Published:Updated:

எப்படி இருக்கிறது Mi பேண்ட் 3 - #TechTamizhaReview

எப்படி இருக்கிறது Mi பேண்ட் 3 - #TechTamizhaReview
பிரீமியம் ஸ்டோரி
News
எப்படி இருக்கிறது Mi பேண்ட் 3 - #TechTamizhaReview

ம.காசி விஸ்வநாதன்

Mi பேண்ட் 3-ன் முழு ரிவ்யூ இங்கே.

டிஸ்ப்ளே

முந்தைய MI Band 2 மற்றும் MI Band HRX ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பல புதிய வசதிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. முதல் வித்தியாசமாக நம் கண்ணில் படுவது புதிய பெரிய 0.78 இன்ச் டச் ஸ்கிரீன் OLED டிஸ்ப்ளே. சென்ற மாடல்களில் 0.42 இன்ச் சாதாரண OLED டிஸ்ப்ளேயும் ஒரு டச் பட்டனும்தான் இருந்தது. இந்தப் புதிய டச் ஸ்கிரீனில் இடது, வலது பக்கம் ஸ்வைப் செய்வதன் மூலம் ஒரு பகுதியில் இருக்கும் வெவ்வேறு தகவல்களைப் பார்த்துக்கொள்ளமுடிகிறது. கீழே ஸ்வைப் செய்தால் மற்ற பகுதிகளுக்குச் செல்ல

லாம். நல்ல ஒரு வசதிதான் என்றாலும், ஒரு பகுதியில் இருக்கும்போது திரும்பவும் முதல் இடத்துக்கு வந்தால்தான் கீழே ஸ்வைப் செய்யமுடிகிறது. இதை மட்டும் மாற்றியிருந்தால் நேவிகேஷன் இன்னும் எளிமையாக ஸ்மூத்தாக இருந்திருக்கும். ஆனால் இதுவும் பெரிய குறை இல்லை. சிறிய அப்டேட்டில் மாறிவிடலாம். இதைத்தவிர சில நேரங்களில் கடும் வெயிலில் பிரைட்னெஸ் கொஞ்சம் கூடுதலாக இருக்கலாமே என உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அதே நேரம் இரவுநேரத்தில் வெளிச்சத்தைத் தானாகவே குறைத்துக்கொள்ளும்படி செட் செய்துகொள்ள முடியும்.

எப்படி இருக்கிறது Mi பேண்ட் 3 - #TechTamizhaReview

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எப்படி இருக்கிறது Mi பேண்ட் 3 - #TechTamizhaReview

ஹார்ட்ரேட் சென்சார்

MI Band 2-வில் இருந்தே அதே சென்சார்தான். மிக இறுக்கமாக அணிந்தாலோ, மிக லூசாக அணிந்தாலோ தகவல்கள் சரிவர இருக்காது என அவர்களே எச்சரிக்கின்றனர். செக் செய்து பார்த்தால் ஓரளவு துல்லியமாகவே இருக்கிறது. ஆனால் சில நேரங்களில் ஸ்கேன் செய்யமுடியாமல் திருப்பி ட்ரை செய்யச் சொல்வது வெறுப்பு. இருப்பினும் இதிலும் பாஸ் மார்க் பெறுகிறது Band 3. ஆப்பில் செட் செய்தால் தூக்கத்தில் கண்காணிப்பதற்கும் இந்த சென்சாரைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், அப்படிச் செய்தால் சார்ஜ் வேகமாகக் குறைந்துவிடும்.

 புதிய வசதிகள்

எப்போதும் இருக்கும் வசதிகளான, நடக்கும் தூரத்தைக் கண்காணிப்பது, ஓரிடத்திலேயே வெகுநேரம் இருந்தால் எச்சரிப்பது, தூக்கத்தைக் கண்காணிப்பது போன்றவை சென்ற பேண்ட்களில் இருந்தது போலவே நன்றாகச் செயல்படுகின்றன. மேலும் மிகவும் உதவிகரமான ஸ்டாப் வாட்ச் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓடும்போதோ, உடற்பயிற்சி செய்யும்போதோ எளிதாக ஸ்டாப் வாட்ச் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் 3 நாள்களுக்கான வானிலை நிலவரத்தையும் இனி இதிலேயே பார்க்கமுடியும். இதுதவிர உடற்பயிற்சிக்கென்றே தனி மோடு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இது, நேரம், ஹார்ட் ரேட் என எல்லாத்தையும் கண்காணித்து தகவல்களைத் தரும். முந்தைய மாடல்களில் மொபைலுக்கு வரும் நோட்டிஃபிகேஷன்கள், வெறும் ஐகான்களாக மட்டுமே வரும். இதில் வாட்ஸ்அப் போன்றவற்றில் வரும் மெசேஜ்களே மொத்தமாக டிஸ்ப்ளேயில் வந்துவிடும். எமோஜிகள் சப்போர்ட் ஆகாதது மட்டும் ஏமாற்றம். மேலும் மொபைலுக்கு வரும் அழைப்புகளை பேண்ட்டிலிருந்தே நிராகரிக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு பயன்படும் வசதியாக `Find my Phone' கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேண்டுடன் கனெக்ட் ஆகியிருக்கும் மொபைல்களை பக்கத்தில் எங்கேயாவது மறந்து வைத்துவிட்டால் இதன் மூலம் கண்டுபிடிக்கலாம்.

