Published:Updated:

‘கோலியிடம் கற்றுக்கொள்ளுங்கள்’ - பேட்ஸ்மேன்களுக்குப் பாடம் எடுத்த ஆஸி. பயிற்சியாளர்!

‘கோலியிடம் கற்றுக்கொள்ளுங்கள்’ - பேட்ஸ்மேன்களுக்குப் பாடம் எடுத்த ஆஸி. பயிற்சியாளர்!
‘கோலியிடம் கற்றுக்கொள்ளுங்கள்’ - பேட்ஸ்மேன்களுக்குப் பாடம் எடுத்த ஆஸி. பயிற்சியாளர்!

மெல்ஃபோர்ன் டெஸ்டில் இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலியா வீரர்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இது ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் பயிற்சியாளரை வருத்தமடையச் செய்துள்ளது. தங்கள் வீரர்களின் கடின உழைப்பு வீணாவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோரைப் பார்த்து ஆஸ்திரேலியா வீரர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்ஸில் கோலி - புஜாராவின் நிதானமான ஆட்டம் இந்திய அணியை முன்னிலைப்படுத்தியுள்ளது. விராட் கோலி - புஜாரா பார்ட்னர்ஷிப் பொறுமையின் உச்சம் எனச் சொல்லலாம். 414 பந்துகளை எதிர்கொண்ட இந்த இணை 173 ரன்களை எடுத்தனர். இந்தப் போட்டியில் 204 பந்துகளைச் சந்தித்த கோலி 82 ரன்களை எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதேபோல் 319 பந்துகளைச் சந்தித்த புஜாரா 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்காரணமாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 447 ரன்கள் டிக்ளேர் செய்தது. இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 66.5 ஓவர்களுக்கு 151 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இது அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர்களை வருத்தமடைய செய்துள்ளது.

இதுதொடர்பாகப் பேசியுள்ள ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் க்ரேம் ஹிக், ‘இந்தப்போட்டி ஒரு பயிற்சியாளராக எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. கோலி, புஜாரா செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. சிறந்த வீரர்கள் கடினமான சூழலை தங்களது இன்னிங்ஸ் மூலம் மாற்றியமைக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள். நீங்கள் ஒரே களத்தில் இருக்கும்போது அதுவும் தவறான பகுதியில் இருக்கும்போது அவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் வீரர்களின் கடின உழைப்பு தோல்வியடைந்தது ஏமாற்றமாக இருக்கிறது. ஆட்டத்தின் நடுவில் இருக்கும்போது நீங்கள் கற்றுக்கொள்வது எளிதான விஷயம் இல்லை. பாக்ஸிங் டே டெஸ்டில் இவ்வாறு நடைபெறுவது துரதிர்ஷ்டவசமானது. இந்த நாள்களில் சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் விரைவாகக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிக்க உங்களது போதுமான நேரம் கிடைக்காது’ என்றார்.