Published:Updated:

‘இருக்கும் ரயிலை முதலில் சரி செய்யுங்கள் மோடி ஜி’ - வறுத்தெடுத்த பா.ஜ.க பிரமுகர்

‘இருக்கும் ரயிலை முதலில் சரி செய்யுங்கள் மோடி ஜி’ - வறுத்தெடுத்த பா.ஜ.க பிரமுகர்
‘இருக்கும் ரயிலை முதலில் சரி செய்யுங்கள் மோடி ஜி’ - வறுத்தெடுத்த பா.ஜ.க பிரமுகர்

ரயிலில் தனக்கு நேர்ந்த அசௌகரியம் குறித்து பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க அமைச்சர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகிவருகிறது. 

‘இருக்கும் ரயிலை முதலில் சரி செய்யுங்கள் மோடி ஜி’ - வறுத்தெடுத்த பா.ஜ.க பிரமுகர்

கடந்த 2007-ம் ஆண்டு, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், லக்‌ஷ்மி காந்த் சாவ்லா. இவர், பா.ஜ.க-வின் தேசிய துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். லக்‌ஷ்மி, கடந்த 22-ம் தேதி சரயு - யமுனா ரயிலில்  உள்ள ஏசி 3-ம் வகுப்பில் பயணம்செய்துள்ளார். அன்றையதினம், இவர் சென்ற ரயில் மிகவும்  தாமதமானதாகக் குற்றம் சாட்டியுள்ளார். உடனே, இது தொடர்பாக ரயிலில் இருந்தபடியே வீடியோ ஒன்றைப் பதிவுசெய்து, சமூக வலைதளங்களில் வெளியிட, தற்போது இந்திய அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

‘இருக்கும் ரயிலை முதலில் சரி செய்யுங்கள் மோடி ஜி’ - வறுத்தெடுத்த பா.ஜ.க பிரமுகர்

வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, “இந்த அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் நான் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் முன்வைக்கிறேன். எங்களைப் போன்ற சாமானிய மக்கள் மீதும் சற்று அக்கறைகொள்ளுங்கள். நான் சரயு- யமுனா ரயிலில் பயணம்செய்கிறேன். இது, சுமார் 9 மணி நேரம் காலதாமதமாகச் சென்றுகொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரமாக நாங்கள் ரயிலில்தான் உள்ளோம். தற்போது, வேறு திசையில் மிகவும் தாமதமாக ரயில் சென்றுகொண்டிருக்கிறது. 

ரயில் தாமதமானது குறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை. கடந்த 9 மணி நேரமாக எங்களுக்கு எந்த உணவு ஏற்பாடும் செய்யவில்லை. இந்த ரயிலில் உள்ள இருக்கைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. ஜன்னல் கதவுகள், குடிநீர்க் குழாய்கள் உடைந்துள்ளன.  பொதுமக்கள் காத்திருக்க தங்கும் அறைகள் எதுவும் இல்லை. அவர்கள், நடைபாதையில் கடும் குளிரில் இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். 

‘இருக்கும் ரயிலை முதலில் சரி செய்யுங்கள் மோடி ஜி’ - வறுத்தெடுத்த பா.ஜ.க பிரமுகர்

மணிக்கு 120, 200 கி.மீ. வேகத்தில் ஓடும் புல்லட் ரயில் எல்லாம் மறந்துவிடுங்கள் மோடி ஜி. முதலில் ஓடும் ரயிலைக் கவனியுங்கள். நான் அனுபவித்த ரயில் அசௌகரியங்கள் தொடர்பாக, ரயில்வே உதவி எண்ணுக்குத் தொடர்புகொண்டு புகார் அளித்தேன். அமைச்சருக்கு        இ-மெயிலும் செய்தேன். இருந்தும், எந்தப் பதிலும் இல்லை. ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் இதுபோன்ற ரயில்களில் பயணம் செய்ய வேண்டும். மக்கள் அதிருப்தியில் உள்ளனர் மோடி ஜி. நல்ல நாள்களை யார்தான் அனுபவிக்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக, அது சாமானியன் இல்லை என்பது மட்டும் தெரியும்” என்று கூறியுள்ளார். இவரின் கருத்து, பா.ஜ.க-வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.