Published:Updated:

தில்லா... த்ரில்லா...

தில்லா... த்ரில்லா...
பிரீமியம் ஸ்டோரி
தில்லா... த்ரில்லா...

தில்லா... த்ரில்லா...

தில்லா... த்ரில்லா...

தில்லா... த்ரில்லா...

Published:Updated:
தில்லா... த்ரில்லா...
பிரீமியம் ஸ்டோரி
தில்லா... த்ரில்லா...

மீபத்தில் வெளியாகியிருக்கும் வெப்சீரிஸ்கள் ஆன்லைன் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து, பரவலான பார்வையாளர்களை ஈர்த்திருக்கின்றன. அந்த சீரிஸ்கள் பற்றிய சின்ன இன்ட்ரோ... 

தில்லா... த்ரில்லா...
தில்லா... த்ரில்லா...

The Haunting of Hill House

பேய்க்கதைகளில் ‘20-ம் நூற்றாண்டின் பெஸ்ட் நாவல்’ என்று பாராட்டப்படும் நூல், ஷிர்லி ஜாக்சன் எழுதிய ‘தி ஹான்டிங் ஆஃப் தி ஹில் ஹவுஸ்’. இந்த நாவல் இதுவரை இரண்டு முறை திரைப்படமாக எடுக்கப்பட்ட ஒன்று. இப்போது முதன்முறையாக வெப்சீரிஸாக வெளிவந்திருக்கிறது. மைக் ஃப்லானகன் இதை இயக்கியிருக்கிறார். ஓர் எழுத்தாளரின் குடும்பம் மலையில் பயன்படுத்தாமல் பாழடைந்து கிடக்கிற தங்கள் வீட்டை சீர்படுத்தி விற்க முடிவெடுக்கிறார்கள். அங்கே குடும்பத்தோடு செல்லும் அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் நடக்கிற விபரீத சம்பவங்களும், அமானுஷ்யங்களும்தான் இந்த வெப்சீரிஸின் கதை. சிம்பிள் ஒன்லைன்தான் என்றாலும், அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் பார்க்கிற யாரையும் பல் நடுங்க வைத்துவிடும். இருவேறு காலகட்டத்தில் பயணிக்கும் திரைக்கதையும் சீரிஸுக்கு த்ரில் கூட்டுகிறது. சென்றமாதம் வெளியான இத்தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க, சீசன் 2 எடுக்கத் தயாராகிவிட்டது படக்குழு. இந்த சீரிஸை நல்ல ஒலி ஒளி அமைப்பில் பார்த்தால், நிச்சயம் வேறொரு பயமுறுத்தும் உலகத்திற்கு அழைத்துச்செல்லும்.

தில்லா... த்ரில்லா...
தில்லா... த்ரில்லா...

Deception

சூப்பர் ஸ்டார் மேஜிக் நிபுணர் ஜேக் கட்மோர் ஸ்காட். அவருடைய மேஜிக் ரகசியம் ஒன்று வெளியாகிவிடுவதால் தொழிலில் வீழ்ச்சியடைகிறார். காவல்துறையில் இணைந்து அவர்களுக்குத் தன் மேஜிக் மூலம் குற்றங்களைத் தீர்க்க உதவ ஆரம்பிக்கிறார். ஸ்காட்டின் சகோதரர் ஒரு கொலைக்குற்றத்தில் சிக்குகிறார். அதையும் ஸ்காட்டே புலன்விசாரணை செய்ய முற்பட... ஸ்காட்டின் வீழ்ச்சிக்கும் காவல்துறையில் இணைந்ததற்கும் இந்தக்கொலைக்கும் இருக்கிற தொடர்புகள் அடுத்தடுத்து வெளிவரத்தொடங்குகின்றன. சுவாரஸ்ய திருப்பங்கள்  நிறைந்த திரைக்கதையையும், அதில் நிறைந்திருக்கிற மேஜிக்கும் இணைந்து பார்வையாளர்களுக்கு கம்ப்ளீட் என்டெர்டெயின்மென்ட் பேக்கேஜாக இந்தத் தொடர் அமைந்திருக்கிறது. இயக்குநர் கிரிஸ் ஃபெடக் இந்தத்தொடரை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் அமெரிக்காவின் E! சேனல் இந்தத்தொடருக்கு சிறந்த நடிகர், சிறந்த புதுத்தொடர் விருதுகளை வழங்கியுள்ளது!

தில்லா... த்ரில்லா...
தில்லா... த்ரில்லா...

Sharp Objects

அமெரிக்க எழுத்தாளர் கில்லியன் ஃப்ளின் எழுதிய க்ரைம் நாவலை அடிப்படையாகக் கொண்ட சீரிஸ் இது. க்ரைம் ரிப்போர்ட்டர் கெமில் ப்ரீக்கர். அவருடைய சொந்த ஊரில் இரண்டு இளம்பெண்கள் கொல்லப்படுகிறார்கள். அந்த அசைன்மென்ட்டுக்காக ஊர் கிளம்புகிறார். அது குறித்துத் தகவல்கள் சேர்க்க ஆரம்பிக்கும்போது, தற்போது நிகழும் கொலைகளுக்கும் கெமிலின் கடந்த காலத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவருகிறது... கெமிலை விரட்டும் மர்மங்கள்தான் மீதிக்கதை. கெமிலாக ஏமி ஆடம்ஸ் நடித்திருக்கிறார். ஜுலைமாதம் வெளியான இந்த மினி தொடருக்கு க்ரைம் த்ரில்லர் ரசிகர்களிடமிருந்து எக்கச்சக்க வரவேற்பு. இதன் மேக்கிங் விமர்சகர்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. த்ரில்லர் விரும்பிகளுக்கு ஏற்ற தொடர் இது.

தார்மிக் லீ, ர.சீனிவாசன்