Published:Updated:

அதிரடி ஆட்டம்! - ஐ.சி.சி-யின் 2 விருதுகளைத் தட்டிச் சென்ற ஸ்மிரிதி மந்தனா

அதிரடி ஆட்டம்! -  ஐ.சி.சி-யின் 2 விருதுகளைத் தட்டிச் சென்ற ஸ்மிரிதி மந்தனா
அதிரடி ஆட்டம்! - ஐ.சி.சி-யின் 2 விருதுகளைத் தட்டிச் சென்ற ஸ்மிரிதி மந்தனா

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிரிதி மந்தனா இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி-யின் இரண்டு விருதுகளைத் தட்டிச்சென்றுள்ளார்.

அதிரடி ஆட்டம்! -  ஐ.சி.சி-யின் 2 விருதுகளைத் தட்டிச் சென்ற ஸ்மிரிதி மந்தனா


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த வருடத்துக்காகச் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பெண்கள் கிரிக்கெட்டில் சாதித்த வீராங்கனைகளுக்கு ஐ.சி.சி விருது வழங்கிக் கௌரவித்து வருகிறது. இந்த வருடத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதை இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா தட்டிச் சென்றுள்ளார். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கும் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை ஆஸ்லே ஹீலி சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.

அதிரடி ஆட்டம்! -  ஐ.சி.சி-யின் 2 விருதுகளைத் தட்டிச் சென்ற ஸ்மிரிதி மந்தனா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு வருட இறுதியில் அந்த வருடத்துக்கான ஐ.சி.சி கிரிக்கெட் அணியின் பட்டியலை வெளியிட்டு வீரர்களைக் கௌரவப்படுத்தும். இந்த ஆண்டுக்கான ஒருநாள் மற்றும் டி-20 பெண்கள் கிரிக்கெட் அணியை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்மன் ப்ரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா மற்றும் பூனம் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் ஸ்மிரிதி மந்தனா ஒரு நாள் மற்றும் டி-20 கிரிக்கெட் அணிகள் இரண்டிலும் இடம்பிடித்துள்ளார். ஹர்மன் ப்ரீத் கவுர் ஐசிசி டி-20 கிரிக்கெட் அணியின் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பூனம் யாதவ் டி-20 கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

அதிரடி ஆட்டம்! -  ஐ.சி.சி-யின் 2 விருதுகளைத் தட்டிச் சென்ற ஸ்மிரிதி மந்தனா


 இந்திய மகளிர் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிரிதி மந்தனா அதிரடியான ஆட்டத்துக்குப் பெயர் போனவர். முதல் பந்தில் இருந்தே களத்தில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டும் என்று விரும்புவர். பெண்கள் கிரிக்கெட்டின் ஷேவாக் என்றே கூறலாம். இந்த வருடம் நடைபெற்ற பெண்கள் உலகக்கோப்பை டி-20 தொடரில் இவர் சிறப்பாகச் செயல்பட்டார். 5 போட்டிகளில் 178 ரன்களை எடுத்தார். ஹர்மன் ப்ரீத் கவுர் 183 ரன்களை எடுத்து அசத்தினார்.

இரண்டு விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டது குறித்து மந்தனா கூறுகையில், “இந்த விருது என்னைப் பொறுத்த வரையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், ஒரு விளையாட்டு வீரராக உங்கள் அணி வெற்றி பெறுவதற்காக நீங்கள் ரன்களைக் குவிக்கிறீர்கள். இதுபோன்ற விருதுகள் உங்கள் உழைப்பை அங்கீகரிக்கிறது. மேலும், கடினமாக நீங்கள் உழைப்பதற்கு உந்துதலாக அமைகிறது. தென்னாப்பிரிக்காவில் அடித்த சதம் திருப்திகரமாக இருந்தது. ஐ.சி.சி பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் நான்கு ஆட்டத்தில் விளையாடிய விதம் மறக்க முடியாதது’’ என்றார். 

அதிரடி ஆட்டம்! -  ஐ.சி.சி-யின் 2 விருதுகளைத் தட்டிச் சென்ற ஸ்மிரிதி மந்தனா

ஐ.சி.சி கனவு டி-20 கிரிக்கெட் அணியின் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து ஹர்மன் ப்ரீத் கவுர் பேசுகையில், “இது உண்மையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் அதிக அளவிலான டி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை.  நாங்கள் டி-20 தொடரில் சிறப்பாகவே செயல்பட்டோம். இந்தப் பெருமைகள் அனைத்து அணி வீரர்களையும் சேரும். கடின உழைப்புக்குக் கிடைத்த பயன். இந்த விருது எனக்கு மேலும் தன்னம்பிக்கையை அளிக்கிறது. பி.சி.சி.ஐ என் மீது வைத்துள்ள நம்பிக்கை வைத்துள்ளது. வருங்காலத்தில் சிறப்பாகச் செயல்படவே விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.