Published:Updated:

குரூப் 1, குரூப் 2, குரூப் 4...2019-ம் ஆண்டில் களைகட்டும் அரசு வேலைகள்! #TNPSC

குரூப் 1, குரூப் 2, குரூப் 4...2019-ம் ஆண்டில் களைகட்டும் அரசு வேலைகள்! #TNPSC
குரூப் 1, குரூப் 2, குரூப் 4...2019-ம் ஆண்டில் களைகட்டும் அரசு வேலைகள்! #TNPSC

2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் குரூப் 1, மே மாதத்தில் குரூப் 2, ஜூன் மாதத்தில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும்  என்று கால அட்டவணையில் தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC). இதனால் 2019-ம் ஆண்டில் அரசு வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு அடுத்தடுத்து தேர்வுகளால் அரசு வேலையில் சேர வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

சேர்ந்தால் அரசு வேலையில்தான் சேர்வேன் என்று தீவிரமாக போட்டித் தேர்வுகளுக்கு படித்து வருபவர்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்,  மத்திய பணியாளர் தேர்வாணையமும் 2019-ம் ஆண்டு நடத்த உத்தேசித்துள்ள தேர்வுகளுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள  தேர்வு கால அட்டவணை
 துறை விண்ணப்பம் வழங்கப்படும் தேதி தேர்வு நடத்தப்படும் நாள்
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறைக்கு உதவி கணினி பொறியாளர் மற்றும் உதவி தகவல் பகுப்பாளர் பணி 22.01.2019 07.04. 2019
கைத்தறி மற்றும் டெக்ஸ்டைல் துறையில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணி 7.1.2019 20.04.2019
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் விடுதி மேற்பார்வையாளர் பணி 02.01.2019 27.04.2019
மீன்வளத் துறையில் உதவி ஆய்வாளர் பணி 10.01.2019 04.05. 2019
கருவூலங்கள் மற்றும் கணக்கு பிரிவில் கணக்கு அலுவலர் பணி 28.01. 2019 05.05.2019 
அருங்காட்சியக காப்பாளர் பணி 24.01.2019  19.05. 2019 
தேர்வுகள் அறிவிப்பு வெளியாகும் மாதங்கள்
குரூப் 1 ஜனவரி 2019
 இன்ஜினீயரிங் தேர்வு பிப்ரவரி 2019
வேலை வாய்ப்பு துறையில் உதவி பயிற்சி அலுவலர் பணி பிப்ரவரி 2019
கல்லூரி நூலகர் மற்றும் உதவி நூலகர் பணி மார்ச் 2019
உதவி சுற்றுலாத் துறை அலுவலர் பணி ஏப்ரல் 2019
 குரூப் 2   மே 2019
குரூப் IV  ஜூன் 2019

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இதர தேர்வுக்கான விவரங்களையும் வழங்கியுள்ளது. இதனை http://www.tnpsc.gov.in/2019_ARP_Planner_31_12_2018.pdf என்ற தளத்தில் பார்க்கலாம். 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கும், வன அதிகாரி பணிக்கும் 19.02.2019 முதல் 18.03.2019 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும் இதற்கான முதல்நிலை தேர்வு 02.06. 2019 அன்று நடக்கும் என்றும் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதர தேர்வுக்கான விவரங்கள் http://www.upsc.gov.in/sites/default/files/Exam-Calender-2019-Engl_1.pdf என்ற தளத்தில் பார்வையிடலாம்.

மேற்கண்ட அட்டவணைகளின்படி, தேர்வுக்குத் தயாராகும்படி  தேர்வாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது  தேர்வாணையம்.