Published:Updated:

``பாடுறவங்களுக்கு `வாய்ஸ் ரெஸ்ட்' ரொம்ப முக்கியம்!'' - கர்னாடக இசைப் பாடகி நித்யஶ்ரீ மகாதேவனின் டிப்ஸ்!

``பாடுறவங்களுக்கு `வாய்ஸ் ரெஸ்ட்' ரொம்ப முக்கியம்!'' - கர்னாடக இசைப் பாடகி நித்யஶ்ரீ மகாதேவனின் டிப்ஸ்!
``பாடுறவங்களுக்கு `வாய்ஸ் ரெஸ்ட்' ரொம்ப முக்கியம்!'' - கர்னாடக இசைப் பாடகி நித்யஶ்ரீ மகாதேவனின் டிப்ஸ்!

எனக்கு எலுமிச்சை ஜூஸ், திராட்சை ஜூஸ் இதெல்லாம் ஒத்துக்காது. எல்லா நாளும் அப்படிக் கிடையாது. ஒரு சில முறை இவற்றைச் சாப்பிட்டுவிட்டுக் கச்சேரியில் பாடும்போது சிரமப்பட்டிருக்கேன்.

ர்னாடக சங்கீதத்தின் கானக்குயில் நித்யஶ்ரீ மகாதேவன். இவருக்குப் பெரிய அறிமுகம் எதுவும் தேவையில்லை. வசீகரிக்கும் குரல் வளம் அவருக்கு எப்படி வாய்த்தது? அதற்கென்று பிரத்யேகமான பயிற்சிகள் எதுவும் மேற்கொள்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள மார்கழி மாதத்தின் ஒரு மாலைப் பொழுதில் அவரைச் சந்தித்தோம். இசைவிழா நிகழ்ச்சிக்குப் புறப்படத் தயாராக இருந்த நிலையிலும், நம்மை வரவேற்று நம் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் கூறினார்.

``உங்களின் குரல் இனிமையாக இருக்கிறது. எப்படி உங்கள் குரல்வளத்தைப் பராமரிக்கிறீர்கள்?'' 

``'குரலை நல்லவிதமா வெச்சுக்கணும்னா ஐஸ் க்ரீம் சாப்பிடக் கூடாது, தயிர், மோர் சாப்பிடக் கூடாது'னு சொல்லுவாங்க. ஆனா, ஒவ்வொருவருடைய குரலும் ஒவ்வொருவருடைய உடம்பும் வேறு வேறுவிதமா இருக்கும். 

ஒருத்தருக்குச் சேர்ற உணவு இன்னொருத்தருக்குச் சேராது. சில பேருக்கு நெல்லிக்காய் ஒத்துக்காது, சில பேருக்கு ரொம்ப காரமான உணவுகள் எதுவுமே சேராதுன்னு இருக்கும். அதை அந்தப் பாடகர்தான் கண்டுபிடிச்சிக்கணும். எனக்கு எலுமிச்சை ஜூஸ், திராட்சை ஜூஸ் இதெல்லாம் ஒத்துக்காது. எல்லா நாளும் அப்படிக் கிடையாது. ஒரு சில முறை இவற்றைச்  சாப்பிட்டுவிட்டு கச்சேரியில் பாடும்போது சிரமப்பட்டிருக்கிறேன். அதிலிருந்து நான் புளிப்புச் சுவையுள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டேன்.

பாட்டுப் பயிற்சி, கச்சேரிகள் தவிர்த்து மற்றபடி நேரம் கிடைக்கும்போதெல்லாம் குரலுக்கு ஓய்வு கொடுப்பேன். `வாய்ஸ் ரெஸ்ட்'னு இதைச் சொல்லுவாங்க. பேசுவதைக்கூடத் தவிர்ப்பேன். ஆனா, யாராவது வீட்டுக்கு வந்து போய்கிட்டுத்தான் இருப்பாங்க. இல்லைனா போன்ல பேச வேண்டியிருக்கும். இது சிரமம்தான். 

இசைக் கச்சேரி இருக்கிற நாளில் அதிகமாகவும் சாப்பிடமாட்டேன். குறைவாகவும் சாப்பிடமாட்டேன். மிதமாகச் சாப்பிட்டுவிட்டுப் போனால்தான் பாட்டுப் பாட ஈஸியா இருக்கும். குறிப்பா ஸ்பைஸியான உணவுகள், மசாலா வகைகள் இதையெல்லாம் சாப்பிடமாட்டேன். சாயங்காலம் 4 மணி போல லைட்டா சாப்பிட்டுட்டுக் கிளம்புவேன்''.

``உங்களின் ஒரு நாள் டயட்...?"

``தினமும் காலையில் எழுந்ததும் சுட வெச்சு ஆறின தண்ணியில் தேன் கலந்து சாப்பிடுவேன். காலையில் பிரேக் ஃபாஸ்டாக ரெண்டு இட்லி, அப்புறம் 11 மணிக்குக் கொஞ்சம் பழங்கள். மதியம் சாப்பாட்டில் காய்கள் நிறைய சேர்த்துக்குவேன். சாதம் குறைவா எடுத்துக்குவேன், மாலை 4 மணிக்கு ஒரு கப் டீ. இரவு 7 மணிக்குள் டின்னர் சாப்பிட்டுடுவேன். கச்சேரிகள் இருந்தால்தான் இரவுச் சாப்பாடு தாமதமாகும். மற்றபடி எல்லா நாளும் இரவு 7 மணிக்குள் சாப்பாடு முடிந்திடும். சின்ன வயசிலே இருந்து இதுதான் பழக்கம். இதையெல்லாம் தாண்டி என்னைப் பொறுத்தவரை, நம்ம உடம்புல எனர்ஜி லெவல் நல்லா இருக்கணும்கிறதை விட நம்முடைய மனசோட எனர்ஜி லெவல் நல்லா இருக்கணும்கிறதுதான் முக்கியம்.

கர்னாடக சங்கீதமா இருந்தாலும் சரி, நாட்டுப்புறப் பாடல்களாக இருந்தாலும் சரி பாடகர்கள் தங்களுடைய குரல் வளத்தைப் பாதுகாக்கிறது மிகவும் முக்கியம். `இன்னிக்கு நான் நல்லா பாடினேன்'னு சொல்றதைவிட, `பகவான் இன்னிக்கு என்னை நல்லா பாட வெச்சார்னு சொல்றதுதான் சரி. இதை நான் ஒவ்வொரு கச்சேரி முடியும்போதும் ஒவ்வொரு ரிக்கார்டிங்கின்போதும் உணர்ந்திருக்கேன். நாளுக்கு நாள் இந்த நம்பிக்கை அதிகமாகிக்கிட்டே போகுது. 

ஓர் இசை நிகழ்ச்சி நல்லவிதமா முடியறதுங்கிறது அத்தனை சாதாரண விஷயமில்ல, முழுக்க முழுக்க தெய்வ அனுகிரகம்தான். பல சமயம் நமக்குக் குரல் நல்லா இருக்கும். சில சமயம் தொண்டைக்கட்டிக் கொண்டு குரல் நமக்குச் சரியா இருக்காது. ஆனாலும், அன்னிக்கு கச்சேரியில பாடிக் கைதட்டல் வாங்கியிருப்போம்னா, அதுக்குக் காரணம், தெய்வ அனுகிரகம்தான் '' என்று கூறிக்கொண்டே மார்கழி இசைவிழா ஒன்றுக்குப் புறப்பட்டுப்போனார்.    

அடுத்த கட்டுரைக்கு