Published:Updated:

புதுப்பொலிவுடன் 90 ஆண்டுகால ரோடு ரோலர்!- ஆச்சர்யபட வைத்த ஏற்காடு

புதுப்பொலிவுடன் 90 ஆண்டுகால ரோடு ரோலர்!- ஆச்சர்யபட வைத்த  ஏற்காடு
புதுப்பொலிவுடன் 90 ஆண்டுகால ரோடு ரோலர்!- ஆச்சர்யபட வைத்த ஏற்காடு

சேலத்தில் மாநகராட்சி வீதிகளையும், ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு பாதை அமைக்கப் பயன்படுத்தப்பட்ட 90 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆங்கிலேயர் கால ரோடு ரோலர் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில், புதுப்பொலிவுடன்  பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தெரிந்துகொள்ள சேலத்துக்குக் கிளம்பினோம். 

புதுப்பொலிவுடன் 90 ஆண்டுகால ரோடு ரோலர்!- ஆச்சர்யபட வைத்த  ஏற்காடு

அங்கிருந்த  வரலாற்று ஆர்வலரும், தொன்மைத்தடயங்களை நீண்ட காலமாக ஆவணப்படுத்தி வரும் சேலத்தைச் சேர்ந்த ஆசிரியர் கலைச்செல்வன் என்பவரிடம் பேசினோம்.

புதுப்பொலிவுடன் 90 ஆண்டுகால ரோடு ரோலர்!- ஆச்சர்யபட வைத்த  ஏற்காடு

1929-ம் ஆண்டு இங்கிலாந்தைச் சார்ந்த ஜான் பிளவர் & கம்பெனி லீடு லிமிடெட் நிறுவனத்தால் நீராவி ரோடு ரோலர் வாகனம் தயாரிக்கப்பட்டது. சேலம் நகராட்சிக்கும், ஏற்காடு மலைப்பாதைகளில் சாலைகள் அமைப்பதற்காக பிரிட்டிஷாரால் இவ்வாகனம் சேலத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

புதுப்பொலிவுடன் 90 ஆண்டுகால ரோடு ரோலர்!- ஆச்சர்யபட வைத்த  ஏற்காடு


இந்த வாகனம் நிலக்கரி மற்றும் மரக்கட்டைகளைக் கொண்டு எரியூட்டப்பட்டு அதன் மூலம் உருவாக்கப்பட்ட நீராவியின் விசையால் இயக்கப்பட்டு வந்தது. 90 ஆண்டுகளைக் கடந்த இவ்வாகனம் பொதுமக்கள் பார்வைக்காக மாநகராட்சி அலுவலகத்தில் தற்போது புதிய பொலிவுடன் பராமரிக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன் இதன் நிலையைக் குறித்தும், அதற்கான படங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அதிலிருந்து, 
சில மாதங்களுக்கு முன்பு இந்த வாகனம் மழையிலும், வெயிலிலும் காய்ந்து இற்றுப்போய் காயலான் கடைக்குச் செல்லும் நிலையில் இருந்ததை அறிய முடிகிறது.

புதுப்பொலிவுடன் 90 ஆண்டுகால ரோடு ரோலர்!- ஆச்சர்யபட வைத்த  ஏற்காடு

சேலம் வரலாற்றுச் சங்கச் செயலாளர் பர்ணபாஸ் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் பலரின் தொடர் வேண்டுகோளின் காரணமாக இன்று இந்த வாகனம் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்றார். இதேபோல் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அழியும் நிலையில் தொன்மைத் தடயங்களைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை ஒன்றையும் நம்மிடம் தெரிவித்தார்.