Published:Updated:

நவம்பரில் விற்பனை சரிந்த டாப் 10 இருசக்கர வாகனங்கள்!

நவம்பரில் விற்பனை சரிந்த டாப் 10 இருசக்கர வாகனங்கள்!
நவம்பரில் விற்பனை சரிந்த டாப் 10 இருசக்கர வாகனங்கள்!

ந்தியாவில் இருசக்கர வாகனங்கள் விற்பனையின் எண்ணிக்கையானது ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதம் வெளிவந்துள்ள இருசக்கர வாகனங்களின் விற்பனையானது அக்டோபர் மாதத்தைவிட அதிகளவு குறைந்துள்ளது.

அக்டோபர் மாதம் இந்தியாவில் மொத்தம் 20,53,600 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின. ஆனால், நவம்பர் மாதத்தில் வெறும் 16,45,790 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. சுமார் 4,07,810 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. 

டாப் 10 பட்டியலில் எப்போதும் முன்னிலையில் இருக்கும் ஹீரோ ஸ்ப்ளெண்டர் மாடல் அக்டோபரில் 2,68,377 வாகனங்கள் விற்பனையான நிலையில், நவம்பரில் 2,25,536 மட்டுமே விற்பனையாகியுள்ளன. தொடர்ந்து ஹீரோ HF டீலக்ஸ் மாடலில் 31,473 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. அக்டோபரில் ஐந்தாவது இடத்தில் இருந்த ஹீரோ பேஷன் (74,396) மூன்றாவது இடத்திலும், நான்காவது இடத்தில் ஹோண்டா சிபி ஷைன் (70,803), ஐந்தாவது இடத்தில் ஹீரோ கிளாமர் (63,416) உள்ளன. பஜாஜ் பிளாட்டினா 62,555 வாகனங்களை விற்பனை செய்து ஆறாவது இடத்தில் உள்ளது. அக்டோபரில் மூன்றாவது இடத்தில் இருந்த பஜாஜ் சிடி100 56,864 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து 7-வது இடத்துக்கு வந்துள்ளது. இதன் விற்பனையானது -39.30 சதவிகிதம் குறைந்துள்ளது.

பஜாஜ் பல்சர் 53,524 வாகனங்கள் விற்பனை செய்து எட்டாவது இடத்திலும் வாடிக்கையாளர்களை அதிகளவில் கவனம் ஈர்த்த ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350 மாடலில் 7,123 வாகனங்கள் குறைவாக விற்பனை செய்து 9-வது இடத்திலும் உள்ளன. அதேபோல், அக்டோபரில் 10-வது இடத்தில் இருந்த டி.வி.எஸ் அப்பாச்சி இந்த மாதமும் 29,947 வாகனங்களை விற்பனை செய்து அதே இடத்தில் உள்ளது. ஆனால், அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது -27.66 சதவிகித விற்பனையானது குறைந்துள்ளது.

2018-ம் வருடத்திலேயே இதுவரை நவம்பர் மாதத்தில் மட்டும்தான் இருசக்கர வாகனங்களின் விற்பனையானது அதிகளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

நவம்பர் மாதம் விற்பனையான டாப் 10 டூ-வீலர்கள்! 

மாடல் யூனிட்

ஹீரோ ஸ்ப்ளெண்டர் 

2,25,536

ஹீரோ HF டீலக்ஸ்
1,68,839

ஹீரோ பேஷன்

74,396

ஹோண்டா சிபி ஷைன் 70,803

ஹீரோ கிளாமர்

63,416

பஜாஜ் பிளாட்டினா

62,555

பஜாஜ் சிடி100

56,864

பஜாஜ் பல்சர்

53,524

ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350 39,025

டி.வி.எஸ் அப்பாச்சி

29,947