Published:Updated:

இந்தியாவின் முதல் பெண் மேயர்... பத்மபூஷண் தாரா செரியன்

இந்தியாவின் முதல் பெண் மேயர்... பத்மபூஷண் தாரா செரியன்
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவின் முதல் பெண் மேயர்... பத்மபூஷண் தாரா செரியன்

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர்; இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்!முதல் பெண்கள்ஹம்சத்வனி ஓவியம் : கார்த்திகேயன் மேடி

இந்தியாவின் முதல் பெண் மேயர்... பத்மபூஷண் தாரா செரியன்

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர்; இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்!முதல் பெண்கள்ஹம்சத்வனி ஓவியம் : கார்த்திகேயன் மேடி

Published:Updated:
இந்தியாவின் முதல் பெண் மேயர்... பத்மபூஷண் தாரா செரியன்
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவின் முதல் பெண் மேயர்... பத்மபூஷண் தாரா செரியன்

காலருகில் வரிசையாக ஐந்து லாசா ஆப்சோ ரக நாய்கள். ஹால் முழுக்க பூனைகளும் விருதுகளும் நினைவுப் பரிசுகளும். சோபாவில் கம்பீரமாக அமர்ந்திருப்பவர் பேசத் தொடங்குகிறார்... “நான் ஒரு பிச்சைக்
காரன் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?” - அதிர்ச்சியைக் கடக்கும் முன்னர் அவரே தொடர்கிறார்...

“செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்டில் லாட்டரி டிக்கெட் விற்றேன். ஊனமுற்ற காரணத்தால், தவழ்ந்துதான் செல்வேன். செக்யூரிட்டி வேலை செய்த சிலர் `ஏர்போர்ட்டில்  பிச்சை எடுக்கலாமே' என்று சொல்ல, உடனே அங்கே ஆஜர்.

ஒன்பது வயது முதல் பிச்சையே வாழ்க்கை என்று இருந்த எனக்கு வெளிச்சம்காட்டியவர் இந்த அம்மாதான்” என்று ஒரு புகைப்படத்தைக் காட்டுகிறார். அதில், அரக்கு வண்ண பட்டுப் புடவையில் ஒரு வெண்ணிற தேவதை இருக்கிறார். “தாராம்மா பார்க்க அத்தனை அழகு. அதைவிட அவர் குரல் அழகு. சன்னமான, மென்மையான குரல். எல்லாவற்றையும்விட அவரைப் பேரழகியாக்கியது அவரது குணம்... எல்லோருக்கும் உதவும் பண்பு” என்று கூறுகிறார். ஏர்போர்ட்டில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஆன்டனி, நிர்மலா கோகர்ன் என்ற சேவை மனப்பான்மை கொண்ட பெண்ணின் கண்ணில்பட, அங்கிருந்து `கில்டு ஆஃப் சர்வீஸ்' விடுதிக்கு இடம் மாறுகிறார். அங்குதான் தாராவைச் சந்திக்கிறார். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட தாரா, மாற்றுத்திறனாளியான அந்தச் சிறுவன் மீது தனிப் பாசம் கொள்கிறார். மூன்றே ஆண்டுகளில், குடியரசுத் தலைவரிடமிருந்து `சிறந்த குடிமகன்’ என்ற விருது பெறுகிறார் ஆன்டனி. சிறுதொழில் தொடங்க எண்ணிய ஆன்டனிக்கு தாரா பெரும் ஊக்கம் தர, மளமளவெனத் தன் வியாபாரத் தைப் பெருக்கத் தொடங்கினார் ஆன்டனி.

`மனதில் உறுதி வேண்டும்' திரைப்படத்தில் வரும் பிச்சைக்காரன் கதாபாத்திரத்தையும் அவருக்கு உதவும் கதாநாயகியையும் மறக்கவே முடியாது. அப்படித்தான் ஆன்டனி- தாராவின் நட்பும். முன்னேறும் உறுதியும் கடின உழைப்பும் கைகொடுக்க, சொந்தத் தொழிற்சாலை தொடங்கும் நிலைக்கு உயர்ந்தார் ஆன்டனி. “என்னைவிட என் வளர்ச்சியில் தாராம்மாவுக்கு அத்தனை பெருமை. நாய்கள்மீது அவருக்குக் கொள்ளை பிரியம். பணியாளர்களிடமும் அத்தனை அன்பாக இருப்பார்” என்று கூறுகிறார் தொழிலதிபர் ஆன்டனி.

இந்தியாவின் முதல் பெண் மேயர்... பத்மபூஷண் தாரா செரியன்

1913, மே மாதம், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ராவ் பகதூர் தானியல் ஐசாக் தேவதாசனுக்கு மகளாகப் பிறந்தவர் தாரா. ராயப்பேட்டையின் மிகச் சாதாரணமான குடியிருப்பில் வளர்ந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். திருமண வயது வந்ததும், குடும்பத்தைத் தேடி வந்த வரன், டாக்டர் பி.வி.செரியன். சிறந்த காது, மூக்கு, தொண்டை நிபுணரான செரியன், துரதிர்ஷ்டவசமாக தன் முதல் மனைவி அன்னா வர்கீஸை காசநோய்க்குப் பறிகொடுத்தவர். இரு குழந்தைகளுடன் தவித்த செரியனை மனமுவந்து 1935-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் தாரா. அஷோக், ஜினி என்று அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்தன. மதராஸ் மருத்துவக் கல்லூரியின் முதல்வரானார் செரியன்.

தாராவுக்கோ, தன் வாழ்நாள் ஆசையான சமூகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது, கில்டு ஆஃப் சர்வீஸ் அமைப்பு மூலம்! தன் 35-வது வயதில் கில்டு ஆஃப் சர்வீஸின் தலைவரானார் தாரா. சென்னை மாநகராட்சியின் ஆல்டர்மன் பதவியும் தாராவைத் தேடிவந்தது. 1949-ல் மாநகராட்சி மேயரானார் பி.வி.செரியன்.

1957, டிசம்பர் மாதம், சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தாரா ஏழு வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, நாட்டின் முதல் பெண் மேயர் என்ற பெருமையையும் பெற்றார். கணவன் மனைவி இருவரும் மேயர் பதவி வகித்தது ஆச்சர்யம்தான்!

நகரின் அரசுப் பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை 1958, ஜனவரி 1 அன்று அன்றைய மத்திய நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி மூலம் அறிமுகப் படுத்தினார் தாரா. நிதிப் பற்றாக்குறையைப் போக்க, மோட்டார் வாகன வரியில் மாநகராட்சிக்குப் பங்கு வேண்டும் என்று குரலெழுப்பினார். குடிசைப் பகுதிகளுக்கு மின்சாரம், குடிநீர், கழிவுநீர் வசதிகளைச் செய்தார்.

மேலவை உறுப்பினர்களாகவும் இந்தத் தம்பதி நியமிக்கப்பட்டனர். தாரா முன்னெடுத்த முன்னோடித் திட்டமான இலவச மதிய உணவுத் திட்டத்தின் புகழ் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரை எட்ட, மாநிலம் முழுவதும் திட்டத்தை விரிவுபடுத்த தனி உயர்மட்டக் குழு அமைத்தார் எம்.ஜி.ஆர். தாராவும் இடம்பெற்ற அந்தக் குழுவின் முயற்சியால்தான், தமிழ்நாடு முழுக்க சத்துணவுத் திட்டம் அமலுக்கு வந்தது.

1964-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநில கவர்னராக பி.வி.செரியன் நியமிக்கப்பட, கணவருடன் மும்பை பயணமானார் தாரா. அங்கும் சமூகப் பணிகளைத் தொடர்ந்தார். 1967-ம் ஆண்டு தாராவின் சமூக சேவையைப் பாராட்டி, பத்மபூஷண் விருது வழங்கி கௌரவித்தது மத்திய அரசு. 1969, நவம்பர் மாதம் துரதிர்ஷ்டவசமாக மும்பையிலேயே மரணமடைந்தார் பி.வி.செரியன். சென்னை திரும்பிய தாரா, கில்டு ஆஃப் சர்வீஸ் உட்பட பல அமைப்புகளுடன் இணைந்து இன்னும் முழு மூச்சுடன் சமூகப் பணியாற்றத் தொடங்கினார்.

“மாற்றுத்திறனாளிகள், குடிசைப் பகுதி மக்களுடன்தான் அவரது பெருவாரியான நேரம் கழிந்தது. ஒரு திருமண நிகழ்ச்சியில் திடீரென மழை பிடித்துக்கொள்ள, சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த என் மனைவி மகிமாவுக்குக் குடை பிடித்தபடி வெகு நேரம் நின்றுகொண்டிருந்தார் தாரா. முன்னாள் கவர்னரின் மனைவி என்ற எந்த பந்தாவும் அவரிடம் இல்லை. அதுதான் தாரா” என்று நினைவு கூர்கிறார் எழுத்தாளர் மனோகர் தேவதாஸ்.

1980-களில் மாநில சமூகநல வாரியத் தலைவர் பதவியும் தேடி வர, ஆன்டனி போன்ற நூற்றுக்கணக்கானவர்கள் வாழ பாதையமைத்துத் தந்தார் தாரா. இந்தியன் ஏர்லைன்ஸ், எல்.ஐ.சி போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குநர் சபை உறுப்பின ராகவும் பணியாற்றியிருக்கிறார் தாரா. 2000, நவம்பர் 7 அன்று மரணமடைந்த தாரா, இன்றும் பலரது உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கக் காரணம் ஒன்றுதான் - அவரது கருணை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism