வானம் மழபொழிஞ்சா
வயக்காடு வெளையுமுன்னு
வாயப் பொளந்த சனம்
வக்கத்துக் கெடக்குறோமே!

ஏருழுது நட்ட நெலம்
எதையாச்சும் கொடுக்குமுன்னு
ஊரே நெனச்சிருக்க
உருக்குலைஞ்சு துடிக்குறோமே!

தானம் தருமமின்னு
தலைநிமிந்த ஒருகூட்டம்
கையேந்தும் கொடுமையில
கண்ணீர வடிக்கிறோமே!

அண்ணாந்த மரமெல்லாம்
மல்லாந்து சரிஞ்சிருச்சு
திண்ணவூடும் இடிஞ்சிவிழ
தெருவோரம் படுக்குறோமே!

கோரப் புயல் நடுவே
கூடிழந்த மக்களெல்லாம்
போக ஒரு வழியில்லாம
பொதுக் கெணறா நிக்கிறோமே!

சூறக் காத்தடிச்சி
சொந்தங்கள கொன்னுடுச்சி
பாடைகட்ட காசில்லாம
பக்கத்துல பொதைக்கிறோமே!

அழிஞ்ச கணக்கெழுத
அரசாங்கம் வாரதெப்போ?
அறுந்துவிட்ட யோசனையில்
அகதியா தவிக்கிறோமே!

கொழந்த குட்டியெல்லாம்
எதையெதையோ கேட்கையில
எலிகாப்டர் எப்படி வரும்?
எதிர்பார்த்து பொசுங்குறோமே!

அடிச்ச புயலோஞ்சி
ஆறேழு நாளும் ஆச்சி
இதுவரைக்கும் முதல்வரய்யா
வரலேன்னு கசங்குறோமே!

குடிக்கத் தண்ணியில்ல
கொடுக்க ஒரு நாதியில்ல
எதுக்கு ஓட்டளிச்சோம்?
ஏமாந்து விசும்புறோமே!

தடிச்ச வார்த்தைகள
உடைச்சு மந்திரிசொல்ல
அடிக்க ஓங்கும் கைய
அளவோட நிறுத்துறோமே!

உதவி செய்ய நெனைக்காம
ஓடிவந்தும் பாக்காம
கதவுகள மூடிக்கிட்ட
கவருமென்ட்ட வெறுக்குறோமே!

காலம் செஞ்ச கழுத்தறுப்ப
கவலையோட சகிச்சிக்கிட்டு
நூலறுந்த பட்டம்போல
நொந்து ரோட்ட மறிக்கிறோமே!

பசி நெருப்பில் வயிறிருக்க
பதறிப்போய் உசிரிருக்க
நிவாரணப் பொருள் கொடுக்க
தெய்வத்தையும் அழைக்கிறோமே!

யுகபாரதி

வானம் மழபொழிஞ்சா
வயக்காடு வெளையுமுன்னு
வாயப் பொளந்த சனம்
வக்கத்துக் கெடக்குறோமே!

ஏருழுது நட்ட நெலம்
எதையாச்சும் கொடுக்குமுன்னு
ஊரே நெனச்சிருக்க
உருக்குலைஞ்சு துடிக்குறோமே!

தானம் தருமமின்னு
தலைநிமிந்த ஒருகூட்டம்
கையேந்தும் கொடுமையில
கண்ணீர வடிக்கிறோமே!

அண்ணாந்த மரமெல்லாம்
மல்லாந்து சரிஞ்சிருச்சு
திண்ணவூடும் இடிஞ்சிவிழ
தெருவோரம் படுக்குறோமே!

கோரப் புயல் நடுவே
கூடிழந்த மக்களெல்லாம்
போக ஒரு வழியில்லாம
பொதுக் கெணறா நிக்கிறோமே!

சூறக் காத்தடிச்சி
சொந்தங்கள கொன்னுடுச்சி
பாடைகட்ட காசில்லாம
பக்கத்துல பொதைக்கிறோமே!

அழிஞ்ச கணக்கெழுத
அரசாங்கம் வாரதெப்போ?
அறுந்துவிட்ட யோசனையில்
அகதியா தவிக்கிறோமே!

கொழந்த குட்டியெல்லாம்
எதையெதையோ கேட்கையில
எலிகாப்டர் எப்படி வரும்?
எதிர்பார்த்து பொசுங்குறோமே!

அடிச்ச புயலோஞ்சி
ஆறேழு நாளும் ஆச்சி
இதுவரைக்கும் முதல்வரய்யா
வரலேன்னு கசங்குறோமே!

குடிக்கத் தண்ணியில்ல
கொடுக்க ஒரு நாதியில்ல
எதுக்கு ஓட்டளிச்சோம்?
ஏமாந்து விசும்புறோமே!

தடிச்ச வார்த்தைகள
உடைச்சு மந்திரிசொல்ல
அடிக்க ஓங்கும் கைய
அளவோட நிறுத்துறோமே!

உதவி செய்ய நெனைக்காம
ஓடிவந்தும் பாக்காம
கதவுகள மூடிக்கிட்ட
கவருமென்ட்ட வெறுக்குறோமே!

காலம் செஞ்ச கழுத்தறுப்ப
கவலையோட சகிச்சிக்கிட்டு
நூலறுந்த பட்டம்போல
நொந்து ரோட்ட மறிக்கிறோமே!

பசி நெருப்பில் வயிறிருக்க
பதறிப்போய் உசிரிருக்க
நிவாரணப் பொருள் கொடுக்க
தெய்வத்தையும் அழைக்கிறோமே!

யுகபாரதி