Published:Updated:

ரேஸ்னு வந்துட்டா நான் கோபக்காரன்! - டிவிஎஸ் ரேஸர் அஹமது

ரேஸ்னு வந்துட்டா நான் கோபக்காரன்! - டிவிஎஸ் ரேஸர் அஹமது
பிரீமியம் ஸ்டோரி
ரேஸ்னு வந்துட்டா நான் கோபக்காரன்! - டிவிஎஸ் ரேஸர் அஹமது

பேட்டி - ரேஸர்

ரேஸ்னு வந்துட்டா நான் கோபக்காரன்! - டிவிஎஸ் ரேஸர் அஹமது

பேட்டி - ரேஸர்

Published:Updated:
ரேஸ்னு வந்துட்டா நான் கோபக்காரன்! - டிவிஎஸ் ரேஸர் அஹமது
பிரீமியம் ஸ்டோரி
ரேஸ்னு வந்துட்டா நான் கோபக்காரன்! - டிவிஎஸ் ரேஸர் அஹமது

ரேஸிங் உலகில் இது ஆச்சர்யமான விஷயம். ஒரே அணியில் குருவும் சிஷ்யனும் சாம்பியன் புள்ளிகளில் அடுத்தடுத்த இடத்தில் பறப்பது, ரேஸிங் உலகில் ஹைலைட். ஆம், இந்தியாவின் நம்பர் ஒன் பைக் ரேஸர் ஜெகன் (தொடர்ந்து 6 முறை நேஷனல் சாம்பியன்) என்றால், இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஷிப்பில் ஜெகனுக்குப் பின்னால் (20 பாயின்ட்டுகள்) இருப்பது K.Y.அஹமது. 

ரேஸ்னு வந்துட்டா நான் கோபக்காரன்! - டிவிஎஸ் ரேஸர் அஹமது

மோட்டோ ஜிபி, ஃபார்முலா போன்ற ரேஸ்களில்கூட ஒரே அணியில் நண்பர்கள் வேண்டுமானால் பார்ட்னர்ஷிப் வைத்துப் போட்டியிடுவார்கள். ஆனால், குருவும் சிஷ்யனும் ஒரே அணியில் (டிவிஎஸ் ரேஸிங் டீம்) அடுத்தடுத்து இருப்பதை ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்.

``சும்மா பைக் ஓட்டிக்கிட்டிருந்த என்னை ரேஸ் டிராக்குக்குக் கூட்டி வந்து பைக் ஓட்டவெச்சது ஜெகன் அண்ணாதான். அவர் இல்லைன்னா நான் இல்லை!’’ என்று பாசமாகச் சொல்கிறார் K.Yஅஹமது.

இரண்டு முறை நேஷனல் சாம்பியன்ஷிப், ஒருமுறை டிவிஎஸ் ஒன்மேக்கில் முதல் இடம், அப்பாச்சி RR310 ரேஸில் முதல் இடம், ஓப்பன் கேட்டகிரி ரேஸ்களில் பலமுறை முதல் மற்றும் இரண்டாவது என, ரேஸுக்கு வந்த ஆறே ஆண்டுகளில் பல போடியங்கள் ஏறியிருக்கிறார் அஹமது. 21 வயதாகும் இவருக்கு, இப்போது ரேஸ் மட்டும்தான் புரொஃபஷன், பொழுதுபோக்கு எல்லாமே!

சாதாரண சாலைகளில் அஹமது பைக் ஓட்டும் திறமையைக் கண்டு வியந்த ஜெகன், ``என்கூட டிராக்ல பைக் ஓட்ட வர்றியா தம்பி?’’ என்று கூட்டிப்போய், டிராக்கில் பைக் ஓட்டவைத்தார். அஹமதுவின் பைக் ஓட்டும் திறமை டிவிஎஸ் ரேஸிங் டீமுக்கும் பிடித்துவிட, இப்போது தான் கோலோச்சும் டிவிஎஸ் அணியில் தனக்கே போட்டியாக வந்திருப்பது ஜெகனுக்கே பெருமைதான்.

``பைக் ரேஸரான கதையைச் சுருக்கமா சொல்லுங்க’’ என்றதும், ஹைஸ்பீடில் பேசத் தொடங்கினார் அஹமது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரேஸ்னு வந்துட்டா நான் கோபக்காரன்! - டிவிஎஸ் ரேஸர் அஹமது

``வழக்கம்போல எல்லோர் வீட்லயும் மாதிரிதான். 10 வயசுலேயே எனக்கு பைக் ஓட்டுற ஆசை வந்துடுச்சு. அப்பாவோட டிவிஎஸ் சேம்ப் 50 சிசி ஸ்கூட்டரை எடுத்துட்டுக் கிளம்பிடுவேன். வீட்ல செமயா திட்டு விழும். அப்புறம் அப்பாவுக்குத் தெரியாம சுஸூகி ஷாவ்லின், சாமுராய் பைக்கை ஓட்ட ஆரம்பிச்சேன். அப்ப எனக்கு 15 வயசுதான் இருக்கும். வீலிங் பண்ணவும் அப்பதான் கத்துக்கிட்டேன். லைசென்ஸ் கிடையாதுங்கிறதால, ரொம்ப தூரம்லாம் போகமாட்டேன். எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் ஜெகன் அண்ணா வீடு. நான் தெருவுல வீலிங் பண்றதையும் ஸ்பீடா போறதையும் பார்த்துட்டு, `தம்பி, ரோட்லலாம் இவ்வளவு ஸ்பீடா பைக் ஓட்டக் கூடாது. அதுக்குன்னு டிராக் இருக்கு வர்றியா?’னு கூட்டிட்டுப் போனார்.

முதன்முதலா அவரோட யமஹா YBX பைக்கைத்தான் டிராக்கில் ஓட்டினேன். கூட்ட நெரிசலா இருந்தாலும் தெருவில் ஓட்டுறது ரொம்ப ஈஸியா இருந்துச்சு. டிராக்கில் ஆளே இருக்க மாட்டாங்க. ஆனா, சாதுர்யமா பைக் ஓட்டுறது எவ்வளவு கஷ்டம்னு அப்போதான் புரிஞ்சுது. கார்னரிங்கில் இப்படித்தான் வளைச்சு வளைச்சு ஓட்டணும்னு ஜெகன் அண்ணா சொல்லித் தந்தார். செம எக்ஸைட்டிங்கா இருந்துச்சு. அப்புறம் 2010-ல் இருந்து நானாவே பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்’’ என்று தம்ஸ்-அப் காட்டினார் அஹமது.

இவர் போன்ற புதுவரவுகளுக்காகவே ரேஸ்களில் `நோவிஸ்’ என்றொரு கேட்டகிரி உண்டு. இது முழுக்க முழுக்க ஆரம்பநிலை ரேஸர்களுக்கானது. ஏற்கெனவே ரேஸ்களில் ஜெயித்து போடியம் ஏறியவர்கள், இதில் கலந்துகொள்ள முடியாது. இதைப் பற்றித் தெரிந்துகொண்டு அதில் கலந்துகொள்ள பயிற்சி செய்யும்போதுதான், பைக்கும் சூட்டுமாக வீட்டில் மாட்டிக்கொண்டாராம் அஹமது.

``நான் ரேஸ்ல கலந்துக்கப்போறது தெரிஞ்சு, வீட்ல எதிர்ப்பு. `கைல கால்ல அடிபடப் போகுதுடா’னு செம திட்டு. அவங்க பயந்தது மாதிரியே நடந்துடுச்சு. 2011-ம் ஆண்டு ஹோண்டா ட்விஸ்டர் ஒன்மேக் ரேஸ்ல கலந்துக்கிட்டு, முதல் ரேஸ்லயே கால் உடைஞ்சுடுச்சு. எனக்கென்னமோ சின்ன அடி மாதிரிதான் தெரிஞ்சது. ஆனா, டாக்டருங்கதான் பெரிய கட்டாப் போட்டுப் படுக்க வெச்சுட்டாங்க. அப்புறம் அப்பா-அம்மாவைச் சமாதானப்படுத்தி நேஷனல், ஒன்மேக், தாய்லாந்து சாம்பியன்ஷிப்னு போயிக்கிட்டிருக்கேன்!’’ என்றார் அஹமது. 

ரேஸ்னு வந்துட்டா நான் கோபக்காரன்! - டிவிஎஸ் ரேஸர் அஹமது

நேஷனல் சாம்பியன்ஷிப் என்பது, இந்தியாவைப் பொறுத்தவரை ஐந்து ரவுண்டுகளாக நடக்கும். இதில் நான்கு ரவுண்டுகளிலும் கலந்துகொண்டு போடியம் ஏறினாலோ, பாயின்ட்களில் முன்னிலையில் இருந்தாலோதான் 5-வது ரவுண்டில் கலந்துகொண்டு நேஷனல் சாம்பியன்ஷிப் அடிக்க முடியும். லேசுபாசாக பைக் ஆக்ஸிலரேட்டர் முறுக்க ஆரம்பித்து, இப்போது 20 பாயின்ட்கள் வித்தியாசத்தில் ஜெகனுக்குப் பின்னால் இருக்கிறார் அஹமது.

``செகண்ட் ரவுண்ட்ல பெரிய க்ராஷ். டிராக்கில் வெறித்தனமான போட்டி நடக்கும். ஹோண்டானு நினைக்கிறேன். அந்த ரேஸர்தான் வேணும்னே என் பைக்கைத் தள்ளிவிட்டுட்டாங்க. அதான் அவுட் ஆஃப் தி டிராக் போய் கீழே விழுந்துட்டேன். 0 பாயின்ட்ஸ் கொடுத்துட்டாங்க. இருந்தாலும், அடுத்தடுத்த ரேஸ்ல விட்டதைப் பிடிச்சுட்டேன். இல்லைனா இன்னும் கொஞ்சம் குறைஞ்ச பாயின்ட் வித்தியாசத்துல தான் இருப்பேன்’’ என்கிறார் அஹமது.

இந்திய சாம்பியன்ஷிப் தவிர்த்து, வெளிநாடுகளிலும் ரேஸ்களில் கலந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார் அஹமது. தாய்லாந்து நாட்டில் நடக்கும் நேஷனல் சாம்பியன்ஷிப் என்பது, இந்தியாவைப்போல் கிடையாது. அங்கே குறிப்பிட்ட டிராக்கில் நடக்கும் ரேஸ்களுக்கு குவாலிஃபையிங் ரேஸே மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதாவது, இத்தனை விநாடிக்குள் ஒரு லேப்பைக் கடக்க வேண்டும் என்பதுதான் விதி. விநாடி அதிகமானால்கூட,  அவர் இறுதி ரேஸில் கலந்துகொள்ளலாம். ஆனால், மைக்ரோ விநாடிகூட குறையக் கூடாது. அதாவது, குறிப்பிட்ட நேரத்தைவிட வேகமாகக் கடந்தால், ஆன் தி ஸ்பாட் எலிமினேஷன்தான். பைக் பர்ஃபாமென்ஸில் அதிகபட்ச ட்யூனிங் நடந்துவிடக் கூடாது என்பதைத் தடுக்க இந்தக் கட்டுப்பாடு.

``மைக்ரோ செகண்ட் வித்தியாசத்தில் வேகமா வந்துட்டேன். அதனால, குவாலிஃபையிங்லயே எலிமினேட் ஆகிட்டேன். என்னால ரேஸ்ல கலந்துக்க முடியலை. ப்ச்... இப்போதைக்கு என் கவனம் இந்த ஆண்டு நேஷனல்தான். ஜெகன் அண்ணா, வெளியிலதான் எனக்குப் பாசமான அண்ணன்; டிராக்ல அவர்தான் எனக்குப் போட்டி. நாங்கல்லாம் ரேஸ்னு வந்துட்டா பாசம் பார்க்க மாட்டோம்!’’ என்று ஜாலியாக ஆக்ஸிலரேட்டரை முறுக்கிக் காட்டுகிறார் அஹமது.

தமிழ் - படங்கள்: கார்த்திகா.பா  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism