Published:Updated:

அந்த அன்புக்கு எதைக் கொடுப்பது? - சுமதிஸ்ரீ

அந்த அன்புக்கு எதைக் கொடுப்பது? - சுமதிஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
அந்த அன்புக்கு எதைக் கொடுப்பது? - சுமதிஸ்ரீ

முகங்கள்

அந்த அன்புக்கு எதைக் கொடுப்பது? - சுமதிஸ்ரீ

முகங்கள்

Published:Updated:
அந்த அன்புக்கு எதைக் கொடுப்பது? - சுமதிஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
அந்த அன்புக்கு எதைக் கொடுப்பது? - சுமதிஸ்ரீ

ம்பன் கழகத்தில் ராமாயணம் பற்றிப் பேசுவதாக இருந்தாலும், எந்தத் தலைப்பில் பட்டிமன்றங்களில் பேசுவதானாலும் தனக்கான பிரத்யேகத் தன்மையுடன், சிறப்பான பேச்சை வழங்கிவருபவர் சுமதிஸ்ரீ. இப்போது திரைப்படப் பாடல்களும் எழுதிவருகிறார். பன்முக ஆற்றல்கொண்ட சுமதிஸ்ரீயுடன் மினி சந்திப்பு.

அந்த அன்புக்கு எதைக் கொடுப்பது? - சுமதிஸ்ரீ

சுமதிஸ்ரீ சிறு வயதிலிருந்தே பேச்சாளர் என்று கேள்விப்பட்டோமே?

ஆமாம்... நான்காம் வகுப்பு படிக்கையில், ஆட்டோ வர்றதுக்காகக் காத்திருந்தப்போ, புத்தகத்தை எடுத்துப் படிக்கச் சொன்னாங்க, எத்திலீன் மிஸ். கொஞ்ச நேரம் கழிச்சு, `என்ன படிச்சே?'னு கேட்டாங்க. வ.உ.சி பற்றிப் படிச்சதைப் பேசிக்காட்டினேன். அது அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. அதனால, ஒவ்வொரு திங்கள்கிழமை பிரேயரிலும் எனக்குத் தலைப்பு கொடுத்துப் பேசச் சொல்லுவாங்க. அப்புறம் பேச்சுப் போட்டிகள்ல கலந்துக்கிறது வாடிக்கையாயிருச்சு.

நான் பிறந்தது, வளர்ந்தது, இப்போது வசிப்பது எல்லாமே திருச்சிதான். எங்க அப்பா ரொம்பக் கண்டிப்பானவர். ஆண்கள் முன்னால பெண்கள் உட்காரக் கூடாது, சத்தமா சிரிக்கக் கூடாதுனு ஏகப்பட்ட கெடுபிடி. அவற்றுக்கு மத்தியிலும் எப்படியோ என் பேச்சைக் காப்பாத்திக்கிட்டேன்!

குடும்பம்..?

என் காதல் கணவர் பென்னி. இவர் அறிமுகமானதே சுவாரஸ்யமான கதை. நான் நிகழ்ச்சிகள்ல பேசுறதைக் கேட்டு, ஒரு விளம்பரப் படத்துல நடிக்கக் கூப்பிட்டார். ஆனா, ஷூட்டிங் நேரம் இழுத்துக்கிட்டே போச்சு. `மதியம் நான் ஒரு நிகழ்ச்சிக்காகப் போகணும்'னு சொல்லிட்டுக் கிளம்பிட்டேன். அடுத்த நாளும் இப்படியேதான் நடந்துச்சு. இப்படித்தான் ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். ஒருநாள் திடீர்னு, `நாம கல்யாணம் செய்துக்கலாமா?'னு கேட்டார். `வீட்டில் கேட்டுக்கோங்க'னு சொல்லிட்டேன். அப்புறம், நான் வெளியூருக்குப் பேசப் போகும் போதெல்லாம் துணைக்கு வர ஆரம்பிச்சார். அந்தத் துணை வாழ்க்கை முழுக்க நீடிக்கும் விதமா, நல்லபடியா திருமணம் முடிந்தது. பெரியவ லக்‌ஷனாவுக்கு நாலு வயசு, குட்டிப் பையன் விவனுக்கு ஒன்றரை வயசு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த அன்புக்கு எதைக் கொடுப்பது? - சுமதிஸ்ரீமுழு நேரப் பேச்சாளரானது எப்போது?

அப்போ கோபிசெட்டிபாளையத்துல இருந்தோம். லக்‌ஷனா என் வயித்துல இருந்தப்போ எனக்கு ஓய்வு தேவைப்பட, பார்த்துட்டிருந்த தனியார் கல்லூரி வேலையை விட்டேன். வந்துட்டிருந்த சம்பளம் நின்னதும் கொஞ்சம் கஷ்டம்தான். பாப்பா பிறந்து 40 நாள்கள் ஆகியிருந்தது. திருச்சியிலிருந்து முத்தமிழ் செல்வன் சார், ஒரு நிகழ்ச்சியில பேசணும்னு கூப்பிட்டார். நான், இந்த நிலைமையில் எப்படிப் போறதுனு தவிர்த்தேன். அவர் அழைப்பை மறுக்கிறதுக்காக, `இங்கேருந்து வர காரும்,
10,000 ரூபாயும் கொடுப்பீங்களா சார்?'னு கேட்டேன். அவரும் `சரி'னு சொல்லிட்டார். அப்போ ஆரம்பிச்ச முழு நேரச் சொற் பொழிவாளர் பயணம் நிம்மதியாகப் போகுது.

மறக்க முடியாத வெளிநாட்டுப் பயணம்?

என்னுடைய முதல் வெளிநாட்டுப் பயணம் இலங்கைக்குத்தான். அதைத் தொடர்ந்து ஒன்பது நாடுகளுக்கு, 11 முறை பயணம் செஞ்சிருக்கேன். ஒருமுறை எத்தியோப்பியாவில் இரண்டு மணிநேரத்துக்கும் மேல பேசிமுடிச்சதும், அந்த நாட்டுல உயர் பதவியில் இருக்கும் பெண் அதிகாரி மேடைக்கு வந்து, என்னைக் கட்டிப்பிடிச்சு, முத்தம் கொடுத்துப் பாராட்டின தோடு, இந்தியா போறதுக்கு பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்தாங்க. நான் பிசினஸ் கிளாஸ்ல பயணம் செய்தது அதுதான் முதன்முறை. அந்தம்மாவுக்கு நான் பேசினது முழுசா புரிஞ்சிருக்குமானுகூடத் தெரியலை. ஆனா, அவங்களே உணர்வுபூர்வமா என் பேச்சு என்னமோ செய்திருக்கு.

அமெரிக்காவுக்குப் போயிருந்தபோது, நான் கார்ல காத்திருக்க, எனக்குச் சாப்பாடு வாங்க, ஹோட்டலுக்கு நண்பர்கள் போயிருந்தாங்க. பேச்சுவாக்கில் என் பேரை அவர்கள் சொல்ல, அந்த ஹோட்டலின் செஃப் சுபாஷ், `சுமதிஸ்ரீ வந்திருக்காங்களா? அவங்க பேச்சைத் தினமும் யூடியூபில் கேட்பேன்'னு காருக்கே ஓடிவந்து பேசினார்.

மூன்றாவது, ஆஸ்திரேலியாவுக்குப் பேசப் போயிருந்தபோது, 75 வயதான அனிதா கிட்டத்தட்ட 10,000 கிலோமீட்டர் பயணம் செய்து என்னைப் பார்க்க வந்தாங்க. `இவ்வளவு தூரம் நீங்க வர வேணாம், நீங்க இருக்கும் பகுதிக்கு வரும்போது சந்திக்கலாம்'னு நான் சொன்னதைக்கூட அவங்க கேட்கலை. அந்த அன்புக்குத் திரும்ப என்ன கொடுக்கறதுன்னு இப்ப வரைக்கும் தெரியலை.

விஷ்ணுபுரம் சரவணன் - படம் : என்.ஜி.மணிகண்டன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism