Published:Updated:

முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் கொள்ளை - வட மாநிலத்தவரின் கைவரிசையா? #Ariyalur

முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் கொள்ளை - வட மாநிலத்தவரின் கைவரிசையா? #Ariyalur
முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் கொள்ளை - வட மாநிலத்தவரின் கைவரிசையா? #Ariyalur

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் ஏழரை சவரன் நகை மற்றும் 25,000 பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள். 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தற்பொழுது திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டி மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி பானு இவர் தன் மகனுடன் கடந்த ஒரு வாரமாகத் திருச்சியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இவரது வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அருகில் இருந்தவர்கள் பானுவுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வீட்டுக்கு வந்து பார்த்த பானு வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த ஏழரை சவரன் நகை, 500 கிராம் வெள்ளி, 25,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து பானு ஜெயங்கொண்டம் போலீஸாருக்கு புகார் செய்தார். வழக்கு பதிவு செய்துகொண்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், கொள்ளையர்கள் குறித்த கைரேகை சேகரிக்கப்பட்டு கொள்ளையர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். இக்கொள்ளை வட மாநிலத்தவர்களின் கை வரிசையா என்ற கோணத்திலும் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.