Published:Updated:

சந்தை சரிவு... முதலீட்டுக்கு ஏற்ற தருணமா?

சந்தை சரிவு... முதலீட்டுக்கு ஏற்ற தருணமா?
பிரீமியம் ஸ்டோரி
சந்தை சரிவு... முதலீட்டுக்கு ஏற்ற தருணமா?

கேள்வி - பதில்

சந்தை சரிவு... முதலீட்டுக்கு ஏற்ற தருணமா?

கேள்வி - பதில்

Published:Updated:
சந்தை சரிவு... முதலீட்டுக்கு ஏற்ற தருணமா?
பிரீமியம் ஸ்டோரி
சந்தை சரிவு... முதலீட்டுக்கு ஏற்ற தருணமா?

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவரும் நான் பங்குச் சந்தையிலும் முதலீடு செய்ய நினைக்கிறேன். தற்போதுள்ள சூழலில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா?

விஜயகாந்த், அரக்கோணம்

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

‘‘பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீட்டை, நீங்கள் முதலீடு செய்யத் தேர்வு செய்துள்ள நிறுவனம் மற்றும் முதலீட்டுக்கான கால அளவைப் பொறுத்தே தீர்மானிக்க முடியும். தற்போது பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவானது, நல்ல நிலையில் இயங்கக்கூடிய நிறுவனங்களின் மதிப்புமிக்க பங்குகளைக் குறைந்த விலையில் வாங்குவதற்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே, இது உங்களின் முதலீட்டைத் தொடங்குவதற்கு ஏற்ற காலமாகும்.’’

சந்தை சரிவு... முதலீட்டுக்கு ஏற்ற தருணமா?

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு பிரீமியம் கட்டிவருகிறேன். உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. பாலிசியைப் புதுப்பிக்கும்போது இதைத் தெரிவிக்க வேண்டுமா?

சக்திவேல், கும்பகோணம்

கே.பி.மாரியப்பன், இன்ஷூரன்ஸ் நிபுணர்

‘‘தொடர்ந்து ஐந்து வருட காலமாக பாலிசி வைத்திருப்பதால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. பாலிசி போட்டு 48 மாதங்கள் முடிந்துவிட்டாலே பெரும்பாலான நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளும் உரிமை வந்துவிடும். உயர் ரத்த அழுத்தம் குறித்துக் காப்பீடு நிறுவனத்திற்குத் தெரிவிப்பது அவசியம். இதற்காக, அதிக பிரீமியம் செலுத்தத் தேவை யில்லை. நிறுவனத்திற்கு நிறுவனம் சில விதிமுறைகள் மாறுபடுவதால், வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்வது சிறந்தது.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சந்தை சரிவு... முதலீட்டுக்கு ஏற்ற தருணமா?

தனியார் கல்லூரியில் நூலகராகப் பணிபுரியும் எனது ஆண்டு வருமானம் ரூ.4,80,000. வரிச் சேமிப்பு மற்றும் 10 வயது மகளின் கல்விச் செலவுக்கு நான்கு காப்பீடு பாலிசிகளுக்கு (என்டோவ்மென்ட், மணிபேக், மருத்துவக் காப்பீடு) ரூ.62,000 கட்டி வருகிறேன். மகளின் உயர்கல்விச் செலவு, எனது ஓய்வூதியத்திற்காக மாதம் ரூ.3,500 மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆலோசனை கூறுங்கள்.

முத்துக்குமரன், வள்ளியூர்

எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்

‘‘பாலிசிகளின் முதிர்வுத் தொகையைத் திரும்பவும் இன்ஷூரன்ஸ் பாலிசியில் முதலீடு செய்யாமல், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குறிப்பாக, பேலன்ஸ்டு அட்வான்டேஜ் அல்லது ஹைபிரீட் ஈக்விட்டி ஃபண்டுகளில் நீண்ட கால அடிப்படையில் (7-8 ஆண்டுகள்) முதலீடு செய்து வாருங்கள். உங்களது புதிய முதலீட்டில் 2,000  ரூபாயை ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்டில் 12 ஆண்டுகள் முதலீடு செய்து ஆண்டுக்குச் சராசரியாக 12% வருமானம் எதிர்பார்த்தால் ரூ.6,16,000 கிடைக்கக்கூடும். 1,500 ரூபாயை, டாடா ரிட்டையர்மென்ட் சேவிங்ஸ் ஃபண்டில் முதலீடு செய்து, ஆண்டுக்குச் சராசரியாக 12% வருமானம் எனக் கணக்கிட்டால், ரூ.4,62,000 கிடைக்க வாய்ப்புள்ளது. அவ்வப்போது கிடைக்கும் தொகையை ரூ.5,000/10,000 என முதலீடு செய்து ஓய்வூதியத் தொகையை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.’’

65 வயதான நான், அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளேன். இவற்றுக்கான மருத்துவச் செலவுகளை வருமான வரிக்கழிவிற்குக் காட்ட முடியுமா?

நாகராஜன், பொள்ளாச்சி

எஸ்.பாலாஜி, சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

‘‘வருமான வரிச் சட்டம் விதி எண் 11DD-ன்படி, கேன்சர், எய்ட்ஸ், சிறுநீரகம் செயலிழப்பு உள்ளிட்ட சில குறிப்பிட்ட வியாதிகளுக்கான மருத்துவச் செலவுகளை மட்டுமே வருமான வரிக் கழிவுக்குக் காட்ட முடியும். அந்த வியாதிகளின் பட்டியலில் ரத்த அழுத்தமும், சர்க்கரை வியாதியும் வராது. எனவே, இவற்றுக்கான சிகிச்சை செலவை வருமான வரிக்கழிவில் காட்ட முடியாது.’’

எனது எட்டு வயது மகளின் மேற்படிப்புக்காக மியூச்சுவல் ஃபண்டில் மாதம் இருபதாயிரம் ரூபாய் முதலீடு செய்ய ஆலோசனை கூறவும்.

கோவிந்தராஜ், திருவில்லிபுத்தூர்

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா

‘‘உங்கள் மகளுக்காகச் சேமிக்க இன்னமும் சுமார் 8-9 வருடங்கள் காலஅவகாசம் உள்ளது. நீங்கள் மாதம் ரூ.20,000 முதலீடு செய்யும்பட்சத்தில், 8 வருடங்களில் அது ரூ.32 லட்சமாக வளர வாய்ப்புள்ளது (12% வருடாந்திரக் கூட்டு லாபம் என்ற அனுமானத்தில்). உங்கள் முதலீட்டிற்கு ஒரு பரந்துபட்ட, பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்கவும். உதாரணமாக, ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் நெக்ஸ்ட் 50 மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. ஹைபிரீட் ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவற்றில் தலா ரூ.5,000 முதலீடு செய்யலாம்.’’

முப்பது வயதுடைய நான், எல் & டி இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர், ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் மற்றும் எல் & டி எமர்ஜிங் பிசினஸ் ஆகியவற்றில் ஒவ்வொரு மாதமும் தலா 10,000 ரூபாய் முதலீடு செய்துவருகிறேன். அதிக ரிஸ்க் எடுக்க விருப்பமுள்ள எனது போர்ட் ஃபோலியோ சரியாக உள்ளதா?

சிவகுமார், கோவை

ஸ்ரீனிவாசன், நிதி ஆலோசகர், மணிகேர்

‘‘உங்கள் ஃபண்ட் தேர்வு, உங்களுடைய அதிக ரிஸ்க் எடுக்கும் திறனைப் பிரதிபலிக்கிறது. எல் & டி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிதிக்குப் பதிலாக     எஸ்.பி.ஐ அல்லது ரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஃபண்டை நீங்கள் தேர்வு செய்யலாம். மற்ற இரண்டு ஃபண்டுகள் நல்ல தேர்வுதான். இந்த ஃபண்டுகளில் ரிஸ்க் அதிகமாக இருப்பதால், நீண்ட காலத்திற்கு எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வது நன்று. அப்போதுதான் அது சந்தை ஏற்ற இறக்கங்களைச் சமன்செய்து நல்ல வருமானத்தைத் தரக்கூடும்.’’

சந்தை சரிவு... முதலீட்டுக்கு ஏற்ற தருணமா?

கப்பல் அல்லது விமானம் மூலம்தான் ஏற்றுமதி செய்ய இயலுமா? என்னைப் போன்ற மிகச் சிறிய உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி செய்ய இயலாதா?

வடிவேல், தூத்துக்குடி

எஸ்.சிவராமன், ஏற்றுமதி ஆலோசகர்

‘‘தாராளமாக ஏற்றுமதி செய்யலாம். மிகச் சிறிய உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் வெளிநாட்டு தபால் நிலையங்கள் (Foreign Post Office) வழியாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்குப் பொருள்களை சிறிய அளவில் அனுப்ப இயலும். இதை எளிமைப்படுத்த அரசு ‘Exports by Post Regulations, 2018’ என்ற ஒழுங்கு நடைமுறைகளைக் கடந்த ஜூன் மாதம் அறிவித்துள்ளது.

தபால் வழியே ஏற்றுமதி செய்ய உங்களுக்கு ஐ.இ கோட் (Importer Exporter Code Number) இருக்க வேண்டும். உங்கள் பார்சல் எடை அதிகபட்சம் 30 கிலோ மற்றும் சுற்றளவு 2 மீட்டர் மிகாமல் இருக்க வேண்டும்.

இதற்கான அலுவலகம் சென்னை பாரிமுனையில் உள்ளது. அதன் முகவரி:

Foreign Post Building, Chennai - 600 001.
Ph: 044-25240962 / 25240968
Email: fpmktg@indiapost.gov.in
மேலும் இதுகுறித்து http://www.tamilnadupost.nic.in/msvc/foreignpost.htm என்ற இணையதளத்தில் விவரங்களை அறியலாம்.’’
 
தொகுப்பு: தெ.சு.கவுதமன்

சந்தை சரிவு... முதலீட்டுக்கு ஏற்ற தருணமா?

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
கேள்வி-பதில் பகுதி,
நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2.
nav@vikatan.com.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism