Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

``புதிய ஹூண்டாய் சான்ட்ரோ எப்படி இருக்கிறது?’’ 

- வாசன், சென்னை.

மோட்டார் கிளினிக்

குடும்பத்துக்கு ஏற்ற ப்ரீமியம் பட்ஜெட் காராக ஆல் நியூ சான்ட்ரோவை பொசிஷன் செய்திருக்கிறது ஹூண்டாய். எனவே ஆல்ட்டோ மற்றும் க்விட்டைவிட, செலெரியோ மற்றும் டியாகோவுக்குப் போட்டியாகவே சான்ட்ரோ களமிறங்கியிருக்கிறது. அதற்கேற்ப மாடர்ன் டிசைன், சிறப்பான இடவசதி, அதிக சிறப்பம்சங்கள், AMT கியர்பாக்ஸ். மனநிறைவைத் தரும் கேபினின் ஃபிட் அண்ட் ஃபினிஷ் மற்றும் கட்டுமானத் தரம், நல்ல ஓட்டுதல் அனுபவம் என சான்ட்ரோ கொஞ்சம் ப்ரீமியம்தான்.

இந்த வகை கார்களில் காணக் கிடைக்காத பல வசதிகள் புதிய சான்ட்ரோவில் இருப்பதால், அதன் போட்டியாளர்களைவிட இதன் விலை அதிகமாகவே இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், பழைய காரில் இருந்த அதே இன்ஜின், அட்ஜஸ்ட் செய்ய முடியாத ஸ்டீயரிங் வீல் - முன்பக்க டிரைவர் சீட் - ஹெட்ரெஸ்ட், கியர் லீவருக்கு அருகே இருக்கும் பவர் விண்டோ ஸ்விட்ச்கள், Flip Type கதவுக் கைப்பிடிகள், டாப் வேரியன்ட் தவிர மற்றதில் ஒற்றைக் காற்றுப்பை, அலாய் வீல்கள் மிஸ்ஸிங், ஏசி நாப் என ஆங்காங்கே சிக்கன நடவடிக்கைகளையும் காரில் பார்க்க முடிகிறது.

மோட்டார் கிளினிக்

``டைமண்ட் கட் அலாய் வீல்கள் என்றால் என்ன?’’

- வாசு, இமெயில்.


லாய் வீலின் ரிம்கள் வழக்கமான முறையில் (லேத்தில்) தயாரிக்கப்பட்டாலும், ஸ்போக்குகள் ஸ்பெஷல் மெஷினிங் முறையில் வடிவமைக்கப்படுகின்றன. இதனால் இவற்றின் ஃபினிஷ் ஸ்டைலாக இருக்கும். பெரும்பாலும் டூயல் டோன் கலர்களில் இருக்கக் கூடியவற்றையே நாம் `டைமண்ட் கட் அலாய் வீல்’ என்கிறோம். இது, ஒருகாலத்தில் ப்ரீமியம் & லக்ஸூரி கார்களில் மட்டுமே காணக் கிடைத்த அம்சம். தற்போது மாடர்ன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் மெஷின்களால், இவற்றை அதிக எண்ணிக்கையில் தயாரிப்பது எளிதாகிவிட்டது. எனவேதான் டைமண்ட் கட் அலாய் வீல்களை, லேட்டஸ்ட் ஹேட்ச்பேக் கார்களிலேயே பார்க்க முடிகிறது.

மோட்டார் கிளினிக்

``எனது பட்ஜெட் 7 லட்சம் ரூபாய். மாருதி சுஸூகி கார்தான் வேண்டும். செலெரியோ அல்லது ஸ்விஃப்ட் ஆகிய இரண்டில் எதை வாங்கலாம்?’’

- எம். கோபிராஜ், இமெயில்.


நீங்கள் குறிப்பிட்ட இரண்டுமே நல்ல சாய்ஸ்தான். இருப்பினும், நீங்கள் வாங்கப் போவது முதல் காராக இருந்தால் செலெரியோவையும், இல்லாவிடில் ஸ்விஃப்ட் காரையும் பரிசீலிக்கலாம். உங்கள் பட்ஜெட்டில், செலெரியோவின் டாப் வேரியன்ட் அல்லது ஸ்விஃப்ட்டின் மிட் வேரியன்ட் மாடலை வாங்க முடியும். ஒருவேளை வேறு நிறுவனத் தயாரிப்புகளில் ஆர்வமிருந்தால், இதே விலையில் கிடைக்கக்கூடிய ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய சான்ட்ரோ மற்றும் கிராண்ட் i10 ஆகிய கார்களையும் நீங்கள் பரிசீலிக்கலாம்.

மோட்டார் கிளினிக்

``எனது வீட்டில், கார், பைக் இரண்டும் இருக்கின்றன. இதன் வீல்களில் காற்றை நிரப்பக்கூடிய ஏர் பம்ப் வாங்குவது நல்ல முடிவாக இருக்குமா?’’

- ராஜேஷ் கண்ணன், ராஜபாளையம்.


ற்போது, பெரும்பான்மையான பெட்ரோல் பங்க்குகளிலேயே காற்றடிக்கும் வசதி இருக்கிறது. சிலவற்றில் நைட்ரஜன் வசதியையும் பார்க்க முடிகிறது. எனவே, கார்/பைக்கில் பெட்ரோல் நிரப்பும்போது, மறவாமல் வீல்களில் காற்றழுத்தத்தை செக் செய்துவிட்டாலே போதும். இருப்பினும் நீங்கள் உங்கள் வாகனங்களை அடிக்கடி பயன்படுத்தாதவராக இருந்தால், ஏர் பம்ப் வாங்கி வைத்துக்கொள்ளலாம். இதில் காலால் மிதிக்கக்கூடியது ஒருவகை. இதன் விலை குறைவாக இருந்தாலும், வீலில் தேவையான காற்று ஏறுவதற்கு அதிக நேரம் பிடிக்கும். எனவே, இது டூ-வீலர்களுக்கே பொருத்தமாக இருக்கும். மற்றொரு வகையான டிஜிட்டல் ஏர் பம்ப், காரில் இருக்கும் 12V பாயின்ட் உதவியுடன் எலெக்ட்ரிக்கலாக இயங்கும். இதன் விலை அதிகம் என்றாலும், வீல்களில் காற்றை இது விரைவாக ஏற்றிவிடும்.

மோட்டார் கிளினிக்

``கடந்த 11 ஆண்டுகளாக, `பல்ஸர் 150’ பைக்கைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது `டொமினார் 400’ பைக்கை வாங்க விரும்புகிறேன். அதன் ஓட்டுதல் அனுபவம் எப்படி இருக்கும்? இதன் எடை மற்றும் பவர், எனது பைக்கைவிட அதிகமாக இருப்பதால் ஒரே குழப்பமாக இருக்கிறது. இந்த பைக்கில் புதிய மாடல் ஏதேனும் வரவிருக்கிறதா?’’
 
- எல்.பாஸ்கரன், இமெயில்.


ஜாஜ் நிறுவனத்தின் டொமினார் பைக்கை வாங்க முடிவெடுத்திருப்பது நல்லதுதான். ஆனால், உங்கள் பைக் பயன்பாடு பெரும்பாலும் நகரத்தில் மட்டுமே இருக்கும்பட்சத்தில், `பல்ஸர் 200NS’ நல்ல சாய்ஸாக இருக்கும். ஏனெனில், நெடுஞ்சாலைகளில் ஓட்டக்கூடிய பைக்காகவே டொமினார் பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது. உங்களின் தற்போதைய பல்ஸருடன் ஒப்பிடும்போது, டொமினாரின் எடை அதிகம்தான். என்றாலும் நீங்கள் பைக்கின் எடையை யூ டர்ன் அல்லது பார்க் செய்யும்போதுதான் உணர முடியும். தவிர, பவரும் அதிகம் என்பதால் இதை ஓட்டுவதில் சற்று கவனம் தேவை. நீங்கள் சொன்னதுபோலவே, டொமினார் பைக்கின் பேஸ்லிஃப்ட் மாடலைக் களமிறக்கும் முடிவில் இருக்கிறது பஜாஜ். இதில் முன்பக்க USD ஃபோர்க், Dual Port எக்ஸாஸ்ட், டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகியவை புதிது.

மோட்டார் கிளினிக்

ங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism