேன், சூப்பர் மேன், வொண்டர் வுமன் போன்ற கற்பனை நாயக / நாயகிகளைப் பற்றியதல்ல. இந்த சூப்பர் ஹீரோஸ் நம்முடன் வாழ்பவர்கள். அசாதாரணமான சூழ்நிலைகளைத் தம் அசாத்தியமான நம்பிக்கையால் வென்றவர்கள். கற்பனை செய்யவே இயலாத சாதனைகளைப் படைத்துக் கொண்டிருப்பவர்கள். மனவலிமையால் வலிகளைக் கடந்து வழிகாட்டியாக மாறிய எளிய மனிதர்கள். வாருங்கள் சந்திக்கலாம்.

அப்போது அங்குர் தாமாவுக்கு ஐந்து வயது. வர வர சரியாகப் பார்வை தெரியவில்லை, கண்களில் ஒளி மங்குகிறது என்றெல்லாம் அவனுக்கு சொல்லக்கூட தெரியவில்லை. நாளடைவில், நடப்பதற்கே அதிகம் தடுமாறினான். அப்போதுதான் தாமாவின் பெற்றோர் அவனது குறைபாட்டை உணர்ந்தனர். ஆறு வயதில் அவன் முற்றிலும் பார்வையை இழந்திருந்தான்.

மருத்துவரிடம் காண்பித்தார்கள். அவனது கண்களில் ஒரு சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. பயன் இல்லை. தாமாவின் உலகம் அவனது ஆறு வயதிலேயே இருளில் மூழ்கியது. உத்தரப்பிரதேசத்தில், பாக்பத் என்ற கிராமத்தில்தான் தாமா பிறந்தான். வெளி உலகம் தெரியாத விவசாயக் குடும்பம். அந்த மருத்துவர்தான் விழியில்லா தாமாவுக்கு வழிகாட்டினார். ‘டெல்லி லோதி சாலையில், பார்வையற்றவர்களுக்கென்று சிறப்புப் பள்ளி ஒன்று இருக்கிறது. JPM சீனியர் செகண்டரி ஸ்கூல். அங்கே இவனைச் சேர்த்துவிடுங்கள்.’

அப்படியே செய்தார்கள். அந்தப் பள்ளி, தாமாவின் வாழ்வில் புதிய வாசலைத் திறந்துவிட்டது. தாமாவுக்கு விளையாட்டுகளில் அதிக ஆர்வமிருந்தது. பார்வையற்ற மாணவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினான். தாமா வேகமாக ஓடும் திறன் கொண்டிருந்ததால், மற்ற மாணவர்களுக்கு பைரன்னராக ஓடச் செய்தார்கள். விளையாட்டு அவனது இருளை மறக்கச் செய்தது.

Indian Blind Sports Association, பார்வையற்றவர்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறது என்ற செய்தி தாமாவுக்குத் தெரியவந்தது. வேகமாக ஓடும் தாமா, தடகளப் போட்டிகளில் பயிற்சியெடுக்கலாம் என்று சொன்னார்கள். 2006 முதல் அதற்கான தீவிரப் பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தான்.

2008 இல் தாமா தேசியப் போட்டிகளில் 400மீ, 800மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவுகளில் கலந்து கொண்டார். இருளைக் கிழித்து வாழ்வின் ஒளியைத் தேடி ஓடுவதுபோல உற்சாகத்துடன், உத்வேகத்துடன் ஓடினார். இரண்டிலும் தேசிய அளவில் புதிய சாதனைகள் படைத்து தங்கப்பதக்கம் வென்றார். அதனால், 2009 இல் சர்வதேச அளவில் நடந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றார். அதிலும் இரண்டு பிரிவுகளில் தங்கம் வென்றார்.

அதற்குப் பிறகு, இந்தியா சார்பில் ஊனமுற்றோருக்காக அனுப்பப்படும் தடகள வீரர்கள் பட்டியலில் தாமாவின் பெயர் ஒவ்வொரு முறையும் இடம்பெற்றது. மலேசியாவில் 800மீ, 1500 மீட்டர் பிரிவுகளில் இரண்டு தங்கங்கள் (2012). துபாயில் அதே ஓட்டப் பிரிவுகளில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் (2014). சார்ஜாவில் அதே பிரிவுகளில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் (2014). தொடர்ந்து பதக்க வேட்டையாடினார் தாமா.

2014 இல் தென் கொரியாவில் பாரா ஏசியன் கேம்ஸ் நடைபெற்றது. 1500 மீட்டர் ஓட்டப்பிரிவில் வெண்கலம், 800 மீட்டரில் வெள்ளிப் பதக்கங்கள் தாமாவின் கழுத்தை அலங்கரித்தன. முதன்முறையாக 5000மீ பிரிவில் கலந்துகொண்ட தாமா, அதிலும் வெண்கலம் வென்றார். இதற்கிடையில் பார்வையற்றவர்களுக்கான சர்வதேச கால்பந்துப் போட்டியிலும் கலந்துகொண்ட தாமா, இந்தியா சார்பில் கோல் அடித்தார். ஆம், சர்வதேச அளவில் ஒரு பார்வையற்ற இந்திய வீரர் அடித்த முதல் கோல் அது.

பள்ளிப்படிப்பை நல்ல மதிப்பெண்களுடன் முடித்த தாமாவுக்கு, புகழ்பெற்ற செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இடம் கிடைத்தது. கல்லூரியும் தாமாவின் முயற்சிகளை ஆதாரித்தது. ஆனால், தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று போட்டிகளில் கலந்துகொள்ள பணமின்றித் தடுமாறினார். சத்யபால் சிங் என்ற கோச், தாமாவுக்கு இலவசமாகப் பயிற்சியளிக்க முன்வந்தார். பல போட்டிகளில் கலந்துகொள்ள பண உதவியும் செய்தார்.

ஊனமுற்றோருக்காக நடத்தப்படும் பாராலிம்பிக்ஸில் இந்தியாவின் சார்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்துடன் தாமாவின் பயிற்சிகள் தொடர்ந்தன. பார்வையற்ற வீரருடன் கைடு ரன்னர் ஒருவர் ஓட வேண்டும். சிறு கயிறு ஒன்றை இருவரும் பிடித்தபடி ஓட வேண்டும். ஆனால், ஒருவரை ஒருவர் இழுத்துக்கொண்டு ஓடக்கூடாது. தனியாகவும் ஓடக்கூடாது போன்ற சர்வதேச விதிகள் உண்டு. தாமாவுக்கு கைடு ரன்னராக விபின் என்ற வீரர் கிடைத்தார். 2016-ல் ரியோவில் நடந்த பாராலிம்பிக்ஸ் 1500மீ ஓட்டத்தில் நிச்சயம் தாமா பதக்கம் வெல்வார் என்று இந்தியாவே எதிர்பார்த்தது. ஏனென்றால், அதற்கு முந்தைய சர்வதேசப் போட்டிகளில் தாமாவின் டிராக் சாதனைகள் வலுவாக இருந்தன.

1500மீ ஓட்டத்துக்கான தகுதிச்சுற்று நடைபெற்றது. அப்போது துருக்கி வீரர் விபினைத் தள்ளிவிட்டு ஓடினார். கைடு ரன்னர் கீழே விழுந்துவிட, தாமா செய்வதறியாது அப்படியே நின்றார். பின்னர், விபின் எழுந்து தாமாவை அழைத்துக் கொண்டு ஓடி முடித்தார். யாரோ செய்த தவறால், தாமாவால் ஃபைனலுக்குத் தகுதிபெற முடியவில்லை. மிகப்பெரிய ஏமாற்றம்தான். கனவு கலைந்த வலிதான். இருந்தாலும் தாமா அதைப் பொருட்படுத்தாமல், அடுத்தடுத்த வெற்றி இலக்குகளை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறார். பதக்கங்கள் அவர் கழுத்தில் விழுந்து கொண்டே இருக்கின்றன.

2018 செப்டம்பரில் அர்ஜுனா விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில், குடியரசுத் தலைவர் அங்குர் தாமாவை அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்று அர்ஜுனா விருதை வழங்கினார். அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. அது, இந்தியாவின் பார்வையற்ற முதல் சர்வதேசத் தடகள வீரருக்கு தேசம் செய்த மரியாதை!

- முகில்