 வாட்டர் ப்ரூஃப்

இந்த Mi band 3, 50 மீட்டர் வரை வாட்டர்ப்ரூஃப் என்கிறது ஷியோமி. சாதாரணமான சூழல்களில் தண்ணீரில் போட்டு செக் செய்ததில் எந்த ஒரு பிரச்னையும் வந்ததாகத் தெரியவில்லை. எனவே தைரியமாக நீச்சல்குளம், அருவி என எங்கும் இதைக் கட்டிக்கொண்டு தைரியமாகச் செல்லலாம். இந்த பட்ஜெட்டில் வாட்டர்ப்ரூஃப்புடன் வருவது நிஜமாகவே பாராட்டவேண்டிய விஷயம்தான்.

எப்படி இருக்கிறது Mi பேண்ட் 3 - #TechTamizhaReview

Mi ஃபிட் ஆப்

ப்ளூடூத் மூலம் கனெக்ட் செய்துவிட்டால் பேண்ட் தகவல்கள் எல்லாம் தானாக Mi ஃபிட் ஆப்பில் சிங்க் ஆகிவிடும். எப்போது வேண்டுமானாலும் அதை நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். பயன்படுத்துவதற்கு ஆப் மிக நன்றாகவே இருக்கிறது.

  பேட்டரி


புதிய வசதிகள் அதிகம் வந்துள்ளதால் முந்தைய பேண்ட் அளவுக்கு பேட்டரி தாக்குப்பிடிக்காது என்றே எதிர்பார்த்தோம். இருப்பினும் 70 mAhயிலிருந்து 110 mAh பேட்டரிக்கு இந்த பேண்ட் அப்டேட் ஆகியுள்ளதால் பிரச்னை இல்லை. 20 நாள்கள் தாக்குப்பிடிக்கும் என்று ஷியோமி தெரிவித்தாலும் அடிக்கடி ஹார்ட் ரேட் பார்ப்பது, எப்போதும் போனுடன் கனெக்ட் செய்து வைத்திருப்பது என்றிருந்தால் குறைவான நாள்களே இதன் பேட்டரி தாக்குப்பிடிக்கும். ஆனாலும் இந்த அதிக பயன்பாட்டுக்குக் கூட குறைந்த பட்சம் ஐந்திலிருந்து 7 நாள்கள் வரை எளிதாக இந்த பேட்டரி தாக்குப்பிடித்துவிடும். கடந்த மாடல்களைப் போன்றே இவர்களின் பேண்ட்களுக்கென்றே தனி சார்ஜர்கள்தாம் கொடுக்கப்பட்டுள்ளன. தவறினால் ஷியோமியிடம்தான் புதிய சார்ஜர் வாங்க வேண்டும்.

  ஸ்ட்ராப்


எப்போதும் போல் இந்த முறையும் ஃபிட்னஸ் ட்ராக்கர் தனியாகவும், ஸ்ட்ராப் தனியாகவும்தான் வருகின்றன. ஆனால் முந்தைய மாடல்கள் போல ஸ்ட்ராப்பில் இருந்து ஃபிட்னஸ் ட்ராக்கரை கழற்றி சார்ஜ் செய்து மீண்டும் ஸ்ட்ராப்புடன் மாட்டுவது அவ்வளவு சுலபமாக இல்லை. ஸ்ட்ராப்பும் கையில் கட்டும்போது எந்த ஒரு அசௌகரியமும் இன்றி நன்றாக இருக்கிறது. வேண்டுமென்றால் பிற வண்ணங்களிலும் ஸ்ட்ராப் வாங்கிக்கொள்ள முடியும்.

  விலை

இத்தனை வசதிகளுடன் வரும் மற்ற ஃபிட்னஸ் பேண்ட்களின் விலை 10,000 ரூபாயைத் தாண்டிவிடும். ஆனால், இதன் விலையோ 1,999 ரூபாய்தான். ஷியோமி பேண்ட்டின் வெற்றிக்கு இதுவே முதல் காரணம்.

  ப்ளஸ்

குறைந்த விலை
ஸ்டாப் வாட்ச், Find my Phone போன்ற புதிய வசதிகள் , நீடித்த பேட்டரி
 வாட்டர்ப்ரூஃப் வசதி, நல்ல ஆப்

 மைனஸ்
ஸ்ட்ராப்பில் இருந்து ஃபிட்னெஸ் ட்ராக்கரை கழட்டி மாட்டுவது முந்தைய மாடல்கள் போல அவ்வளவு சுலபமாக இல்லை.
டச் ஸ்கிரீன் இன்னும் எளிமைப்படுத்தப்பட்டிருக்கலாம்.
  தனிரக சார்ஜர்

எப்படி இருக்கிறது Mi பேண்ட் 3 - #TechTamizhaReview

வசதிகள்:

     0.78 இன்ச் டச் ஸ்கிரீன் OLED டிஸ்ப்ளே
     110 mAh பேட்டரி
     3-axis accelerometer and PPG ஹார்ட் ரேட் சென்சார்
     ப்ளூடூத் 4.2 BLE
     கனெக்ட் செய்யக்கூடிய சாதனங்கள்: 4.4-க்கு மேல் உள்ள ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள், 9.0க்கு மேல் இருக்கும் iOS வெர்ஷன்கள் (ப்ளூடூத் 4.0 இருப்பது அவசியம்)
விலை: 1,999 (அறிமுகச் சலுகை)