Published:Updated:

2018-ன் டிரெண்ட் `கீட்டோ டயட்' - புதிய  உணவு முறைக்கு வரவேற்பு அதிகரிப்பு! 

2018-ன் டிரெண்ட் `கீட்டோ டயட்' - புதிய  உணவு முறைக்கு வரவேற்பு அதிகரிப்பு! 
2018-ன் டிரெண்ட் `கீட்டோ டயட்' - புதிய  உணவு முறைக்கு வரவேற்பு அதிகரிப்பு! 

டல்நலம் சார்ந்த விழிப்புஉணர்வு அதிகரித்துவிட்டதால், உணவுமுறைமீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க இணையத்தில் தேடினால் ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாக, பேலியோ டயட், வீகன் டயட் போன்ற பெயர்களில் அறியப்படும் உணவுமுறைகளைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. 

சில பிரபலங்களும் இந்த டயட்டுகளைப் பின்பற்றுவதால், இந்த உணவுமுறைகளுக்கான தேடல்கள் அதிகரித்துவிட்டன. அந்த வகையில் இப்போதைய டிரெண்ட் 'கீட்டோ டயட்'.  'கீட்டோஜெனிக் டயட்' என்று குறிப்பிடப்பட்டுள்ளன. 2018-ம் ஆண்டு கூகுளில் மருத்துவம் தொடர்பான தேடல்களில் இந்த டயட்டுக்குத்தான் முதலிடம்.

`கீட்டோ டயட்' உணவுமுறையில் கொழுப்புச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவை அதிகம் எடுத்துக்கொண்டு, கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். கீட்டோ உணவுகள் செரிமானத்துக்குப் பிறகு கொழுப்பாக மாறாமல்  ஆற்றலாக மாறும் என்பதால் உடல் எடை அதிகரிக்காமல் குறையும். வைட்டமின்-சி நிறைந்த காய்கறிகள், முட்டை, அவகேடோ என்ற வெண்ணெய்ப் பழம் (Avocado), இறைச்சி, தேங்காய் எண்ணெய் போன்ற உணவுகள்தான் இந்த டயட்டின் முக்கிய உணவுப் பட்டியலாகும். 

`கீட்டோ டயட்'டை பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை பல பிரபலங்கள் பின்பற்றுகிறார்கள். 'காலா' திரைப்படத்தில் ரஜினியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த ஹூமா குரேஷி, 'காஃபி வித் கரண்' தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பிரபலம் கரண் ஜோஹர், ஹாலிவுட்டில் `ஸ்பைடர்மேன்', `அயர்ன்மேன்' திரைப்படங்களின் கதாநாயகி க்வைநெத் பேல்ட்ரோவ் போன்ற பிரபலங்களும் கீட்டோ உணவுமுறையைப் பின்பற்றி உடல்எடையைக் குறைத்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த உணவுமுறையில் தண்ணீர் மிகவும் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதால் நீர்ச்சத்து குறைவால் நம் உடலில் சில உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. அதனால் இந்த உணவுமுறையை நீண்ட நாள்கள் கடைப்பிடிக்க முடியவில்லை என்று பலர் தெரிவித்துள்ளனர்.

கீட்டோவைத் தொடர்ந்து தற்போது 'ஸ்நேக் டயட்' என்ற புதிய உணவுமுறை இணையதளங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது.