Published:Updated:

புல்லட்டைப் புரட்டுமா ஜாவா?

புல்லட்டைப் புரட்டுமா ஜாவா?
பிரீமியம் ஸ்டோரி
புல்லட்டைப் புரட்டுமா ஜாவா?

புல்லட்டைப் புரட்டுமா ஜாவா?

புல்லட்டைப் புரட்டுமா ஜாவா?

புல்லட்டைப் புரட்டுமா ஜாவா?

Published:Updated:
புல்லட்டைப் புரட்டுமா ஜாவா?
பிரீமியம் ஸ்டோரி
புல்லட்டைப் புரட்டுமா ஜாவா?

ஃபர்ஸ்ட் லுக் - ஜாவா & ஜாவா 42

ம்மூர் சாலைகளில் மீண்டும் ஜாவா சத்தம் கேட்கவிருக்கிறது! ஆம், மஹிந்திரா குழும நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, ஐடியல் ஜாவா நிறுவனத்தைச் சேர்ந்த பொமன் இரானி,  ராயல் என்ஃபீல்டில் பணிபுரிந்த அனுபம் தரேஜா ஆகியோர் அடங்கிய கூட்டணி, ‘க்ளாஸிக் லெஜன்ட்ஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பில் ஜாவாவை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள்.  

புல்லட்டைப் புரட்டுமா ஜாவா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜாவா, ஜாவா Forty Two, ஜாவா பெராக் (Perak) என்று மொத்தம் 3 ஜாவா மாடல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது க்ளாஸிக் லெஜன்ட்ஸ்.

டிசைன் மற்றும் வசதிகள் எப்படி?

1960-களில் இந்தியாவில் விற்பனையான ஜாவா 250 டைப்-A பைக்கைப் பின்பற்றியே, 2019-ம் ஆண்டுக்கான  ஜாவா பைக்கின் மாடர்ன் ரெட்ரோ டிசைன் அமைந்திருக்கிறது. வட்டமான ஹாலோஜன் ஹெட்லைட், அதற்கு மேலே வின்டேஜ் லுக்கில் இருக்கும் அனலாக் ஸ்பீடோமீட்டர், க்ரோம் ஃப்னிஷ் கொண்ட 14 லிட்டர் பெட்ரோல் டேங்க், ஃப்ளாட்டான சிங்கிள் பீஸ் சீட், RE க்ளாஸிக் சீரிஸ் பைக்கில் இருப்பதுபோன்ற Concealed டெலிஸ்கோபிக் ஃபோர்க், இரட்டை PeaShooter பாணியிலான எக்ஸாஸ்ட் பைப், Pinstripe உடனான மட்கார்டு ஆகியவை இதனை உறுதிப்படுத்துகின்றன. கடந்த காலங்களில் இருந்த ஜாவா பைக்குகளை நினைவுகூரும் விதமாகவே, இந்த லேட்டஸ்ட் ஜாவாவின் 3 கலர் ஆப்ஷன்களும் (கறுப்பு, மெரூன், கிரே) அமைந்திருக்கிறது.

 ஜாவா Forty Two பைக்கில் 4 மேட் கலர்கள் (அடர் மற்றும் வெளிர் பச்சை/நீலம்), 2 Gloss கலர்கள் (சிவப்பு, நீலம்) ஆகியவை இருக்கின்றன.

புல்லட்டைப் புரட்டுமா ஜாவா?

இத்தாலிய மற்றும் இந்திய டிசைனர்கள் சேர்ந்து வடிவமைத்திருக்கும் இந்த ஜாவா பைக்கில் டீட்டெய்லிங் அற்புதம். அதுவும், அந்த லிக்விட் கூல்டு இன்ஜினில் இருக்கும் Faux Fins, க்ரோம் ஃப்னிஷ் மற்றும் ஜாவா பிராண்டிங் உடனான இன்ஜினின் கேஸ் கவர், க்ரோம் ஃப்னிஷில் தகதகவென இருக்கும் பிரேக் லீவர் - கியர் லீவர் - இரட்டை எக்ஸாஸ்ட் பைப், ஜாவா பிராண்டிங் உடனான சிங்கிள் ஹார்ன் மற்றும் ஹேண்டில்பார் கிரிப் ஆகியவை, அப்படியே 2 ஸ்ட்ரோக் ஜாவா பைக்கின் ஜெராக்ஸ்தான்! மாடர்ன் ஸ்விட்ச் கியர்தான், சிலருக்கு பைக்கின் டிசைனோடு கொஞ்சம் பொருந்தாமல் இருப்பது போல் தோன்றலாம்.

ஜாவா பைக்கை அடிப்படையாகக் கொண்டே, ஜாவா Forty Two பைக்கும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் மேட்/Gloss கலர் ஆப்ஷன்கள், Offset-ஆக பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் அனலாக் ஸ்பீடோமீட்டர், பைக்கில் ஆங்காங்கே க்ரோம் ஃப்னிஷுக்குப் பதிலாக மேட் ப்ளாக் ஃப்னிஷ், Bar End Mirrors, சிறிய முன்பக்க ஃபெண்டர், கவுல் இல்லாத ஹெட்லைட், தட்டையான ஹேண்டில்பார் எனக் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கின்றன. உலகளவில் பிரபலமாக இருக்கும் Bobber பாணி பைக்குகளைப்போலக் காட்சியளிக்கும் ஜாவா பெராக், மேடையில் பார்க்கவே செம அசத்தலாக இருந்தது. மேட் ஃபினிஷ், Floating பாணியிலான சீட், சிங்கிள் பீஸ் சீட்டுக்கு அடியே இருக்கும் மோனோஷாக், Bar End Mirrors, நீளமான வீல்பேஸ், பைக்கின் இருபுறமும் வித்தியாசமான டூல் பாக்ஸ், காம்பேக்ட்டான Fender & எக்ஸாஸ்ட் பைப் ஆகியவை வாவ்! பைரலியின் Angel GT டயர்கள் இந்த பைக்கில் இருப்பது போனஸ்.

 இன்ஜின்  தொழில் நுட்பத்தில் என்ன புதுமை?

 பைக் பார்க்க ரெட்ரோ டிசைனில் இருந்தாலும், 4 வால்வ் - DOHC - Fi - லிக்விட் கூலிங் போன்ற மாடர்ன் தொழில்நுட்பத்துடன் ஜாவாவின் ஷார்ட் ஸ்ட்ரோக் இன்ஜின்  இருப்பது ப்ளஸ். பழைய ஜாவா போல இது 2ஸ்ட்ரோக் இல்லையென் றாலும்,  ட்வின் போர்ட் எக்ஸாஸ்ட் இருப்பது வரவேற்கத்தக்கது. ஏப்ரல் 2020 முதலாக இந்தியா முழுக்க அமலுக்கு வரப்போகும் BS-VI மாசு விதிகளுக்கு உட்பட்டு இந்த 4 ஸ்ட்ரோக் இன்ஜின் தயாரிக்கப்பட்டிருக்கிறது. பைக்கின் டிசைன் போலவே, இன்ஜினும் இத்தாலிய மற்றும் இந்தியக் கூட்டுத் தயாரிப்பாக இருக்கிறது. மஹிந்திராவின் மோஜோ பைக்கில் இருந்த 295 சிசி இன்ஜினைப் பின்பற்றியே வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், 76மிமீ Bore & 65மிமீ Stroke அளவுகளைத் தவிர எல்லாமே ஜாவாவுக்கு ஏற்றபடி மாற்றப்பட்டிருப் பதாகத் (லோ-மிட் ரேஞ்ச் பவர் மற்றும் Flat Torque Curve) தெரிவிக்கப்பட்டிருக் கிறது. ஆனால் இந்த 293 சிசி இன்ஜின் வெளிப்படுத்தும் 27bhp பவர் மற்றும் 2.8kgm டார்க் ஆகியவை மோஜோவை நினைவுபடுத்துகின்றன.

புல்லட்டைப் புரட்டுமா ஜாவா?

பெராக் பைக்கில் இருக்கும் Big-Bore 334 சிசி இன்ஜின், 30.5bhp பவர் மற்றும் 3.1 kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. ராயல் என்ஃபீல்டின் ஏர் கூல்டு இன்ஜின்களில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருக்கும் நிலையில், 3 ஜாவா மாடல்களிலுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளன. ஸ்லிப்பர் கிளட்ச் கிடையாது.

சேஸி - சஸ்பென்ஷன் - பிரேக்ஸ்...  மெக்கானிக்கல் அம்சங்கள் என்னென்ன?

புதிய டபுள் க்ரேடில் சேஸி - தடிமனான டெலிஸ்கோபிக் ஃபோர்க் - கேஸ் சார்ஜ்டு ட்வின் ஷாக் அப்சார்பர்கள் - ஸ்போக் வீல்கள் - டிஸ்க்/டிரம் பிரேக் செட்-அப் என வின்டேஜ் பைக்குகளுக்குரிய மெக்கானிக்கல் அம்சங்கள்தான், ஜாவா மற்றும் ஜாவா Forty Two பைக்கிலும் இடம்பெற்றுள்ளன. ஆனால் தண்டர்பேர்டு 350X போல, ஜாவா Forty Two பைக்கில் அலாய் வீல்கள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். முன்பக்கத்தில் ஏபிஎஸ் உடனான 280மிமீ Bybre டிஸ்க் பிரேக் - 90/90-18 MRF டியூப் டயர் மற்றும் பின்பக்கத்தில் 153மிமீ டிரம் பிரேக் - 120/80-17 MRF டியூப் டயர் வழங்கப்பட்டிருக்கிறது. இது கிட்டத்தட்ட ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350/500 பைக்குகளில் இருக்கும் அதே அளவுகள்தான்! ஆனால் பெராக் பைக்கின் சப்-ஃப்ரேம்  வித்தியாசமாக இருப்பதுடன், பின்பக்கத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. எனவே, இதில் டூயல் சேனல் ஏபிஎஸ் இருக்கலாம். 765 மிமீ சீட் உயரம் - 170 கிலோ எடை ஆகியவை, அனைத்து விதமான ரைடர்களுக்கும் ஏற்றதாக இருக்கும். 1,369மிமீ வீல்பேஸ், பைக்கின் நிலைத் தன்மைக்குத் துணை நிற்கும். ராயல் என்ஃபீல்டு பைக்குகளைப் போலவே ஜாவா பைக்குகளுக்கு எனப் பிரத்யேகமான ஆக்சஸரிஸ் (க்ராஷ் கார்டு, மிரர்கள், சீட், பேக் ரெஸ்ட்) மற்றும் Apparel-கள் பின்னாளில் அறிமுகப் படுத்தப்படலாம்.

புக்கிங் - டீலர் நெட்வொர்க், ராயல் என்ஃபீல்டுக்குப் போட்டி?

இந்தியா முழுக்க 105 நகரங்களில் டீலர்களை நிர்ணயித்திருக்கும் க்ளாஸிக் லெஜன்ட்ஸ் நிறுவனம், அதில் 64 டீலர்கள் இயங்கும் நிலைக்கு வந்து கொண்டிருப்பதாகச் சொல்லியுள்ளது. ஆன்லைனில் ஜாவா & ஜாவா Forty Two பைக்குகளுக்கான புக்கிங் துவங்கியிருந்தாலும், டெலிவரிகள் ஜனவரி 2019-ல் ஆரம்பமாகும். ஜாவா பெராக் பைக் விற்பனைக்கு வருவதற்கு, எப்படியும் 5 மாதங்கள் ஆகும். 

புல்லட்டைப் புரட்டுமா ஜாவா?

விழா மேடையில் இருந்த பைக்குகளின் சூப்பர் பெயின்ட் தரம் & க்ரோம் மற்றும் பாகங்களின் ஃபிட் அண்டு ஃப்னிஷ், வெளியே துருத்திக் கொள்ளாமல் இருக்கும் வயர்கள், நீட்டான ஃப்ரேம் வெல்டுகள் என பைக்கின் பேக்கேஜிங் மிகச் சிறப்பாக இருந்தது. ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் சீரிஸ் பைக்குகளுக்குப் போட்டியாகக் களமிறங்கியிருக்கும் இந்த ஜாவா பைக், அதைவிடக் கொஞ்சம் விலை அதிகமாகவே இருக்கிறது.

என்றாலும், கூடுதலாக 7bhp பவர் & 6-வது கியர் கொண்ட பவர்ஃபுல் இன்ஜின் - 22 கிலோ குறைவான எடை - BS-6 இன்ஜின், லிக்விட் கூலிங் போன்ற மாடர்ன் அம்சங்கள் - ஒட்டுமொத்தத் தரம் ஆகியவற்றில் இது அசத்துகிறது. ஆனால் இந்த ரெட்ரோ மாடர்ன் பைக்கில் LED எங்குமே இல்லை. தவிர, பழைய பைக்கில் ஸ்பெஷல் அம்சமான கிக் லீவர் இங்கே மிஸ்ஸிங்! மோஜோ பைக்கில் பெரும்பாலானோருக்குப் பிரச்னையாக இருந்தது, அதன் அதிக எடை மற்றும் இன்ஜின் சூடு. ஜாவாவின் எடை, மோஜோவைவிட 10-15 கிலோ எடை குறைவாக இருப்பது ப்ளஸ். என்றாலும், மோஜோவைப் போலவே ஜாவாவின் இன்ஜினும் 11:1 அதிக கம்ப்ரஷன் ரேஷியோவைக் கொண்டிருப்பது சந்தேகத்தைத் தருகிறது. இது பைக்கை ஓட்டிப் பார்க்கும்போது தெரிந்துவிடும். பைக்கின் இக்னிஷன் கீ-ஸ்லாட், வலதுபுறத்தில் பெட்ரோல் டேங்குக்கு அருகே இருப்பது அசெளகரியத்தைத் தரலாம். டேக்கோமீட்டரும் இல்லை...

முன்பக்க டிஸ்க் பிரேக்குக்கு ஏபிஎஸ் வழங்கப்பட்டிருந்தாலும், பின்பக்கத்தில் டிரம் பிரேக் இருப்பது மைனஸ். ராயல் என்ஃபீல்டு உடன் ஒப்பிடும்போது (இந்தியா முழுக்க 600 டீலர்கள்), இதன் டீலர் நெட்வொர்க் மிகவும் சிறிது என்பதுடன், பராமரிப்புச் செலவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. 2-3 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், RE 650சிசி ட்வின்ஸ் & ஜாவா என பைக் ஆர்வலர்களுக்கு செம ஆப்ஷன்கள் கிடைத்திருக்கின்றன.

ஜாவா, ஜாவா Forty Two, ஜாவா பெராக் (Perak) பைக்குகளின் அறிமுக டெல்லி எக்ஸ் ஷோரூம் விலைகள், முறையே 1.64 லட்சம் - 1.55 லட்சம் - 1.89 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவை சிங்கிள் சிலிண்டர்/பேரலல் ட்வின் இன்ஜின்களைக் கொண்ட மற்ற பைக்குகளை (கேடிஎம், கவாஸாகி, பிஎம்டபிள்யூ, யமஹா, டிவிஎஸ், பஜாஜ்) எப்படிச் சமாளிக்கும் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்!

ராகுல் சிவகுரு 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism