Published:Updated:

`2007-08ம் ஆண்டுகளில் பிராண்ட் அம்பாசிடர் சேவைக்கு வரி விதிக்கப்படவில்லை!’ - மகேஷ் பாபு விளக்கம்

`2007-08ம் ஆண்டுகளில் பிராண்ட் அம்பாசிடர் சேவைக்கு வரி விதிக்கப்படவில்லை!’ - மகேஷ் பாபு விளக்கம்
`2007-08ம் ஆண்டுகளில் பிராண்ட் அம்பாசிடர் சேவைக்கு வரி விதிக்கப்படவில்லை!’ - மகேஷ் பாபு விளக்கம்

வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து விளக்கம் அளித்துள்ள தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, தனக்கு வரி பாக்கி எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார். 

டோலிவுட்டின் முன்னணி நாயகனான மகேஷ்பாபு, கடந்த 2007-08-ம் ஆண்டுகளில் பிராண்ட் அம்பாசிடராக இருந்து விளம்பரங்களில் தோன்றியதற்கான சேவை வரி ரூ.18.5 லட்சம் செலுத்தவில்லை என்று ஹைதராபாத்தில் உள்ள ஜி.எஸ்.டி கமிஷனரேட், அவரின் வங்கிக் கணக்குகளை முடக்கியது. வட்டி, அபராதம் உள்ளிட்டவைகள் உட்பட அவர் ரூ.73.5 லட்சம் வரி பாக்கி வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தான் வரி பாக்கி எதுவும் வைக்கவில்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

`ஜி.எஸ்.டி கமிஷனரேட் அறிக்கையின்படி கடந்த 2007-08ம் ஆண்டில் பிராண்ட் அம்பாசிடர் சேவைக்கான வரியைக் கட்டவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அப்போதைய காலகட்டத்தில் பிராண்ட் அம்பாசிடர் சேவைக்கு வரி விதிக்கப்படவில்லை. 2010-ம் ஆண்டில்தான் அந்த சேவைக்கு வரி விதிக்கப்பட்டது’ என்று மகேஷ்பாபு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. `வரி கட்டுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, வங்கிக் கணக்கு முடக்கம் தொடர்பாக பல்வேறு விதிமுறைகள் வரி செலுத்துவோருக்கு ஆதரவாக இருக்கிறது. இந்த நிலையில், ஜி.எஸ்.டி கமிஷனரேட் எந்த முன்னறிவிப்பும் இன்றி தனது வங்கிக் கணக்கை முடக்கியிருக்கிறது’’ என்றும் மகேஷ் பாபு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.