Published:Updated:

புலியும் உடும்பும் ஒரே காரில்!

புலியும் உடும்பும் ஒரே காரில்!
பிரீமியம் ஸ்டோரி
புலியும் உடும்பும் ஒரே காரில்!

டிரைவ் எக்ஸ்பீரியன்ஸ் - ஃபோக்ஸ்வாகன் டிகுவான்

புலியும் உடும்பும் ஒரே காரில்!

டிரைவ் எக்ஸ்பீரியன்ஸ் - ஃபோக்ஸ்வாகன் டிகுவான்

Published:Updated:
புலியும் உடும்பும் ஒரே காரில்!
பிரீமியம் ஸ்டோரி
புலியும் உடும்பும் ஒரே காரில்!

``டிகுவான் கார் லேட்டஸ்ட்டாதான் வாங்கினேன். இது ப்ரீமியம் எஸ்யூவி கார்னு தெரியும். ஹைவேஸ்ல பறக்கலாம்னு தெரியும். ஹில்ஸ்டேஷன்ல கொஞ்சம்போல ஆஃப்ரோடு பண்ணலாம்னும் தெரியும். ஆனா, இந்த அளவுக்கு டிகுவானில் பட்டையைக் கிளப்பலாம்னு தெரியாது!’’ என்றார் கரிகால்வளவன். ஃபோக்ஸ்வாகன் இவர் ஃபோக்ஸ்வாகன் டிகுவான் காரின் உரிமையாளர்.  

புலியும் உடும்பும் ஒரே காரில்!

கிட்டத்தட்ட 60 டிகிரியில்... ஒன்று அல்லது இரண்டு வீல்களில் காரை நிறுத்துவது, சாய்வதுபோலச் சென்று அதன் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோலைச் சோதிப்பது, `வ்வ்ர்ர்ரூம்’ என ஸ்பீடை ஏற்றி `படார்’ என பிரேக் பிடித்து காரின் டிராக்‌ஷனைச் சோதிப்பது... இவை எல்லாமே ஒரு கார் தயாராகும்போது நடக்கும். ஆனால், இதை வாடிக்கையாளர்கள் உணர்ந்திருக்க முடியாது.

இப்படி ஓரு டிராக் எக்ஸ்பீரியன்ஸை தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த முறை ஃபோக்ஸ்வாகன் வழங்கியது. அதில்தான் தனது குடும்பத்தோடு வந்து டிகுவானில் பல சாகசங்களைச் செய்து புல்லரித்தார்  கரிகால்வளவன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``38 லட்சம் ரூபாய்க்கு ஒரு பி.எம்.டபிள்யூவோ, ஆடியோ வாங்கியிருக்கலாமேன்னு சொன்னாங்க. ஆனா, டிகுவான் வாங்கினதுக்கு நான் ரியலி ஹேப்பி!’’ என்றார் அவர். ஆங்... சொல்ல மறந்துவிட்டேனே... இந்த அனுபவத்தில் பங்கேற்க மோட்டார் விகடன் பிரதிநிதியாக நானும் சென்றிருந்தேன். 

புலியும் உடும்பும் ஒரே காரில்!

 ``ஹாய், நான் அங்கித். ஆஃப்ரோடு ஜங்க்கி’’ என்று கர்வமே இல்லாமல் அறிமுகம் செய்துகொண்டார் ஒரு வெயிட் பார்ட்டி.

என்னதான் டெக்னிக்கல் அம்சங்கள் நிரம்பிய கார் என்றாலும், நம் ஓட்டுதலில் புத்திசாலித்தனம் இருந்தால்தான் டிரைவிங் அனுபவம் திருப்தியாகவும் த்ரில்லிங்காகவும் இருக்கும். லேசாகச் சொதப்பினாலும் த்ரில்லர், ஹாரராக மாறிவிடும். அங்கித் பாடம் எடுத்த விதத்திலேயே அவர் எவ்வளவு பெரிய எக்ஸ்பெர்ட் என்பது புரிந்தது.

சர்ரென்ற இறக்கங்களில் கிளட்ச் மிதிக்கவே கூடாது, ஏற்றங்களில் கிராஜுவலாக ஆக்ஸிலரேட்டர் மிதிக்க வேண்டும், ஸ்டீயரிங்கை 3 - 9 மணிவாக்கில்தான் பிடிக்க வேண்டும், தோசை ஊற்றுவதுபோல் ஒற்றைக் கையில் ஸ்டீயரிங்கைத் திருப்பக் கூடாது, ரிவர்ஸ் எடுக்க மிரரை மட்டுமே நம்பக் கூடாது, சாய்வான நேரத்தில் கார்களில் ESC எப்படி வேலை செய்யும், டிராக்‌ஷன் கன்ட்ரோல் எப்படி வாகனத்தின் ஸ்டெபிலிட்டிக்கு உதவுகிறது என்று அவர் சொல்லச் சொல்ல... டிகுவானில் எவ்வளவு பெரிய ஆஃப்ரோடும் பண்ணலாம் என்று தன்னம்பிக்கை ஏற்றியது.

புலியும் உடும்பும் ஒரே காரில்!

சாம்பல் நிற டிகுவானை நமக்காக ஒதுக்கியிருந்தார்கள். டிகுவான் எப்போதுமே ஆல்வீல் டிரைவ் சிஸ்டம்கொண்டது. இதன் பெயர் `ஹால்டெக்ஸ் AWD சிஸ்டம்’. ஹைஸ்பீடில் இது தேவையில்லை என்றாலும், அதுவும் ஒரு கிக்காகவே இருக்கிறது. சின்னச் சின்னதாக 30 டிகிரி ஏற்றம்கொண்ட ரேம்ப்கள்... கன்னாபின்னாவென செட் செய்திருந்தார்கள். சாதாரண கார்களில் நிச்சயமாக இதைக் கடக்கவே முடியாது. இப்போதுதான் இந்த ஹால்டெக்ஸ் சிஸ்டத்தின் அருமை புரிந்தது. எந்த வீல் அந்தரத்தில் நிற்கிறதோ, அந்த வீலுக்குத் தேவையில்லாமல் டார்க் போய் ஸ்பின் ஆகவில்லை. மாறாக, சிக்கல் எந்த டயரில் இருக்கிறதோ, அதற்கு மட்டும் டார்க் போய், பட்டென எகிறிப் பறக்கிறது டிகுவான். இதில் டிராக்‌ஷன் கன்ட்ரோலின் துணையும் உண்டு.

புலியும் உடும்பும் ஒரே காரில்!

அதேபோல், 60 டிகிரி இருக்கும் பெரிய ரேம்ப். இங்கே டிகுவானின் டிராக்‌ஷன் கன்ட்ரோல் விழித்துக்கொள்கிறது. டிராக்‌ஷன் கன்ட்ரோலில் இரண்டு வகை உண்டு என்றார் அங்கித். ஆஃப்ரோடு, சாஃப்ட் ரோடு. ஆஃப்ரோடு வாகனங்களில் உள்ள டிராக்‌ஷன் கன்ட்ரோலின் வேலைப் பாடு அற்புதமாக இருக்கும். டிராக்‌ஷன் இல்லாத வீல்களை லாக் செய்துவிடும். இதனால் தேவையான வீல்களுக்கு மட்டும் ஸ்பின்னிங் ஈஸியாக நடக்கும். ஆன்ரோடு டிராக்‌ஷன் கன்ட்ரோலும் நன்றாகவே வேலை செய்தது.

``ஒருதடவை, வழுக்கும் மலைச்சாலைகளில் இதை டெஸ்ட் செய்து பார்க்கிறேன்’’ என்றார் கரிகால்வளவன்.

அப்புறம்... ஹைஸ்பீடு டெஸ்ட். `வ்வ்வர்ரூம்’ எனக் கிளம்பி... எந்த இடத்தில் பிரேக் அடிக்கிறோமோ, அதே இடத்தில் ஆடாமல் அசையாமல் நிற்க வைக்கும் டாஸ்க்! நிஜமாகவே பயமேயில்லை. காரணம், ESC (Electronic Stability Control) எனும் ஆப்ஷன். ஸ்டீயரிங் ஹேண்ட்லிங்கும் இங்கே முக்கியம். பதற்றமான நேரத்தில் இது விபத்தைக் குறைக்க மிகவும் உதவும். அடுத்து ஹில்ஹோல்டு அசிஸ்ட்... ஹெக்ஸா போன்ற கார்களிலும் இந்த அம்சம் உண்டு. ஆனால், மூன்று விநாடிக்கு மட்டும்தான். டிகுவானில் கால நேரம் கிடையாது. எவ்வளவு பெரிய சரிவிலும் உடும்புபோல் `பச்சக்’ என ஒட்டிக்கொண்டு நிற்கும். இதில் `நான்-கிரிப்’ ஃபங்ஷன் இல்லாததும் ஒரு காரணம்.

புலியும் உடும்பும் ஒரே காரில்!

இது தவிர, ஹைஸ்பீடு டெஸ்ட், ஹில்ஹோல்டு அசிஸ்ட், ஸ்போர்ட்ஸ் மோடு என எல்லா ஏரியாக்களிலும் டிகுவானைப் படுத்தி எடுத்தேன். கடைசிவரை களைப்பாகவே இல்லை டிகுவான்.

டைகர் + இகுவானா... இதுதான் டிகுவானின் அர்த்தம். டைகர் என்றால் புலி. இகுவானா என்றால் உடும்பு. பெரிய சறுக்கல்களில் உடும்புபோல் பிடித்து தன்னம்பிக்கை தந்து, தேவையான நேரத்தில் புலிபோல் பாயும் டிகுவானுக்கு, சரியாகத்தான் பெயர் சூட்டியிருக்கிறது ஃபோக்ஸ்வாகன்.

தமிழ் - படங்கள்: பா.காளிமுத்து 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism