‘தமிழ் எண்களில் ஆறு ஏழு எட்டுக்குப் பிறகு ‘ஒண்பு’ என்ற உச்சரிப்பே பொருந்துகிறது. அதே போல அறுபது, எழுபது, எண்பதுக்குப் பிறகு ‘ஒன்பது’ பொருந்துகிறது. ஏன் இவ்வாறில்லாமல் ஒன்பது தனியாக விளங்குகிறது?”

-அபிராமி சுப்பிரமணி

“தமிழ்மொழியில் 9 என்ற எண்ணுக்கு ஆதிப்பெயர் ‘தொள்’ / தொண்டு. தொள் என்பது ஆதிப்பெயராக இருப்பதால்தான் எழுபது எண்பதுக்கு அடுத்து ஒன்பது என்றெழுதாமல், தொள்+நூறு = தொன்னூறு என்று எழுதுகிறோம். தொள்+பது = 9, தொள் நூறு = 90, தொள் ஆயிரம் = 900.

தொள்ளுவது என்றால் துளைப்பது. 1-9 எனும் வரிசையில் அடுத்து 0 எனும் பாழுள் `தொள்ளு’வதால் தொள் / தொன்பது! தொன்பதே மருவி ஒன்பதாகியிருக்கிறது. “ ‘தொண்’டு தலையிட்ட பத்துக்குறை’ - தொல்காப்பியம், ‘தொண்’டு படுதி வவின் - மலைபடுகடாம் நூல்களிலும் இதற்கான தரவுகள் உள்ளன. ‘தொண்டு’க் கிழம் என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்களே? 90 வயது கடந்த பெரியவர் என்று பொருள்!

இந்தக் கேள்விக்கு பதில்சொல்வதன் மூலம் இன்னொரு வேண்டுகோளையும் வைக்கிறேன். `தொள்’ நம் ஆதிச்சொல்லின் மூலம் வந்த 9 எனும் எண்ணை, இகழ்ச்சி/ எள்ளல் ஆக்காதீர்!

- முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர், பேராசிரியர் மற்றும் ‘அறியப்படாத தமிழ்மொழி’ நூலாசிரியர்

“பண்பலை அலைவரிசை எண்கள் ஏன் எப்போதும் பின்னத்திலேயே இருக்கின்றன?”

- ஷ்யாம், தஞ்சாவூர்.

“அப்படி எந்த விதிமுறையும் இல்லை. FM என்பது Frequency Modulation. அதற்கு ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு Bandwidh (அலைவரிசை) நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் வானொலி நிலையங்களின் அலைவரிசை என்பது 90-லிருந்து 108 வரைக்குமானது. இப்படியான வானொலி நிலையங்கள் தொடங்கும்போது அரசு சில கட்டுப்பாடுகளையும், நிபந்தனை களையும் விதித்தது. அதன்படி டவருடைய அதிகபட்ச பலம், தட்பவெப்ப சூழ்நிலை, மேகமூட்டம், வானிலை இதன்பொருட்டு ஒரு பண்பலைக்கும், இன்னொரு பண்பலைக்கும் இடையே 800 மெகா ஹெர்ட்ஸ் வித்தியாசம் இருக்கவேண்டுமென்று அரசு நிர்ணயித்தது. எடுத்துக்காட்டாக, ரேடியோ சிட்டி 91.1 என்றால், அடுத்து வரும் அலைவரிசை 91.9-ல் இருக்கும். அதற்கடுத்து வரும் பண்பலை, 800 மெகா ஹெர்ட்ஸ் வித்தியாசத்த்தில் - 92.7ல் இருக்கும். இப்படி எல்லாமே 800 மெகா ஹெர்ட்ஸ் வித்தியாசத்தில் இருக்கும். அப்படி 800 மெகா ஹெர்ட்ஸ் வித்தியாசத்தில், பின்னமில்லாமல் எண் கிடைத்தால் எடுப்பதும் உண்டு. உதாரணமாக திருச்சியில் ரேடியோ மிர்ச்சி 95.0-ல் எடுத்திருக்கிறார்கள்.”

- ராஜவேல் நாகராஜன் ரேடியோ ஜாக்கி

“என்னுடைய சிந்தனையில் ஒரு ஆண்ட்ராய்டு ஆப் பற்றிய ஐடியா உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக எந்த அறிவும் எனக்குக் கிடையாது. இதுபற்றி வெளியே யாரிடம் கலந்தாலோசிப்பது; எங்கே பதிவு செய்யவேண்டும்? என் ஐடியாவை யாரிடமாவது கூறி அதை அவர் திருடிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் உள்ளது. தயவுகூர்ந்து நல்ல ஆலோசனை கூறுங்கள்.”

- ஷ்யாம், தஞ்சாவூர்.

“ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் ஆப் டெவலப் செய்து தருவதற்கென்றே நிறைய நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. அவர்களை நாடி உங்கள் ஐடியாவைக் கூறலாம். அந்த ஐடியா வெளியே கசியாமல் இருப்பதற்காக அந்நிறுவனத்துடன் NDA (NON DISCLOSURE AGREEMENT) ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம். முதலில் ஆப் ஐடியாவை, அந்நிறுவனத்துடன் மேலோட்டமாகப் பகிர்ந்துகொள்ளுங்கள். ஆப் தயாரிப்பது முடிவான பின்பு, முழு ஐடியாவைக் கூறி, பின்னர் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம். பின்னர் ஆப் வெளியிடும் சமயத்தில் அதற்கான காப்புரிமையையும் பெற்றுக்கொள்ளலாம். NDA ஒப்பந்தம் சட்டபூர்வமானது என்பதால் அதை அந்நிறுவனம் மீறுவது சட்டவிரோதமாகும். முதலில் ஒரு சிறுநிறுவனத்தை அணுகி உங்கள் ஆப் வடிவமைக்கும் பணியைத் தொடங்குங்கள். செலவும் குறைவாகும். உங்கள் ஆப் வெற்றியடைய என் வாழ்த்துகள்.”

- பரத்வாஜ், ஆப் டெவலப்பர்

“கஜா புயலில் ஹாம் ரேடியோவின் பணி மகத்தானதாக இருந்ததாகக் கேள்விப்பட்டோம். நானும் ஹாம் ரேடியோ பெற என்ன செய்ய வேண்டும்?”

-பழ. தங்கவேல், பெரியாத்து கள்ளிவலசு

“வழக்கம்போல் புயலின்போது இந்த முறையும் அனைத்துத் தொலைத்தொடர்பு சாதனங்களும் செயலிழந்துபோய்விட்டன. அந்தச் சமயத்தில் சென்னை எழிலகத்திலுள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தொடர்ந்து மெட்ராஸ் அமெச்சூர் ரேடியோ சொசைட்டியின் உறுப்பினர்கள் இரவு பகலாக அரசின் பல்வேறு துறையினருக்கு உதவியாக 24 மணி நேரமும் இருந்தனர். இன்றைய சூழலில் ஜப்பானைப் போன்று இந்தியாவிலும் குடும்பத்தில் ஒருவர் ஹாம் ரேடியோ உரிமத்தினைப் பெற்றுக்கொள்வது அவசியம். இதுபோன்ற பேரிடர்காலங்களில் ஹாம் ரேடியோவில் எந்தவித இடையூறும் இன்றி ஒலிபரப்பவும், கேட்கவும் முடியும். இதற்கான தேர்வினை மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ‘வயர்லெஸ் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு’ (Wireless Planning and Cordination Wing) அமைப்பு நடத்துகிறது. எட்டாம் வகுப்புத் தகுதி இதற்குப் போதுமானது. தேர்வுக் கட்டணம் ரூ.100. மேலதிக விவரங்களை மத்திய அரசின் http://www.wpc.dot.gov.in/exam_amatr.asp என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். சென்னையில் இதற்கான வகுப்புகள் MARS, VANDU NET மற்றும் SIARS அமைப்புகளால் இலவசமாக நடத்தப்படுகிறது.”

முனைவர். தங்க.ஜெய்சக்திவேல் உதவிப் பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (மற்றும்) உரிமம் பெற்ற ஹாம் ரேடியோ ஒலிபரப்பாளர் (VU3UOM).