Published:Updated:

ஆஃப் ரோடிங் சாகசத்துக்கு ஒரு பயிற்சிப் பள்ளி!

ஆஃப் ரோடிங் சாகசத்துக்கு ஒரு பயிற்சிப் பள்ளி!
பிரீமியம் ஸ்டோரி
ஆஃப் ரோடிங் சாகசத்துக்கு ஒரு பயிற்சிப் பள்ளி!

ஆஃப்ரோடிங் - மஹிந்திரா பயிற்சிப் பள்ளி

ஆஃப் ரோடிங் சாகசத்துக்கு ஒரு பயிற்சிப் பள்ளி!

ஆஃப்ரோடிங் - மஹிந்திரா பயிற்சிப் பள்ளி

Published:Updated:
ஆஃப் ரோடிங் சாகசத்துக்கு ஒரு பயிற்சிப் பள்ளி!
பிரீமியம் ஸ்டோரி
ஆஃப் ரோடிங் சாகசத்துக்கு ஒரு பயிற்சிப் பள்ளி!

ஹாராஷ்ட்ரா மாநிலம் இகத்புரியில் செயல்பட்டுவரும் மஹிந்திராவின் ஆஃப் ரோடிங் பயிற்சிப் பள்ளியில், இதுவரை சுமார் 1,600 பேர் வரை பயிற்சி பெற்றுள்ளார்கள்.

ஆஃப் ரோடிங் சாகசத்துக்கு ஒரு பயிற்சிப் பள்ளி!

தற்போது கர்நாடக மாநிலம் மங்களூரில் தனது இரண்டாவது பயிற்சிப் பள்ளியைத் துவக்கியுள்ளது மஹிந்திரா. ‘‘ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கும், ஆஃப் ரோடிங்  சாகசப் பிரியர்களுக்கும்  மங்களூரில் அமைந்துள்ள இந்தப் பயிற்சிப் பள்ளி உறுதுணையாக இருக்கும்'' என்பதால்தான் இந்தப் பயிற்சிப் பள்ளியை இங்கே துவங்கியிருப்பதாகக் கூறினார் மஹிந்திராவின்  பிஜாய்குமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆஃப் ரோடிங் சாகசத்துக்கு ஒரு பயிற்சிப் பள்ளி!

‘‘எங்கெல்லாம் துறை சார்ந்த ஆர்வலர்கள் வளர்கிறார்களோ, அங்கெல்லாம் அந்த துறை சார்ந்த வல்லுநர்களும் உருவாவார்கள் என்பது உண்மை.  நான் ஆட்டொமொபைல் அட்வென்ச்சர் விரும்பி. பல ஆண்டுகளுக்கு முன்பு  ராலி டிரைவர். என்னுடன் நேவிகேட்டராக இருந்தவர்கள் இன்று உலக அளவில் ராலி போட்டிகளில் நேவிகேட்டராக உயர்ந்திருப்பதே இதற்கு உதாரணம். நான் அரசியலுக்குச் சென்று விட்டதால், இதில் கவனம் செலுத்த இயலவில்லை. ஆனால், இந்தத் துறையில் என்ன நடந்தாலும் தெரிந்து கொள்வேன்'' என்று சிலிர்ப்போடு சொன்னார் கர்நாடக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான யு.கே.காதர். இவர்கள் சொல்வது எந்த அளவுக்கு உண்மை?

மங்களுர் விமான நிலையம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் சிகரம் அது. சுமார் 150 பரப்பளவில் அமைந்துள்ள அந்தச் சிகரத்தில் மடியில் அமைந்துள்ளது மஹிந்திராவின் பயிற்சிப் பள்ளி. பயிற்சிக்கான தார் ஜீப்புகள் வரிசை கட்டி தயாராக இருந்தன. 

ஆஃப் ரோடிங் சாகசத்துக்கு ஒரு பயிற்சிப் பள்ளி!

ஆஃப் ரோடிங் பயிற்சிக்கான ட்ராக் பார்க்கவே படு டெரர்ராக இருந்தது. ஆழமான குழி கொண்ட நடக்கவே முடியாத ஒரு பள்ளத்தை ட்ராக் என்கின்றனர். நடந்து ஏறவே முடியாத மண் சரிவு கொண்ட மலைப் பாதையை ட்ராக் என்றதும் நம்ப முடியாமல் பார்த்தபோது, அதில் ஏறப் போகிறோம் என்றதும் ஜீப்பில் அமர்ந்திருந்த எனக்கு அடிவயிறு கலங்கியது. காரணம், கீழே அதல பாதாளம். மெதுவாக மேலே ஏறிய ஜீப் வளைவான மண்சரிவில் ஏற முடியாமல் பின்னோக்கிச் சரிந்ததும் நெஞ்சு படபடவென அடுத்துக்கொள்ள... மீண்டும் முன்னோக்கி சீறியது ஜீப். இந்த முறை நழுவாமல் மேலேறிவிட... நிம்மதிப் பெருமூச்சுவிட்டேன்.

ஆளுயரத்துக்கு மேல் வளர்ந்திருந்த புற்களுக்கு நடுவே ஜிக் ஜாக் மேடு பள்ளங்களைக்கொண்ட ட்ராக், பார்க்க சாதாரணமாக இருந்தது. “இதில் ஓட்டிப் பார்க்க விரும்புபவர்கள் தாராளமாக ஓட்டலாம்'' என்று பயிற்சியாளர் கூறியதும், பாய்ந்தோடி தார் ஜீப்பில் ஏறினேன். சாதாரணமாகக் கடந்துவிடலாம் எனக் கொஞ்சம் அலட்சியமாக ஸ்டீயரிங் பிடித்த எனக்கு, முதல் பள்ளத்திலேயே வியர்த்து விறுவிறுத்துவிட்டது. சரேலென ஒரு பக்கமாகக் கவிழும் நிலைக்குச் சென்ற ஜீப்பைச் சமன்படுத்த எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. அடுத்த பள்ளத்தில் இறங்கி இன்னொரு பக்கமாகக் கவிழும் நிலைக்குச் செல்ல... பிரேக்கில் கால் வைத்து என்ன செய்யலாம் என யோசித்தேன். வாக்கி டாக்கியில் சிரித்தபடியே அழைத்த பயிற்சியாளர் ஹரிஷ், என்ன செய்ய வேண்டும் என்பதைப் படிப்படியாக விளக்கினார். அவரின் கட்டளைக்கு ஏற்ப ஜீப்பைச் செலுத்தினேன். என்ன ஆச்சர்யம்... ஒரு பிரச்னையும் இல்லாமல் குழிக்குள் ஏறி இறங்கி, பாறையில் ஏற்றி இறக்கி என கச்சிதமாக புறப்பட்ட இடம் வந்து சேர்ந்தேன். அப்போதுதான் பயிற்சிப் பள்ளியின் தேவை ஏன் என்பதே புரிந்தது.

கட்டுரை, படங்கள்: கா.பாலமுருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism