Published:Updated:

திக்கின்றி தவிக்கும் திருநங்கைகள்! - அலைக்கழிக்கும் குடிசை மாற்று வாரியம்...

திக்கின்றி தவிக்கும் திருநங்கைகள்! - அலைக்கழிக்கும் குடிசை மாற்று வாரியம்...
பிரீமியம் ஸ்டோரி
திக்கின்றி தவிக்கும் திருநங்கைகள்! - அலைக்கழிக்கும் குடிசை மாற்று வாரியம்...

திக்கின்றி தவிக்கும் திருநங்கைகள்! - அலைக்கழிக்கும் குடிசை மாற்று வாரியம்...

திக்கின்றி தவிக்கும் திருநங்கைகள்! - அலைக்கழிக்கும் குடிசை மாற்று வாரியம்...

திக்கின்றி தவிக்கும் திருநங்கைகள்! - அலைக்கழிக்கும் குடிசை மாற்று வாரியம்...

Published:Updated:
திக்கின்றி தவிக்கும் திருநங்கைகள்! - அலைக்கழிக்கும் குடிசை மாற்று வாரியம்...
பிரீமியம் ஸ்டோரி
திக்கின்றி தவிக்கும் திருநங்கைகள்! - அலைக்கழிக்கும் குடிசை மாற்று வாரியம்...

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அங்கீகாரம் குறித்த விழிப்பு உணர்வு ஒப்பீட்டளவில் கடந்த காலத்திலிருந்து முன்னேறியிருக்கிறது. முதல் திருநங்கை வழக்கறிஞர், முதல் திருநங்கை போலீஸ் அதிகாரி என்று சமூகம் வளர்ச்சி அடைந்தாலும், அவர்களுக்கான இருப்பிடம் இன்றளவிலும் சிக்கலாகவே இருக்கிறது. ‘தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் சுமார் 255 திருநங்கைகளுக்கு இலவச வீடுகள் பத்தே நாள்களில் வழங்கப்படும்’ என்று தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. ஆனால், ஐந்து மாதங்களாகியும் அது தொடர்பான செயல்பாடுகள் ஆமை வேகத்திலேயே இருப்பதாகப் புகார் தெரிவிக்கிறார்கள் திருநங்கைகள் தரப்பினர்.

இதுபற்றிப் பேசிய பொறியியல் பட்டதாரியும் செயற்பாட்டாளருமான கிரேஸ் பானு, “நான் தமிழகத்தின் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி. படிப்புக்காக எனக்கு உதவி கிடைத்தாலும் நான் தங்குவதற்கான வீடு மட்டும் கிடைக்கவே இல்லை. கவுன்சிலிங்கில் எனக்கு அரக்கோணத்திலிருந்து திருத்தணி செல்லும் வழியில் இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால், பெசன்ட் நகரில் தங்கியிருந்த நான், எப்படி தினமும் அவ்வளவுதூரம் செல்ல முடியும். நிறைய வீடுகள் பார்த்தேன். இரட்டிப்பாக அட்வான்ஸ் பணம் கேட்டார்கள். பல இடங்களில், குடியேறிய ஒரே வருடத்தில் வீட்டைக் காலிசெய்யச் சொன்னார்கள். சென்னைக்கு வந்த ஏழு வருடங்களில் பதினான்கு வீடுகள் மாறிவிட்டேன்.  2014-ம் வருடம், திருவள்ளூர் பகுதி எர்ணாவூர் குடிசை மாற்று வாரியத்தில் 240 திருநங்கைகளுக்கான வீடுகளை முதன்முறையாக அரசு ஒதுக்கீடு செய்தது. நானும் என் திருநங்கைத் தோழி ஒருத்தியும் வீட்டுக்காகக் கோரிக்கை வைத்தபோது, குடிசை மாற்று வாரியத்தில் மறுத்துவிட்டார்கள்.

திக்கின்றி தவிக்கும் திருநங்கைகள்! - அலைக்கழிக்கும் குடிசை மாற்று வாரியம்...

வீடில்லாமல் எப்படி வாழ்வது என்று, சென்னை கலெக்டரிடம் கருணைக்கொலை மனுவை அளித்தோம். அதையடுத்து, குடிசை மாற்று வாரியத்தில் வீடு தர ஒப்புக்கொண்டார்கள். ஆனால், கடந்த 2017-ல் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கப்பட்டபோதுகூட, எங்களுக்கு வீடு ஒதுக்கப்படவில்லை. இந்த வருடமாவது வீடு ஒதுக்கப்படுமா என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், ‘283 திருநங்கைகளுக்கான வீடு ஒதுக்கப்படும்’ என்று அரசு அறிவித்த பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை. சமூக நலத்துறையும் குடிசைமாற்று வாரியமும்தான் இதற்கான வேலையில் ஈடுபட்டுவருகிறார்கள். கேட்கும்போதெல்லாம், ‘அரசு ஆணை தாக்கல் செய்யப்பட வேண்டும்; காத்துக்கொண்டிருக்கிறோம்’ என்கிறார்கள். இதில் ஏதேனும் அரசியல் இருக்கிறதா... அதனால்தான் வீடு ஒதுக்குவதும் தாமதப்படுகிறதா என்பதும் தெரியவில்லை” என்கிறார்

திருநங்கைகளுக்கான வீடு ஒதுக்கீடு தொடர்பாக, தமிழக அரசுடன் ‘தோழி’ எனும் திருநங்கைகள் நலவாழ்வு அமைப்பு இணைந்து செயல்படுகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்த தனம் கூறுகையில், “மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து அத்தனை வேலைகளும் முடிந்துவிட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து 15 பேர் மட்டும் அவர்களின் தகவல்களைத் தரவேண்டும். எங்கள் தரப்பிலிருந்து அந்த வேலை மட்டும்தான் மீதம் இருக்கிறது. குடிசைமாற்று வாரியத்தின் வேலைகள்தான் இன்னும் இருக்கின்றன. உயர் அதிகாரிகள் எங்கெங்கு கையெழுத்திட வேண்டுமோ அதைச் செய்து மற்ற அதிகாரிகளிடம் ஃபைலை நகர்த்திவிடுகிறார்கள். ஆனால், கீழ் இருக்கும் அதிகாரிகள்தான் திருநங்கைகளை அலட்சியமாக நடத்துகிறார்கள். அதனாலேயே வீடு வழங்குவதும் தாமதமாகிறது. டிசம்பர் முதல் வாரத்துக்குள் வீடு கிடைத்துவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படித் தரவில்லையென்றால் போராட்டம்தான் செய்ய வேண்டும்” என்கிறார்.

சமூக நலத்துறை இணை இயக்குநர்கள் தரப்பில் விசாரித்த போது, “வீடு ஒதுக்கீட்டுக்காக, திருநங்கைகள் குறித்த விவரங்கள் சரிபார்க்கும் வேலைகளை முடித்து இரு மாதங்களுக்கு முன்பே குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைத்து விட்டோம்” என்றார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திக்கின்றி தவிக்கும் திருநங்கைகள்! - அலைக்கழிக்கும் குடிசை மாற்று வாரியம்...

அனைத்துத் தரப்பும் குடிசை மாற்று வாரியத்தைக் கைகாட்டவும், ‘பணிகளில் ஏன் தாமதம்?’ என்று குடிசை மாற்று வாரியத்தின் செயலாளர் பொற்கொடியிடம் கேட்டோம். “ஏற்கெனவே எர்ணாவூரில் 234 திருநங்கைகளுக்கு வீடு கொடுத்திருக்கிறோம். இந்த முறை 255 பேருக்குக் கொடுப்பதற்கு அரசுக்குக் கோரிக்கை அனுப்பியிருக்கிறோம். அரசு எங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே வீடு தர முடியும்.

மாவட்டவாரியாக சமூக நலத்துறையின் அதிகாரி, குடிசை மாற்று வாரிய அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் தரப்பின் அதிகாரி ஆகியோர் இணைந்து திருநங்கைகளின் ஆதார், பான் கார்டு உள்ளிட்ட வற்றை சரிபார்ப்பார்கள். திருநங்கைகள் தரப்பும் இதில் கொஞ்சம் தாமதிக்கிறார்கள். மேலும், வீடுகள் ஒதுக்கீட்டில் நிறைய நடைமுறைச் சிக்கல்களும் இருக்கின்றன. அதனால் தாமதமாகிறது. இதுவரைக்கும் நாங்கள் அரசுக்கு அனுப்பியிருக்கும் கோரிக்கையில், மேலதிகமாக ஏதேனும் தகவல்கள் கேட்டு அரசு திருப்பி அனுப்பாத நிலையில் மிக விரைவில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுவிடும்” என்கிறார்.

- ஐஷ்வர்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism