Published:Updated:

ட்விட்டர் சர்வே: பணமதிப்பு நீக்கம்... லஞ்சம் குறைந்துள்ளதா?

ட்விட்டர் சர்வே: பணமதிப்பு நீக்கம்... லஞ்சம் குறைந்துள்ளதா?
பிரீமியம் ஸ்டோரி
News
ட்விட்டர் சர்வே: பணமதிப்பு நீக்கம்... லஞ்சம் குறைந்துள்ளதா?

ட்விட்டர் சர்வே: பணமதிப்பு நீக்கம்... லஞ்சம் குறைந்துள்ளதா?

ணமதிப்பு நீக்கத்தினால் கறுப்புப்பணம் உருவாவது குறைந்துள்ளது; வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, அரசின் வருவாய் அதிகரித்துள்ளது; பணத்தை ரொக்கமாகப் பயன்படுத்துவது குறைந்துள்ளதால், லஞ்சமும் குறைந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா என்று நாணயம் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு சர்வே நடத்தினோம். இந்த சர்வேயில் தெரியவந்திருக்கும் விவரங்கள் என்ன என்று பார்ப்போம்.

ட்விட்டர் சர்வே: பணமதிப்பு நீக்கம்... லஞ்சம் குறைந்துள்ளதா?

77% பேர் மேலே சொல்லப்பட்டுள்ள அத்தனை விஷயங்களையும் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறார் கள். காரணம், இன்றைக்கும் ரொக்கப் பரிமாற்றம் என்பது பெரிய அளவில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. பணம் ரொக்கமாகப் பரிமாற்றம் செய்யப்படும் வரை கறுப்புப்பணம் உருவாகிக் கொண்டுதான் இருக்கும். லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் ஜோராக நடந்துகொண்டுதான் இருக்கும் என்பதன் அடிப்படையில் இவர்கள் இப்படிச் சொல்லியிருக்கலாம்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பிறகு கறுப்புப்பணம் உருவாவது குறைந்துள்ளதுடன், லஞ்சம் தருவதும் குறைந்துள்ளதை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள் 18% பேர். அரசின் வரி வருமானம் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பது ஒன்றை மட்டுமே இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ட்விட்டர் சர்வே: பணமதிப்பு நீக்கம்... லஞ்சம் குறைந்துள்ளதா?

இந்த விஷயத்தில் 5% பேர் எந்தக் கருத்தும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் சில பாசிட்டிவான விஷயங்களும், சில நெகட்டிவான விஷயங்களும் நடந்துள்ளன என்பதால், அவர்கள் இப்படிச் சொல்லியிருக்கலாம்.

ஆக மொத்தத்தில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் குறுகிய காலத்தில் சில நன்மைகள் விளைந்துள்ளன. நீண்ட காலத்தில் இன்னும் பல நன்மைகள் விளையும். இதற்கு அரசின் தொடர்ந்த கண்காணிப்பு தேவை!

- ஏ.ஆர்.கே