Published:Updated:

`மானியங்களை கூட அதிகாரிகளே எடுத்துக்கொள்கின்றனர்’ - குற்றம்சாட்டும் விவசாயிகள் சங்கம்

`மானியங்களை கூட அதிகாரிகளே எடுத்துக்கொள்கின்றனர்’ - குற்றம்சாட்டும் விவசாயிகள் சங்கம்
`மானியங்களை கூட அதிகாரிகளே எடுத்துக்கொள்கின்றனர்’ - குற்றம்சாட்டும் விவசாயிகள் சங்கம்

தேசியமயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் வழங்க மறுப்பதாகத் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் குற்றம் சாட்டினார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் தென்மண்டல உயர்மட்ட செயற்குழுக் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எம்.ராமகவுண்டர் கூறும்போது, `அரசால் வழங்கப்படும் மானியங்கள் விவசாயிகளுக்கு போதாது. இருக்கும் மானியங்களும் கூட முழுமையாக வந்து சேரவில்லை. அதை அதிகாரிகளே எடுத்துக் கொள்கின்றனர். 5 மாநிலத் தேர்தல் முடிந்த பின் காங்கிரஸ் ஆட்சியமைந்துள்ள மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் விவசாயக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்ற காரணத்தைக் காட்டி விவசாயிகளுக்குக் கடன் வழங்கக் கூடாது என வங்கி மேலாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

`மானியங்களை கூட அதிகாரிகளே எடுத்துக்கொள்கின்றனர்’ - குற்றம்சாட்டும் விவசாயிகள் சங்கம்

மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்க மறுக்கின்றனர். மேலும் ஒரே வங்கியில் கடன் பெறுவதற்கும் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும் என வங்கி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இதைக் கைவிட வேண்டும். விவசாயக்கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும். அமெரிக்கன் படைப்புழுக்கள் தாக்கியுள்ளதால் மக்காச்சோளப் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

`மானியங்களை கூட அதிகாரிகளே எடுத்துக்கொள்கின்றனர்’ - குற்றம்சாட்டும் விவசாயிகள் சங்கம்

வனநிலம் மற்றும் புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்துவரும் விவசாயிகளுக்குப் பட்டா வழங்க வேண்டும். பயிர்களை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகள் மற்றும் மான்களை சுட விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். காவிரி குண்டாறு- விருதுநகர் இணைப்புத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். மழையளவும் 50 சதவிகிதமாகக் குறைந்துள்ள நிலையில் 90 சதவிகித நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் உள்ளன. இதனால் விவசாயம் பொய்த்துப்போய் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.