Published:Updated:

SPY PHOTO - ரகசிய கேமரா - சீக்கிரம் எதிர்பார்க்கலாம்... கியா பிக்கான்ட்டோ!

SPY PHOTO - ரகசிய கேமரா - சீக்கிரம் எதிர்பார்க்கலாம்... கியா பிக்கான்ட்டோ!
பிரீமியம் ஸ்டோரி

கியா மோட்டார்ஸ்... அடுத்த ஆண்டில் தனது முதல் காரை (SP Concept), இந்த கொரிய நிறுவனம் இந்தியாவில் களமிறக்க உள்ளது. அதற்கு முன்பாக கியாவின் சிறிய சைஸ் காரான பிக்கான்ட்டோ, இந்தியாவில் தற்போது டெஸ்ட்டிங்கில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. பெங்களூருவில் இதனைப் படம் பிடித்திருக்கிறார், மோட்டார் விகடன் வாசகரான ராஜ்குமார். 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், கியா ஸ்டாலில் 3rd Gen பிக்கான்ட்டோ காட்சிப்படுத்தப்பட்டது,  உலகச் சந்தையில் விற்பனையில் இருக்கும் i10 காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த கார், இந்தியாவில் இருக்கும் கிராண்ட் i10 காரைவிட அளவில் 170மிமீ நீளம்/175மிமீ அகலம்/25மிமீ வீல்பேஸ் சிறிதாக இருக்கிறது. உயரம் 75மிமீ அதிகமாக இருப்பதால், இடவசதியில் பெரிய மாற்றமில்லாமல் இருக்கலாம். பூட் ஸ்பேஸைப் பொறுத்தவரை, இரண்டு கார்களும் ஏறக்குறைய சமமாகவே இருக்கின்றன (255 லிட்டர்). இந்த கியா காரின் சைஸ் மற்றும் இன்ஜின் ஆப்ஷன்களை வைத்துப் பார்க்கும்போது, டாடா டியாகோ முதல் மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் வரையிலான பல மாடல்கள் இதற்குப் போட்டியாக இருக்கலாம். அதற்கேற்ப பிக்கான்ட்டோவில் எக்கச்சக்க வசதிகளை எதிர்பார்க்கலாம்.

SPY PHOTO - ரகசிய கேமரா - சீக்கிரம் எதிர்பார்க்கலாம்... கியா பிக்கான்ட்டோ!

உலகச் சந்தைகளில் பிக்கான்ட்டோ மற்றும் அதன் க்ராஸ்ஓவர் வெர்ஷனான X-Line ஆகிய இரண்டும் விற்பனை செய்யப்படுவதுபோல, இந்தியாவிலும் அது தொடரலாம். சர்வதேச பிக்கான்ட்டோவில் 3 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் மட்டுமே உண்டு; டீசல் கிடையாது. இந்தியாவைப் பொறுத்தவரை, கிராண்ட் i10 காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள் பொருத்தப்படலாம். மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இருக்கலாம்.

ராகுல் சிவகுரு

கியா பிக்கான்ட்டோ காரைப் படம் எடுத்து அனுப்பிய ராஜ்குமார், ஜெர்கின் பரிசாகப் பெறுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்! அனுப்ப வேண்டிய முகவரி: ரகசிய கேமரா, மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002. email: motor@vikatan.com 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism