Published:Updated:

வ்வ்ர்ர்ரூம்... இது சத்தம் இல்லை... சங்கீதம்! - மலேசியா மோட்டோ ஜிபி நேரடி ரிப்போர்ட்

வ்வ்ர்ர்ரூம்... இது சத்தம் இல்லை... சங்கீதம்! - மலேசியா மோட்டோ ஜிபி நேரடி ரிப்போர்ட்
பிரீமியம் ஸ்டோரி
வ்வ்ர்ர்ரூம்... இது சத்தம் இல்லை... சங்கீதம்! - மலேசியா மோட்டோ ஜிபி நேரடி ரிப்போர்ட்

அனுபவம் - மோட்டோ ஜிபி

வ்வ்ர்ர்ரூம்... இது சத்தம் இல்லை... சங்கீதம்! - மலேசியா மோட்டோ ஜிபி நேரடி ரிப்போர்ட்

அனுபவம் - மோட்டோ ஜிபி

Published:Updated:
வ்வ்ர்ர்ரூம்... இது சத்தம் இல்லை... சங்கீதம்! - மலேசியா மோட்டோ ஜிபி நேரடி ரிப்போர்ட்
பிரீமியம் ஸ்டோரி
வ்வ்ர்ர்ரூம்... இது சத்தம் இல்லை... சங்கீதம்! - மலேசியா மோட்டோ ஜிபி நேரடி ரிப்போர்ட்

மோட்டோ ஜிபி... இதை டிவி/மொபைலில் பார்ப்பதே பரபரப்பான அனுபவம். அதை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்? மலேசியாவில் நடைபெற்ற 18-வது சுற்று மோட்டோ ஜிபியை நேரில் பார்க்கக்கூடிய அந்த வாய்ப்பினை எனக்கு வழங்கியது ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம்.

வ்வ்ர்ர்ரூம்... இது சத்தம் இல்லை... சங்கீதம்! - மலேசியா மோட்டோ ஜிபி நேரடி ரிப்போர்ட்

மலேசிய விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த உடனேயே, அங்கிருக்கும் வாகனக் கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்ள முடிந்தது. ‘Step Through’ டூ-வீலர்கள் (நம் ஊரில் இருந்த ஹீரோ ஹோண்டா ஸ்ட்ரீட் போல), ப்ரீமியம் எம்பிவிகள், பட்ஜெட் ஹேட்ச்பேக் மற்றும் செடான்கள் என வகைவகையான வாகனங்களைக் காண முடிந்தது. விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் நகருக்குச் செல்வதற்கு எக்ஸ்பிரஸ் மெட்ரோ ரயில் இருந்தாலும், நான் பேருந்து மார்க்கமாகத்தான் (காசு கம்மி பாஸ்!) சென்றேன்.

ஹோட்டலில் இருந்து ஒரு மணி நேரப் பயண தூரத்தில் அமைந்திருந்தது செபாங் ரேஸ் டிராக். பெரிய கட்டடங்கள், தலைக்கு மேலே செல்லும் மெட்ரோ ரயில்கள், ஒவ்வொரு வாகனத்துக்கும் பிரத்யேகமான லேன்கள், வேகக் கட்டுப்பாட்டு முறைகள், பாதசாரிகள் சாலையைக் கடக்க ‘Zebra Crossing’ என மலேசியாவில் விதிமுறைகளைப் பக்காவாகப் பின்பற்றுகிறார்கள்.

டொயோட்டா, ஹோண்டா ஆகிய ஜப்பானிய நிறுவனங்களின் கார்கள் இங்கே கோலோச்சிக் கொண்டிருக்கின்றன.

டூ-வீலர்களைப் பொறுத்தமட்டில் யமஹா மற்றும் ஹோண்டா ஆகியோர் தனி ஆவர்த்தனம் செய்கிறார்கள். நம் ஊரைப் போலவே, மலேசியாவிலும் டொயோட்டா இனோவா கார் பலருக்குப் பிடித்தமான காராக இருக்கிறது. ஒரே வித்தியாசம் - நம் ஊரில் டீசல் மாடல் பிரபலம் என்றால், இங்கே பெட்ரோல் மாடல் ஹிட் அடித்திருக்கிறது. பெட்ரோல்/டீசல் விலையை எடுத்துக் கொண்டால், நம் ஊரில் இருப்பதில் பாதி விலையிலேயே அங்கே ஒரு லிட்டர் எரிபொருளை வாங்கிவிடலாம்! நம் ஊரில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்தான் அதிகம். ஆனால் மலேசியாவில் Petronas, Shell, Petron, Eneos, BHPetrol என ஒரே தனியார் மயம்தான். அதேபோல டூ-வீலர்களில் அதிக சத்தம் தரக்கூடிய எக்ஸாஸ்ட் - பளிச் ஸ்டிக்கர்கள், கார்களில் பாடி கிட் - அலாய் வீல்கள் போன்ற மாடிஃபிகேஷன்களைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வ்வ்ர்ர்ரூம்... இது சத்தம் இல்லை... சங்கீதம்! - மலேசியா மோட்டோ ஜிபி நேரடி ரிப்போர்ட்

மலேசியாவில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச மோட்டார் நிகழ்வு மோட்டோ ஜிபிதான் என்பதால், நகரமே திருவிழாக்கோலத்தில் இருந்தது. ரேஸ் டிராக்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் எங்கு காணினும் பேனர்கள்தான்! நான் ரேஸ் டிராக்குக்குச் செல்லும் வழி நெடுக, அணிஅணியாக பிராண்ட் ரீதியில் பைக்கர்கள் செல்வதைப் பார்க்க முடிந்தது. யமஹா என்றால் 46, டுகாட்டி என்றால் 04, கவாஸாகி என்றால் 1, ஹோண்டா என்றால் 93 என்று அவற்றில் ஸ்டிக்கர்களைப் பார்க்க முடிந்தது. இது ஒருபுறம் என்றால், கார்களிலும் பஸ்களிலும் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்ற காட்சியும் மனதில் நிற்கிறது. நம் ஊரில் கிரிக்கெட்டுக்குக் கிடைக்கக்கூடிய வரவேற்பு, மலேசியாவில் மோட்டோ ஜிபிக்கு வாய்த்திருக்கிறது. நம் நாட்டுக்கு வரவிருக்கும் பெனெல்லியின் புதிய டூ-வீலர்களை (TRK, LeonCino), இங்கே எளிதாகப் பார்க்க முடிந்தது.

ஜெர்மானிய லக்ஸுரி பிராண்ட்களில் இங்கே பிஎம்டபிள்யூ கார்தான் பிரதானமாக இருக்கிறது. அடுத்து மெர்சிடீஸ் பென்ஸ். மிகக் குறைந்த அளவில்தான் வால்வோ மற்றும் ஆடி கார்கள் இருந்தன. 

வ்வ்ர்ர்ரூம்... இது சத்தம் இல்லை... சங்கீதம்! - மலேசியா மோட்டோ ஜிபி நேரடி ரிப்போர்ட்

நாங்கள் மீடியா பிரிவில் மோட்டோ ஜிபியைப் பார்க்க அனுமதிக்கப்பட்டோம். எனவே மீடியா கேலரி மற்றும் கிராண்ட் ஸ்டாண்டு ஆகிய இடங்களில் மட்டுமே எங்களுக்கு அனுமதி. உடன் வந்திருந்த மற்ற பத்திரிகையாளர்களில் சிலருக்கு, குலுக்கல் சீட்டு முறையில் ஹோண்டாவின் Pit & Paddock Stand-க்குள் செல்வதற்கு அனுமதி கிடைத்தது. மீடியா கேலரியில் இருந்து ஸ்டார்ட்/ஃபினிஷிங் பாயின்ட், முதல் திருப்பம் மற்றும் கடைசித் திருப்பம் ஆகியவை பளிச்செனத் தெரிந்தது. ஆனால் ‘செபாங் ரேஸ்’ டிராக்கில் மற்ற பகுதிகளை இங்கிருந்து காண முடியாது. அதற்கு நாம் மக்கள் நிறைந்த கிராண்ட் ஸ்டாண்டு பகுதிக்குத்தான் செல்ல வேண்டும். மீடியா கேலரிக்குக் கீழேதான் ரேஸில் பங்கேற்கும் அணிகளின் Pit Stand இருந்தது. பைக்குகளின் உறுமல் சத்தம், பாகங்களை எத்தனை துரிதமாக மாற்றுகிறார்கள், சின்னச்சின்ன விஷயங்களில் கூட எத்தனை கவனம் செலுத்துகிறார்கள் என்பதைக் கொஞ்சம் அருகிலிருந்து உணரவும், நேரடியாகப் பார்க்கவும் முடிந்தது. நாம் டி.வியில் பார்க்கும் ஆதர்ச ரைடர்கள், நமக்கு முன்னே நேரடியாக ரேஸ் சூட் போட்டுக் கொண்டு பைக்கில் பறப்பதைப் பார்க்க பரவசமாக இருந்தது.

ராஸி, டொவிஸியோஸோ, மார்க்யூஸ், பெட்ரோஸா ஆகியோரையும் அவர்களின் ஆதர்ச பைக்குகளையும் ஒருசேரப் பார்த்தபோது உற்சாகம் கொப்புளித்தது. 

வ்வ்ர்ர்ரூம்... இது சத்தம் இல்லை... சங்கீதம்! - மலேசியா மோட்டோ ஜிபி நேரடி ரிப்போர்ட்

ஃப்ரீ ப்ராக்டிஸ், குவாலிஃபையர், மெயின் ரேஸ் எனப் போட்டியின் துவக்கத்தில் அனைத்து பைக்குகளின் இன்ஜின்களும் ஆன் ஆகி ஸ்டார்ட்  பாயின்ட்டில் இருந்து கிளம்பியது, ரேஸில் ஒருவரை ஒருவர் துரத்திச் சென்றது, ஃபினிஷ் பாயின்ட்டில் முழு வேகத்தில் சீறிப் பாய்ந்தது என அந்தச் சத்தம் காதுகளுக்குச் சங்கீதம். கூடவே இந்த நேரத்தில் ரசிகர்களின் கரவொலியும் நேரம் ஆக ஆக அதிகரித்துக் கொண்டே இருந்தது. மீடியா கேலரியில் இருந்த டிவிகளில் புள்ளி விபரங்கள் துல்லியமாக வந்து விழுந்து கொண்டே இருந்தன. நேர்த்திசையில் 320 கி.மீ.க்கும் மேல் பறப்பது, திருப்பங்களில் பைக்கைச் செலுத்தும்போது ஜஸ்ட் லைக் தட் வேகத்தையும் கியரையும் குறைப்பது, உடலையும் பைக்கையும் வளைத்து கார்னரிங் செய்வது, சுற்றி அவ்வளவு Distraction இருந்தும் 20 லேப் முழுவதும் கவனத்தைச் செலுத்தி பைக் ஓட்டுவது... இதையெல்லாம் நேரில் பார்ப்பது வேற லெவல் மகிழ்ச்சி!

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷால் தனது டைரியில் 10 ஆசைகளை வரிசைப்படுத்திவிட்டு, அதை முடிந்தவரை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருவார். அதேபோல, எனது வாழ்நாள் ஆசைகளில் ஒன்றைத் தற்போது நிறைவேற்றி விட்டேன்!

ராகுல் சிவகுரு  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism