விமானமா... கப்பலா?

நீரிலும் நிலத்திலும் தரையிறக்கும் வகையிலான உலகின் மிகப்பெரிய விமானத்தை சீனா தயாரித்துள்ளது. இது கப்பலா விமானமா என வியக்கவைக்கும் இதன் முதல் சோதனையையும் வெற்றிகரமாக முடித்துள்ளது. ஆபத்தின்போது கடலில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலான இந்த AG 600 என்ற விமானம், நீரில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும். முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே பலகட்ட ஆராய்ச்சிக்குப் பிறகு தயாரிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹீபே மாகாணத்தின் ஜிங்மென் பகுதியிலிருந்து முதன்முறையாக வானில் சோதிக்கப்பட்டது. பின்னர், நீரிலும் வெற்றிகரமாக சென்றது. இது சீனாவின் மூன்றாவது மிகப்பெரிய விமானம்.

சித்தி விநாயகர்

மும்பையின் பிரமாதேவி பகுதியில் எஸ்.கே.போலேமார்க் எனும் இடத்தில் உள்ளது, வரசித்தி விநாயகர் கோயில். 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கோயில், ஐந்து அடுக்குக் கட்டடமாக உள்ளது. இந்தக் கோயிலின் கருவறை விமானத்தின் மேலே, தங்க முலாம் பூசப்பட்ட பெரிய கலசம் (சுமார் 12 அடி உயரம்) உண்டு. மும்பையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குறது, இந்த வரசித்தி விநாயகர் கோயில். இந்த விநாயகரை மராத்தியில், ‘நவசாக கணபதி’ என்றும், ‘நவச பவனார கணபதி’ என்றும் அழைக்கின்றனர். விநாயகரின் விக்கிரகம் ஒற்றைக் கருங்கல்லால் இரண்டரை அடி உயரத்தில் இருக்கும்.

நீளக் கொம்பன்

வண்டு இனங்களிலேயே அளவில் பெரியது, காண்டாமிருக வண்டு. மத்திய, தென் அமெரிக்கப் பகுதி மழைக்காடுகளைத் தாயகமாகக்கொண்டது. கருப்பு, பழுப்பு, பச்சை, சிவப்பு எனப் பல நிறங்களில் இருக்கும்.

தலைப்பகுதியில் கொம்பு போன்ற நீளமான கொடுக்கு உடையது. தன் உடல் எடையைவிட 10 மடங்கு எடையைத் தூக்கும் திறன் வாய்ந்தது. மரப்பட்டை, இலை, காய், பழம் போன்றவையே உணவு. சில சமயங்களில் பூச்சிகளையும் உண்ணும். நீளமான கொடுக்கைப் பயன்படுத்தி உணவைச் சிதைத்து உண்ணும். எலி, வௌவால், பறவை, ஊர்வன போன்றவை இவற்றின் எதிரிகள். ஒரு முறைக்கு 100 முட்டைகள் வரை இடும். முட்டைகள், லார்வா புழுக்களாகிப் பிறகு வண்டுகளாக உருமாறுகின்றன.

ஆகாய தாமரை ஆபத்து!

தமிழகத்தின் ஏரிகள், குளங்களில் அதிகமாகப் பரவி பச்சை இலைகளுடன், ஊதா நிறப் பூக்களுடன் காட்சி அளிப்பது, ஆகாய தாமரை. இந்த அழகுக்குப் பின்னால் ஆபத்து மறைந்துள்ளது.

குளங்கள் மற்றும் நீர்நிலைகளை அழகுபடுத்துவதற்காக தென் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இது, அழகுக்காக கொண்டுவரப்பட்டது. தற்போது ஆபத்தாக மாறிவிட்டது.

ஆகாய தாமரையின் தண்டிலிருந்து புறப்படும் கிளைகள், வேகவேகமாகப் பரவி நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும். தண்ணீரை எளிதில் ஆவியாக்குவதால், குளம், குட்டைகள் விரைவில் வறண்டுவிடும்.