#MeToo, #TimesUp போன்றவற்றின் அலை தற்போது இந்தியாவிலும் தொடங்கியிருக்கிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரையில் பலரும் ஆதாரமாக, டிஜிட்டல் ஸ்க்ரீன்ஷாட்களையே பகிர்ந்து வருகிறார்கள். காலத்திற்குத் தகுந்தவாறு ஆதாரங்கள் மாறுவதைப் போல, இன்றைய டிஜிட்டல் காலத்தில் ஸ்க்ரீன்ஷாட்களுக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால், இவற்றை சட்டம் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளுமா? போலி ஸ்க்ரீன்ஷாட்களை எப்படி சட்டம் கண்டறியும்? சைபர் குற்ற வழக்கறிஞர் சத்திய நாராயணனிடம் கேட்டோம்.

"ஸ்க்ரீன்ஷாட்களை வழக்கில் ஆதாரமாகச் சமர்ப்பிக்க முடியுமா?"

"டிஜிட்டல் ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். ஆனால் இவற்றை தாராளமாக ஆதாரமாகப் பயன்படுத்தலாம்; ஸ்க்ரீன்ஷாட்கள் உட்பட. இந்திய சாட்சிய சட்டம் 1872, ஒரு வழக்கில் டிஜிட்டல் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க அனுமதிக்கிறது. சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு என எதுவாக இருந்தாலும் இது செல்லுபடியாகும். ஸ்க்ரீன்ஷாட்கள் அல்லது ஸ்க்ரீன் ரெக்கார்டிங்குகளை CD-யில் பதிவு செய்து ஆதாரமாக சமர்ப்பிக்கலாம். தேவையிருப்பின் ஆதாரம் எதிலிருந்து பெறப்பட்டதோ அந்தச் சாதனத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். டிஜிட்டல் ஆதாரங்களில் அதன் உண்மைத்தன்மை மிகவும் அவசியமானது. எடுத்துக்காட்டாக ஸ்க்ரீன்ஷாட்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் எதுவுமே எடிட் செய்யப்பட்டிருக்கக்கூடாது. சில பகுதிகளை மறைந்திருப்பது, மாற்றியமைத்திருப்பது என எந்த விதத்திலும் அவை எடிட் செய்யப்படாமல் இருப்பது அவசியம். மேலும் அவற்றின் உண்மைத் தன்மை பற்றிய ஆய்வின் போது இமேஜ் ஃபைலின் EXIF Data முக்கியமானதாகக் கருதப்படும் "

"எந்தப் பிரிவின் கீழ் ஸ்க்ரீன்ஷாட்களை ஆதாரங்களாகச் சமர்ப்பிக்க முடியும், அதனுடன் ஏதாவது சான்றுகளை இணைக்க வேண்டியிருக்குமா?"

"முன்னரே சொன்னது போல ஸ்க்ரீன்ஷாட்களை இமேஜ் ஃபைலாக CD-யில் பதிவு செய்து கொள்வது அவசியம். அவற்றை 1872 இந்திய சாட்சிய சட்டத்தின் பிரிவு 65A-ன் கீழ் இவற்றை ஆதாரமாகப் பயன்படுத்தலாம். இந்தப் பிரிவு மின்னணு தகவல்களை ஆதாரங்களாகச் சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகளைக் கூறுகிறது. மேலும் பிரிவு 65B-ன் படி ஆதாரம் எப்படி பெறப்பட்டது, எதிலிருந்து பெறப்பட்டது என்பது போன்ற தகவல்கள் வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டு ஆதாரத்துடன் இணைக்கப்பட வேண்டும்"

"வழக்குகளுக்கு வேறு எந்த டிஜிட்டல் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க முடியும்?"

"டிஜிட்டல் ஆதாரம் மென்பொருள், வன்பொருள் என எந்த நிலையில் இருந்தாலும் அதைப் பயன்படுத்த முடியும். ஈமெயில், போட்டோஸ், மெசேஜ்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், SMS, ஸ்க்ரீன்ஷாட்டுகள், வாய்ஸ் ரெக்கார்டிங், போன் ரெக்கார்டிங் போன்றவை இதில் அடங்கும். அதே நேரத்தில் தொலைபேசியை இடைமறித்தோ, ஒட்டுக்கேட்டோ பெறப்படும் ஆதாரங்களைப் பயன்படுத்த முடியாது. அதேபோல் ஹேக் செய்யப்பட்ட ஈமெயில் அக்கவுன்ட்களாக இருந்தாலோ சமூகவலைதள கணக்காக இருந்தாலோ அதையும் ஆதாரமாகப் பயன்படுத்த முடியாது"

"டிஜிட்டல் ஆதாரங்களைப் பொறுத்தவரையில் நீதிமன்றத்தின் பார்வை எப்படி இருக்கிறது?"

"தொடக்கத்தில் மொபைல் போன்களில் உள்ள விஷயங்களை ஆதாரமாக எடுத்துக் கொள்வதற்கு நீதிமன்றம் தயக்கம் காட்டி வந்தது. ஆனால் இன்றைக்கு அப்படியில்லை. குற்ற வழக்கில் இவற்றை ஆதாரமாக கணக்கில் எடுத்துக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாகியிருக்கின்றன. கூடவே இதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. எந்த வகை வழக்காக இருந்தாலும் இவற்றை முதன்மை ஆதாரங்களாகச் சமர்ப்பிக்க முடியா து. இதுபோன்ற டிஜிட்டல் ஆதாரங்களை நீதிமன்றம் இரண்டாம் பட்சமாக மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளும். மேலும் இவற்றை அடிப்படையாக வைத்து மட்டுமே நீதிமன்றம் முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே டிஜிட்டல் ஆதாரங்களை இரண்டாம் பட்சமான ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கலாம். அதே நேரத்தில் வழக்கின் நம்பகத் தன்மையை அதிகரிக்கவும் இவற்றைப் பயன்படுத்த முடியும் "

"டிஜிட்டல் ஆதாரங்களுக்குக் காலாவதியாகும் காலம் ஏதாவது இருக்கிறதா?"

"அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. எத்தனை வருடங்கள் கழித்து வேண்டுமானாலும் டிஜிட்டல் ஆதாரங்களைப் பயன்படுத்த முடியும். அதற்குமுன் அவற்றை முறையாகப் பாதுகாத்து வைப்பது அவசியம் "

"ஸ்க்ரீன்ஷாட்களைத் தவறாக பயன்படுத்தினால்...?"

"அதற்கு தண்டனை அளிக்கும் வகையில் தனியாக சட்டப் பிரிவுகள் எதுவும் தற்பொழுது இல்லை. ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 192-ன் படி பொய்யான ஆதாரங்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்புண்டு"