Published:Updated:

இது எங்க வீட்டுக்கு முதல் ஃப்ரிட்ஜ்! - சேலத்தில் ஜாலி டே கொண்டாட்டம்

இது எங்க வீட்டுக்கு முதல் ஃப்ரிட்ஜ்! - சேலத்தில் ஜாலி டே கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
இது எங்க வீட்டுக்கு முதல் ஃப்ரிட்ஜ்! - சேலத்தில் ஜாலி டே கொண்டாட்டம்

கலகலப்பு

‘அவள் விகடன்’ வாசகிகளுக்கான ‘ஜாலி டே’ திருவிழா, அக்டோபர் 27 மற்றும் 28-ம் தேதிகளில் சேலத்தில் கொண்டாட்டமாக நடைபெற்றது. வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் இணைந்து வழங்கிய இவ்விழா, பவர்டு பை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி மற்றும் அபீஸ் ஹனி, அசோஸியேட் பார்ட்னர் ஜிஆர்பி உதயம் நெய்.

இது எங்க வீட்டுக்கு முதல் ஃப்ரிட்ஜ்! - சேலத்தில் ஜாலி டே கொண்டாட்டம்

பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முன்தேர்வுப் போட்டிகளில், அடுப்பில்லா சமையல், ஹேண்டிகிராஃப்ட், மெஹந்தி, நடனம், நடிப்பு, பாடல், செல்ஃபி, டப்ஸ்மாஷ், ரங்கோலி எனப் பல போட்டிகள் நடைபெற்றன. மறுநாள் ஜாலி டே மெயின் ஈவன்ட். சின்னத்திரை நட்சத்திரங்கள் சித்ரா மற்றும் சுட்டி அரவிந்த் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ஆதவனும் சரவணனும் கூடுதல் கலகலப்பூட்டினர்.

பாட்டுப் போட்டியில் முதல் பரிசு வென்ற 79 வயது மைதிலி பாட்டி, ‘`இது நான் கலந்துக்கிற ஏழாவது ஜாலி டே. இதுக்கு முன்னரும் பல பரிசுகளை வாங்கியிருக்கேன்’’ என்றார் பூரிப்புடன். லோகேஸ்வரி அண்டு டீம், நடிப்புப் போட்டியில் முதல் பரிசைத் தட்டிச் சென்றது. பெண் சிசுக்கொலை பற்றிப் பேசிய இந்த நாடகத்தில் நடித்தவர்களும் சிறுமிகளே. அந்தக் குழுவில் இடம்பெற்ற சிறுமி ரம்யா, நடனப் போட்டியிலும் மூன்றாம் பரிசை வென்று டபுள் தமாக்கா சந்தோஷத்திலிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது எங்க வீட்டுக்கு முதல் ஃப்ரிட்ஜ்! - சேலத்தில் ஜாலி டே கொண்டாட்டம்

வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் சார்பாக நடந்த ஆன் த ஸ்பாட் போட்டிகளின் மூலம் வழங்கப்பட்ட பரிசுகள் விழாவின் உற்சாகத்தை இரட்டிப்பாக்கின. பெண் குழந்தைகளை அழைத்து வந்திருந்த அம்மாக்கள் மேடைக்கு அழைக்கப்பட, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை பற்றிய விழிப்பு உணர்வு வீடியோ திரையிடப்பட்டது. அனைத்துப் பெற்றோர்களும் அறிய வேண்டிய, தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்த வேண்டிய அந்த வீடியோவை வரவேற்று நன்றி தெரிவித்தனர் நம் வாசகிகள்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் முக்கிய கதாபாத்திரங்களான நீனு கார்த்திகா, வினோத் பாபு, சிந்தூரன், நந்தா லோகநாதன் மற்றும் அனன்யா ஆகியோர் மேடையில் தோன்றியபோது அரங்கத்தில் ஆரவாரம்.

இது எங்க வீட்டுக்கு முதல் ஃப்ரிட்ஜ்! - சேலத்தில் ஜாலி டே கொண்டாட்டம்

சின்னத்திரை ஸ்டார் ரியோ நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுக்க, தங்கள் வீட்டுப்பிள்ளை போன்ற உணர்வுடன் அவரை வரவேற்றனர் நம் வாசகிகள்.

மதிய விருந்துக்குப்பின் அபீஸ் ஹனி வழங்கிய உணவு உண்ணும் போட்டி சற்று வித்தியாசமானது மட்டுமல்ல; சுவையானதும்கூட. பிரெட்டுடன் அபீஸ் ஹனியை விரைவாகச் சுவைத்து மகிழ்ந்து பரிசுகளை வென்றனர் நம் வாசகிகள்.

இது எங்க வீட்டுக்கு முதல் ஃப்ரிட்ஜ்! - சேலத்தில் ஜாலி டே கொண்டாட்டம்

நிகழ்ச்சியின் இறுதியாக பம்பர் பரிசுக்கான அதிர்ஷ்டசாலியைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும்  திக் திக் மொமென்ட். ஜலகண்டபுரத்தைச் சேர்ந்த வசந்தியின் பெயர், கரகோஷத் துக்கு இடையே அழைக்கப்பட்டது. ‘`இதுதான் நான் கலந்துக்கிற முதல் ‘ஜாலி டே’. எங்க வீட்டுக்கு வரப்போற முதல் ஃப்ரிட்ஜ் இதுதான்’’ என்று நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக வசந்தி பரிசைப் பெற்றுக்கொள்ள, ‘அப்பா...
ஜாலி டேல அம்மாவுக்கு ஃப்ரிட்ஜ் பரிசா கிடைச்சிருக்கு’ என்று தன் அப்பாவுக்கு அளவில்லா சந்தோஷத்துடன் போனில் தகவல் சொல்லிக் கொண்டிருந்தார் வசந்தியின் மகள்.

மகிழ்ச்சி!

- க.ரோஷிணி,  படங்கள் : க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism