`நேத்துதான் கடன் வாங்கி பெட்ரோல் போட்டேன். சாவியும் ஆன்லதான் இருக்கு. ஆனாலும் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குதே!’ எனப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, ``அண்ணே, நீங்க குடிச்சிருக்கீங்க... அதான் பைக் ஸ்டார்ட் ஆகலை’’ என்று பட்டென யாராவது உண்மையைச் சொன்னால், எப்படியிருக்கும்?

அட, இனிமேல் எல்லாம் அப்படித்தான் பாஸ்! நீங்கள் குடித்திருந்தால் உங்கள் பைக் ஸ்டார்ட் ஆகாது. `படிக்காதவன்’ ரஜினி மாதிரி `லஷ்மி... ஸ்டார்ட் ஆகிடு’ என்று என்னதான் நீங்கள் கத்தினாலும், உங்கள் பைக் தேமெவென்றுதான் இருக்கும். அப்படி ஒரு டெக்னாலஜியைக் கண்டுபிடித்துவிட்டார் அகரமுதல்வன்.

கடலூரில் மெக்கானிக்கல் இன்ஜினீயராக இரண்டாம் ஆண்டு படிக்கும் அகரமுதல்வன், இதை தன் ஸ்ப்ளெண்டர் பைக்கில் நமக்குச் செய்து காட்டினார். ஹெல்மெட்டில் ஆரம்பித்து சைடு ஸ்டாண்ட், வேகம், ரிலே, ஆல்கஹால் வரை சுற்றிச் சுற்றி ஏகப்பட்ட சென்ஸார்கள் இருந்தன.

RF420 சென்ஸார்: இது ஹெல்மெட்டுக்கானது. ஹெல்மெட் போடவில்லை என்றால், இந்த சென்ஸார் `கியா முயா’ எனக் கத்த ஆரம்பித்து, பைக்கை எத்தனை மிதி மிதித்தாலும் ஸ்டார்ட் ஆகாது.

ஆல்கஹால் சென்ஸார்: இது குடிமகன்களுக்கானது. மது வாசனையை ஸ்கேன் செய்தால், பைக்... ம்ஹூம்..! இதுதவிர சைடு ஸ்டாண்ட் அலெர்ட்டும் இருந்தது.

அல்ட்ரா சோனிக் சென்ஸார்: வேகத் தடைகளில் நீங்கள் வேகமாகப் போகும்போது தானாகவே பிரேக் அப்ளை ஆகும் வசதி இது. குண்டு குழிகள், மேடு பள்ளங்கள் என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். எல்லாவற்றையும்விட 4 இலக்க பாஸ்வேர்டு கொண்ட ஸ்மார்ட் கார்டு இருப்பதால், பைக்கை எளிதில் யாரும் திருடவும் முடியாதபடி வடிவமைத்திருக்கிறார் அகரமுதல்வன்.

``எப்படி பாஸ்!’’ என்று வியப்போடு கேட்டேன்.

``ஆரம்பத்துல ஏகப்பட்ட தவறுகள். மாலீஸ்வரன் சார்தான் வழிகாட்டினார்.’’ என்றார் அகரமுதல்வன். பெரிய நிறுவனம் இதைச் செய்தால், 5,000 ரூபாய்தான் செலவு ஆகுமாம். இவரது கல்லூரியில் செயல்படும் ‘ஸ்டூடன்ஸ் க்ளப் ஆஃப் இனோவேஷன்’தான் இதற்குத் தேவையான பொருளாதார உதவி செய்ததாம்.

மரிய பனி மோனிஷா.ப