Published:Updated:

ஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடி கடன்... எஸ்.எம்.இ-களுக்குக் கைகொடுக்குமா?

ஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடி கடன்... எஸ்.எம்.இ-களுக்குக் கைகொடுக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
ஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடி கடன்... எஸ்.எம்.இ-களுக்குக் கைகொடுக்குமா?

பிசினஸ் கடன்

ஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடி கடன்... எஸ்.எம்.இ-களுக்குக் கைகொடுக்குமா?

பிசினஸ் கடன்

Published:Updated:
ஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடி கடன்... எஸ்.எம்.இ-களுக்குக் கைகொடுக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
ஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடி கடன்... எஸ்.எம்.இ-களுக்குக் கைகொடுக்குமா?

ணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி அறிமுகம் போன்றவற்றால் எம்.எஸ்.எம்.இ-கள் எனப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நெருக்கடியைச் சந்தித்து மீண்டு வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனம் நிதிச் சிக்கலில் சிக்கி வீழ்ச்சியடைந்ததால், ரிசர்வ் வங்கி மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் நிதிச் சிக்கலில் மாட்டிக் கொண்டன. இதனால், புதிதாகக் கடன் தரமுடியாத நிலை ஏற்படவே, சிறு மற்றும் குறு நிறுவனங்களின் பணப்புழக்கம் கணிசமாகக் குறைந்து, தொழில் நடத்தத் தேவையான மூலதனம் இல்லாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டது.

ஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடி கடன்... எஸ்.எம்.இ-களுக்குக் கைகொடுக்குமா?

நிதிச் சிக்கலில் தவிக்கும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தத் துறையில் சார்பில் வலுவான கோரிக்கை எழுந்தது. அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசும் சிறு நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 2-ம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு எளிதாகக் கடன் வழங்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடி கடன்... எஸ்.எம்.இ-களுக்குக் கைகொடுக்குமா?

சமர்பிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்

எம்.எஸ்.எம்.இ-கள் கடன்பெறுவதற்காக, psbloansin59minutes.com என்கிற பெயரில் ஒரு வலைதளம் தொடங்கப்படும். இந்தக் கடன் வேண்டும் என்கிறவர்கள் இந்த வலைதளத்துக்குள் சென்றால், நான்கு முக்கியமான விஷயங்களைச் சமர்பிக்க வேண்டும். ஒன்று, கடன் கேட்பவரின்     ஜி.எஸ்.டி நம்பர். ஒருவர் இதுவரை ஜி.எஸ்.டி-யின் கீழ் பதிவு செய்யவில்லை எனில், இந்தக் கடனைப் பெறமுடியாது. ஜி.எஸ்.டி-யின் கீழ் பதிவுசெய்து, அந்த எண்ணைப் பெற்றபிறகே இந்தக் கடனுக்காக விண்ணப்பம் செய்ய முடியும்.

இரண்டாவது, வருமான வரித் தாக்கல். பொதுவாக, மூன்று ஆண்டுகள் வருமான வரித் தாக்கல் செய்திருந்தால் மட்டுமே இந்தக் கடன் பெற விண்ணப்பிக்க முடியும். ஆனால், ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தவர்கள்கூட இதில் விண்ணப்பிக்கலாம். 

ஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடி கடன்... எஸ்.எம்.இ-களுக்குக் கைகொடுக்குமா?

மூன்றாவதாக, ஆறு மாத காலத்துக்கான வங்கிக் கணக்கு தொடர்பான பரிவர்த்தனையைச்  சமர்பிக்க வேண்டும். நான்காவதாக, தொழிலை நடத்துபவர்கள் மற்றும் அந்தத் தொழில் நிறுவனத்தில் இயக்குநர்களாக இருப்பவர்களின் தனிப்பட்ட, கல்வி, தொழில் நிறுவனத்தில் அவர்களுக்கு இருக்கும் பங்கு ஆகியவை  குறித்தத்  தகவல்களைத் தரவேண்டும்.

இந்தத் தகவல்கள் எல்லாவற்றையும் நீங்கள் தந்து முடித்த ஒரு மணி நேரத்தில் உங்களுக்குக் கடன் கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரிந்துவிடும். இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 72,000 நிறுவனங்கள் பயன்பெறும்.

பாசிட்டிவ் பாயின்ட்டுகள்

இந்தத் திட்டத்தில் பல பாசிட்டிவான விஷயங்கள் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. முன்பெல்லாம் சிறு தொழில் கடன் பெற 20 - 25 நாள்கள் ஆகும். ஆனால், தற்போது 59 நிமிடங்களிலேயே ஒருவர் கடன் பெறத் தகுதியானவரா, இல்லையா என்பது தெரிந்து விடும். ஒருவருக்குக் கடன் கிடைக்கத் தகுதி உண்டு எனில், அடுத்த 7 - 8 நாள்களில் கடன் கிடைக்க வாய்ப்புண்டு.

கடன் தருவதற்கான ஒப்புதல் கிடைக்கும் வரை, எல்லாமே ஆன்லைனில் செய்யப்படும். மனிதர்களின் தலையீடு என்பது இல்லாமல் இருப்பதால், தேவையில்லாத காலதாமதமோ அல்லது லஞ்சம் போன்ற விஷயங்களோ இருக்காது.

இந்தத் திட்டத்தின்மூலம் அளிக்கப்படும் கடன் தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை. இந்த வரம்புத் தொகைக்கு இன்ஷூரன்ஸ் இருப்பதால், அடமானமாக எந்தச் சொத்தினையும் தர வேண்டியதில்லை.

ஒதுக்கீடு எவ்வளவு?

   இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசாங்கம் ஏறக்குறைய 9,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக 20 தொழில் மையங்களை அமைப்பதுடன், 100 உபகரண அறைகளையும் அமைக்க ஏறக்குறைய 6,000 கோடி ரூபாயை மத்திய அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

   ஒரு கோடி ரூபாய்க்குத் தொழில் செய்யும் சிறு, குறு மற்றும் நடுத்தர  நிறுவனங்கள் ஜி.எஸ்.டி மூலம் வரித் தாக்கல் செய்துவரும்பட்சத்தில், இந்தக் கடனுக்கு வட்டியிலிருந்து 2% சலுகை தருவதற்காக ரூ.1,100 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடி கடன்... எஸ்.எம்.இ-களுக்குக் கைகொடுக்குமா?

100 நாள்களில்...

   இந்தத் திட்டத்தினை 100 நாள்களில் செயல்படுத்த முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கடனைப் பெறுவதற்காக ஏறக்குறைய 80 எம்.எஸ்.எம்.இ தொழில் மையங்களில் (Cluster) அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகளுக்குத் துணையாக தொழில் அமைப்புகள், வங்கிகள், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் எனப் பலரும் இந்த அதிகாரிகளுக்கு உதவுவார்கள்.

சாத்தியமா?

   இந்தத் திட்டம் எந்த அளவுக்குச் சாத்தியப்படும் என கேப்பிட்டல் மார்க்கெட் சர்வீஸஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி எஸ்.சிவக் குமாரிடம் கேட்டோம். ‘‘கிரிசில் நிறுவனம் வெளி யிட்ட அறிக்கையின்படி, வங்கிகளின் வாராக் கடன் ஏற்கெனவே ரூ.11.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது மொத்த வங்கிகள் அளித்த மொத்தக் கடனில் 14% ஆகும். வாராக் கடனை வசூலிக்க வங்கிகள் படாதபாடு பட்டு வருகின்றன.

  இந்த நிலையில், மத்திய அரசாங்கம் அறிவித்திருக்கும் 1 மணி நேரத்தில் 1 கோடி ரூபாய் கடன் எந்த அளவுக்குச் சாத்தியப்படும் என்பது சந்தேகமாகவே இருக்கிறது. ஏற்கெனவே கடன் பெற்றவர், கடன் பணத்தை சரியாகத் திரும்பக் கட்டியிருக்கிறரா என்பதைக் காட்டும் சிபில் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. எனவே, கடன் தரப்படும் எனக் கொள்கைரீதியாக அளிக்கப்படும் ஒப்புதல் எதன் அடிப்படையில் தரப்படுகிறது என்று தெரியவில்லை. மத்திய அரசாங்கம் ஒரு தனி வங்கி அமைத்தால் மட்டுமே இந்தக் கடனை வழங்குவது சாத்தியம்.

  ஏற்கெனவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நமது வங்கிகள் கூடுதலாகக் கடன் தந்து, அதை முறையாகத் திரும்ப வசூலிக்கும் திறமை இருக்கிறதா என்பது சந்தேகம்தான். இதையெல்லாம் கவனிக்காமல் செய்தால், நமது வாராக் கடன் அதிகரிக்கவே செய்யும் என்பதில் சந்தேகமில்லை’’ என்றார்.

முடிவாக...

   இந்தத் திட்டத்தின்மூலம் தரப்படும் கடன் எல்லா சிறுதொழில்முனைவர்களுக்கும்  கிடைக்குமா என்கிற சந்தேகம் ஒருபக்கம் இருந்தாலும், மத்திய அரசு சொல்லும் நிபந்தனை களின்படி நடக்கும் தொழில் நிறுவனங்கள் இந்தக் கடன் பெற வாய்ப்புண்டு என்கிற நம்பிக்கையை பல தொழில் நிறுவனங்களிடம் ஏற்படுத்தி இருப்பதை மறுப்பதற்கில்லை!

- பா.முகிலன்

‘‘ஆன்லைன் திட்டம் அலைச்சலைத் தவிர்க்க உதவும்!’’

சிவராமன், தொழில் ஆலோசகர்

“சிறுதொழில் நிறுவனங்களுக்கு ‘லோன் கேம்ப்’ (Loan camp) என்று ஒன்றை நடத்துவார் கள். அப்போது இந்தந்த ஆவணங்கள் தேவை என்று முன்கூட்டியே குறிப்பிட்டுச் சொல்லிவிடுவார்கள். அதன்படி கடன் முகாமுக்கு வருகிறவர்களிடம், அவர்கள் கொண்டுவரும் ஆவணங்களைச் சரிபார்த்து, எல்லாம் சரியாக இருக்கிறது என்றால், உடனே அங்கேயே கடன் வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை (sanction letter) வழங்கும் வழக்கம் இருந்தது. அதன்பிறகு, வேறு ஏதாவது ஆவணம் தேவைப்பட்டால், அதைக் கேட்டு வாங்கிப் பெற்றுக்கொள்வார்கள். இதுபோன்ற வேலைகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட நபர்களே நேரடியாகச் செய்ய வேண்டியதிருந்தது.

ஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடி கடன்... எஸ்.எம்.இ-களுக்குக் கைகொடுக்குமா?

தற்போது, இதையெல்லாம் ஆன்லைனிலேயே செய்துகொள்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்தின் ஜி.எஸ்.டி விவரங்களை ஜி.எஸ்.டி இணையதளத்திலிருந்தே நேரடியாக எடுத்துக்கொள்ளும் வகையில் இணைத்துக் கொண்டுவிட்டார்கள். இதனால், அந்த ஆவணம் உண்மையானதா, இல்லையா என்ற பயம் வங்கியாளர்களுக்கு ஏற்படாது. அதாவது, ஆவணங்கள் வழங்குதல், சரிபார்ப்பு போன்றவற்றைத் தானியங்கி முறைக்கு (Automation) மாற்றிவிட்டார்கள். இதனால் தேவையற்ற அலைச்சல் தவிர்க்கப்படும்.

மேலும், வங்கி மேலாளருக்கும் தொழில் நிறுவனத்தைச் சேர்ந்தவருக்கும் இடையே முன்னர் மோதல் ஏற்பட்டு, அதனால் கடன் பெறுவதில் சிக்கல் போன்ற சூழல் இனி வராது. மற்றபடி கடன் வழங்குவதற்கான நடைமுறைகள் மற்றும் கடன் வழங்குவதற்குரிய தகுதி மதிப்பீடு செய்வது போன்றவற்றில் மாற்றம் ஏதுமில்லை. ஆவணங்களைத் தாக்கல் செய்வதிலிருந்து சரிபார்ப்பு வரை அனைத்துமே ஆட்டோமேஷன் ஆகிவிட்டதால், கடன் பெறுவதற்கான ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட சிறுதொழில் நிறுவனங்களுக்கு, பிரதமர் அறிவித்தபடி ஒரு மணி நேரத்திலேயே அவர்கள் கேட்ட கடன் தொகை கிடைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.

இதுநாள் வரை தொழில் செய்வதற்காகக் கடன் பெறுவதற்கு யாரிடம் செல்வது, எந்த அதிகாரியைப் பார்ப்பது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தவர்கள் மற்றும் வேலை நேரத்தில் வங்கிக்கு அலைந்துகொண்டிருந்தால் பணிகள் பாதிக்குமே என்று வங்கிக்குச் செல்லத் தயங்கிக் கொண்டிருந்தவர்கள் போன்றவர்களுக்கு இந்தத் திட்டம் உண்மையிலேயே வரப்பிரசாதம்.

அதேசமயம், இந்த ஒரு மணி நேரக் கடன் என்பது, ஏற்கெனவே தொழில் செய்துகொண்டிருப்பவர்களுக்கு மட்டும்தான். ஏனெனில், அவர்களிடம்தான் நிறுவனத்தின் பதிவெண், ஜி.எஸ்.டி, வருமான வரிக் கணக்குத் தாக்கல், வங்கியில் நடப்புக் கணக்கு உள்ளிட்ட விவரங்கள் எல்லாம் ஏற்கெனவே இருக்கும். அவற்றை ஆன்லைனிலேயே சரிபார்க்க முடியும் என்பதால், கடன் பெறத் தகுதி இருந்தால், அவர்களுக்கு உடனடியாகக் கடன் கிடைத்துவிடும். ஒருவேளை, ஆவணங்கள் சரியில்லை அல்லது வேறு ஏதாவது காரணம் என்றாலும், கடன் கிடைக்கும் அல்லது கிடைக்காது என்பது உடனடியாகத் தெரிந்துவிடும். வங்கியில் கடன் கிடைக்காது எனத் தெரியவந்தால், அவர்கள் மாற்று வழி என்னவென்பதைப் பார்த்துக்கொண்டு செல்லாம்.

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர், சிறு தொழில் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவும் வகையில், திருப்பூர் போன்ற தொழில் கூடங்கள் அமைந்துள்ள பகுதிகளில், திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு போன்ற தொழில் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சிறப்பு அலுவலகங்களை அமைத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள்.”

முத்ரா கடன்... வாராக் கடன் குறைகிறது!

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சிகளுக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டது பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY). இது, குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் (Micro Units Development and Refinance Agency - MUDRA) மூலமாகச் செயல்படுத்தப்படுகிறது. முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கியல்ல. இது ஒரு அரசின் திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

பத்து லட்சத்திற்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணைத் தொழில் சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களுக்குப் பொதுவுடைமை வங்கிகள், தேசிய வங்கிகள் மட்டும் மாநில கூட்டுறவு வங்கிகளின் மூலமாக இந்தக் கடன் வழங்கப்படுகிறது. 2015 ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் மூலம் 2018 மார்ச் மாதம் வரை, சுமார் 5.72 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் அளித்த தொழில் கடன் வாராக் கடனாக மாறுவது அதிகரித்துவரும் நிலையில், முத்ரா கடன் திட்டத்தின்மூலமாக அளிக்கப்பட்ட கடன்மூலம் உருவான வாராக் கடன் குறைந்து வருகிறது. 2018 மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்பட்ட முத்ரா கடனில், சுமார் 2.02 கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும், இதில் 9,770 கோடி ரூபாய் வாராக்கடன் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.  அதே சமயம் 2017-18-ம் நிதியாண்டின் இறுதியில் வாராக் கடன் விகிதம், முந்தைய ஆண்டில் காணப்பட்ட 6.15 சதவிகிதத்திலிருந்து 4.83 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism