Published:Updated:

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க தேனீ ஒலி எழுப்பும் திட்டம் - மத்திய அரசு!

SAKTHIVEL MURUGAN G
ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க தேனீ ஒலி எழுப்பும் திட்டம் - மத்திய அரசு!
ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க தேனீ ஒலி எழுப்பும் திட்டம் - மத்திய அரசு!

``ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் ரயில் பாதைகளில் தேனீ ஒலி எழுப்பும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்" என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

ரயில்களில் அடிப்பட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க அசாமில் தேனீ ஒலி திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு. இந்தத் திட்டத்தால், ரயில் பாதைகள் யானைகள் அடிப்பட்டு இறப்பது பெருமளவில் குறைந்திருக்கிறது. ``மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்த இந்த தேனீ ஒலி சோதனை திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்" என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

அசாம் மாநிலத் தலைநகரான கவுஹாத்தியில் விழா ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். இந்த விழாவில் கலந்துகொண்ட வடகிழக்கு மண்டல ரயில்வே மேலாளர் ராங்கியா ரவிலேஷ் குமார், ``தேனீகள் சப்தம் எழுப்பினால் யானைகள் உள்ளிட்ட விலங்குகள் ரயில் பாதைகளுக்கு வருவதில்லை. எனவே, தேனீ ஒலி எழுப்புவதைப் போன்று பதிவை ஒரு கருவியின் மூலம் எழுப்புவதன் மூலம் ரயில்களில் விலங்குகள் அடிப்பட்டு உயிரிழப்பது தவிர்க்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.