Published:Updated:

டாய்லெட்டில் என்ன இருக்கிறது?

டாய்லெட்டில் என்ன இருக்கிறது?
பிரீமியம் ஸ்டோரி
டாய்லெட்டில் என்ன இருக்கிறது?

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 12 - தொடர்

டாய்லெட்டில் என்ன இருக்கிறது?

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 12 - தொடர்

Published:Updated:
டாய்லெட்டில் என்ன இருக்கிறது?
பிரீமியம் ஸ்டோரி
டாய்லெட்டில் என்ன இருக்கிறது?

ன்றைய டிஜிட்டல் யுகத்தினால் தீர்க்க முடியாத  சிக்கல்கள் பல இருந்தாலும், ஆகச் சிறந்த உதாரணமாக இருப்பது, கழிவறைகளும் அதைச் சார்ந்த சுகாதார வசதிகளும்தான்.

டாய்லெட்டில் என்ன இருக்கிறது?

 ‘நவீனம் என்கிற பெயரில் பகட்டான கழிவறையைப் பயன்படுத்தவே மாட்டேன். வெட்கமாக இருக்கிறது’ என்று நான் சிறுவனாக இருந்தபோது, சிலர் சொல்லி கேட்டிருக்கிறேன்.  இறுதி வரை கழிவறையைப் பயன்படுத்தாமலே இறந்துபோன அப்படிப்பட்ட ஒருவர் என் பாட்டி.

டாய்லெட் கம்மோட் (Toilet commode) என்னும் சமூகவியல் சாதனத்தைப் பற்றி உரையாடுவது இந்தக் காலத்திலும் அவசியமாகவே இருக்கிறது. வடிவமைப்பின் நோக்கம், எதிர்காலம் கருதி அதற்கு ஏற்ற வகையில்  வடிவமைத்தல்.  குடிசை வீடுகளுக்குச் சுகாதாரமான கழிவறை களைக் கட்ட திட்டம் தீட்டம் தீட்டி அதை நிறைவேற்ற வேண்டியது முக்கியம்.  அதே அளவுக்கு அடுக்குமாடிக் கட்டடங்களில் Attached பாத்ரூம்களில்  தண்ணீர் விரயமாவதைத் தடுக்கவும் தீர்வு கண்டாக வேண்டும்?

வடிவமைப்பில்லாமல் வேறென்ன?

முதலில் இப்போதெல்லாம் வீடுகளில்,  குறிப்பாக அபார்ட்மென்ட்களில் பயன்படுத்தப்படும் வெஸ்டர்ன் குளோஸட் (Western closet) டாய்லெட்டில் ஒவ்வொரு ஃப்ளஷ்ஷுக்கும் 6 லிட்டர் தண்ணீர் வேண்டும். மறுசுழற்சி செய்யப்படும் நீரென்றாலும், நீர்தானே!

முதலில், மனித மலம் ஏன் துர்நாற்றம் அடிக்கிறது?


 மனிதன் சமைத்து உண்ணும் உணவும், குடலின் அமிலத்தன்மையும், இறந்த பாக்டீரியாக்களும் இதற்கு முக்கியக் காரணிகள். இந்தக் கெட்ட நாற்றத்தால் ஆரம்ப நாட்களிலிருந்தே மனித இனம் இந்தக் கடனை வெறுத்து ஒதுக்கியே வந்துள்ளது. தவிர்க்க முடியாத இந்த இயற்கையின் அழைப்பைப் பற்றிய பேச்சையும் தவிர்த்தே வந்திருக்கிறோம். இதை ஆரோக்கியமானதாகவும் நல்ல அனுபவமாகவும் மாற்ற, எந்த முனைப்பும் நாம் எடுக்கவில்லை.

``இந்தியாவில் இன்றைய தேதியில் ஏறத்தாழ 45 லட்சம் குடும்பங்கள் சுகாதாரமான கழிப்பறை வசதி இன்றி வாழ்கின்றனர். இவர்கள், நகரங்களின் சாலை ஓரங்களிலும், கிராமங்களில்  வயல்வெளிகளிலும், மறைவிடங்களிலும், தரமற்ற  பொதுக்கழிப்பிடங்களிலும் இயற்கை உபாதைகளைக் கழிப்பதினால், நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். அதோடு, சுற்றுப் புறச் சூழலும் மாசடைகிறது. நகர்ப்புறங்களில், சாலையோர மனிதக் கழிவுகள் முறையாக அகற்றப்படாததால், தொடர்ந்து அதன்மேல் பயணிக்கும் வாகனங்களின் டயர்களால்  காற்றில் அலைந்துகொண்டிருக்கின்றன. அதை நாம் சுவாசிக்கவும் செய்கிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

``நகராட்சி, கிராமப்புற வளர்ச்சி அதிகாரிகள் உள்ளிட்ட எந்தவோர் அரசு அதிகார நிறுவனங்களாலும் இந்தப் பிரச்னையை, விஞ்ஞான ஆய்வியல்  முறையில் தீர்க்க முடியாது. வடிவமைப்பால் மட்டுமே இது சாத்தியமாகும்'' என்றார் ஒரு மாணவர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாய்லெட்டில் என்ன இருக்கிறது?

சத்யஜித் மிட்டல் என்ற மாணவரின் டிசைன்  புராஜெக்ட்,  உலகெங்கிலும் பல்வேறு விருதுகளைக் குவித்துக் கொண்டிருக்கிறது. பாம்பே அல்லது இந்தியன் டாய்லெட்டில் சில கூடுதல் மாற்றங்களுடனான வடிவமைப்புதான் இதன் சிறப்பு. தட்டையான தளத்தில் உட்காரும்போது சிரமமாக இருக்கும். படத்தில் உள்ளதுபோல் சாய்வான தளம் இருந்தால், குழந்தைகள் முதல் முதியவர் வரை எளிதில் அமர்ந்து எழ முடியும்.

தண்ணீர் மிகக் குறைந்த அளவே தேவை. மேலும், சுற்றி இருக்கும்  கல்லடை போன்ற இரும்பு தளம் (ஃப்ளோர்) வீணாகும் தண்ணீர் முழுவதையும் சேமித்துவிடும். ஆகவே, இந்திய டாய்லெட் என்கிற ஒரு கான் செப்ட்டில் சிந்தித்து,  ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தியதன் மூலம், மக்கள் தயக்க மில்லாமல் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் வடிவமைத்ததில்தான்  விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்துக்கொண்டிருக் கின்றன. அப்படியானால், ஆரோக்கியமான கழிவறைகள்  என்பது, எத்தகைய மனிதச் சிக்கல் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். ஒரு காலத்தில், சிறுவர்கள் சாலையின் இருபக்கமும் அமர்ந்து காலைக் கடன் கழிப்பது ஒரு சாதாரண காட்சியாக இருந்தது. சற்று வளர்ந்த பிறகு, வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் கொல்லைப் புறத்துக்குச் சென்று, திறந்தவெளிக் கழிப்பிடங்களைப் பயன்படுத்துவர்.  அநேகமாக, அருகே ஒரு குளம் இருக்கும். பெண்களின் நிலை இன்னும் மோசம். இருட்டே துணை. மழை நாட்களிலோ, உடல் நிலை சரியில்லாத நாட்களிலோ, நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கும். இதெல்லாம் கிராமத்தில் நடந்தவை.

அந்நாட்களில், சிறு பெரு நகரங்களில்  நகராட்சி தூய்மைத் தொழிலாளர்கள், மனித மலத்தை தன் கைகளால் அள்ளி கூடையில் சுமந்து செல்வதைத் திகைத்துப்போய் பார்த்திருக்கிறேன். உலகத்தில் வேறெங்கும் நடந்திராத  மனித அவலம் இதுதான். சிறுவயதில் நான் பார்த்த சில நகரத் தெருக்களில் உள்ள வீடுகள், இரண்டு வீடுகளின் கொல்லைப்புறம் பின்புறம் ஒன்றை ஒன்று பார்த்ததாக இருக்கும். அந்த இரண்டு வீடுகளுக்கு இடையே 3 அல்லது 5 அடி இடைவெளியில் ஒரு சிறிய பாதை இருக்கும். அதில் தூய்மைத் தொழிலாளர்கள் வந்து, ஒவ்வொரு வீட்டின் பின்புறத்தில் இருக்கக் கூடிய மலத்தை ஒரு கரண்டி போன்ற தொட்டியில் எடுத்துப் போட்டுக் கொண்டு செல்வார்கள். சில நேரங்களில் அது சரியாக வரவில்லை என்றால், கைகளையும் பயன்படுத்த நேரிடும். அவர்கள் ஒருநாள் வரவில்லை என்றால், அந்த வீடு நாற்றத்தில் மூழ்கியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு அசௌகரியமான சூழல் நிலவிய காலத்தில், மனித மலத்தை மனிதன் அள்ளும் அவலம் மட்டுமல்ல, அப்படி அவர்களை நேரடியாகப் பார்க்கக் கூடாது; பின்புறமாக வந்து அவர்கள் எடுத்துக்கொண்டு செல்லட்டும் என நினைக்கும் மநிலை மிக மோசமானது. அவனுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தைகூடச் சொல்லாத ஒரு சமூகமாக இந்த விஷயத்தில் நாம் இருக்கிறோம்.

டாய்லெட்டில் என்ன இருக்கிறது?

இந்த அவலம் இன்றும்கூட சில இடங்களில் தொடர்வதாக நாம் அறிகிறோம். இந்த நிலையை மாற்றுவதற்கு வடிவமைப்புதான்  வடிகாலாக இருக்கும். சமூகப் பிரச்னைகளுக்கு வடிவமைப்பு கொண்டு நாம் தீர்வுகளைக் காண முடியும். திறந்தவெளிக் கழிப்பிடங்களுக்கு மாற்றாக இந்தியன் டாய்லெட் வந்தது. இன்று அதுவும் சுலபமாக்கப்பட்டு விட்டது. வெஸ்டர்ன் குளோஸட் ஏற்படுத்தும் நீர்ப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு, இந்தப் புள்ளியில் நின்று விடாமல், கிராமப்புற, பல்வேறு பொருளாதாரப் பின்னணி உள்ள மக்கள் எளிதாகவும் சுகாதாரமாகவும் பயன்படுத்தும் வகையில் இந்தக் கழிப்பிடத்தை மீள் வடிவமைப்பு செய்ய வேண்டியது அவசியம்.

ஆனால், ஓர் உண்மையை உங்களுக்கு உணர்த்த ஆசைப்படுகிறேன். இந்த வெஸ்டர்ன் குளோஸட் வந்த பிறகு, உலக அளவில் அது மக்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தியாவைப் பொறுத்தவரை, விண்வெளி ஆய்வுக்குக் கொடுக்கக்கூடிய அதே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அதற்கு ஒதுக்கக் கூடிய அதே நிதியை நகர்ப்புற கிராமப்புற சுகாதார விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மட்டுமல்லாமல், இதை ஆராய்ந்து, இந்திய, சமூகப் பொருளாதார, வர்த்தகச் சூழலுக்கு ஏற்றது போன்ற ஒரு புராடெக்ட் வடிவமைப்பது என்பது மிக மிக அவசியமான ஒன்று.

அரசின் துறைகளில் டிசைனர்கள் பணியமர்த்தப் படுவது அவசியம் என்கிற குரல், ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. ஒரு சாலை எப்படி இருக்க வேண்டும்; அது எதிர்கால வளர்ச்சியில் எப்படி எல்லாம் பரிமாணத்தை அடைவதற்குப் பன்முகத்தன்மையோடு இருக்க வேண்டும் என்கிற உணர்வுபூர்வமான, அறிவியல்பூர்வமான, அழகியல் பூர்வமான பார்வை ஒரு வடிவமைப்பாளருக்கு இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஒரு சிறந்த சமூகத்தின் எதிர்காலத்தை, வடிவமைப்பாளர்கள் நினைக்கிறார்கள். எதிர்காலத்தில் என்ன வேண்டும் என்பதை நிகழ்காலத்தில் சிந்திக்க... முற்காலத்தின் அனுபவத்தைப் பயன்படுத்தி, நிகழ்காலத்தில் வாழ்ந்துகொண்டு, எதிர்காலத் தேவைகளை தீர்க்க தரிசனத்தோடு அணுகி, அதற்கான விவாதங்களை வைப்பது மட்டுமல்ல, தீர்வுகளையும் முன்னெடுப்பது வடிவமைப்பு மட்டுமே!

ஒரு convincing manner influencing-க்கான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு வடிவமைப்பு, மக்களால் பெரிதும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அந்தச் சாதனத்தால் மக்களும் பயன்படுகிறார்கள். அந்த வரிசையில்தான் தீப்பெட்டி, கழிப்பறைகள் வாயிலாக வடிவமைப்பின் முக்கியத்துவத்தை ஓரளவு அலசினோம். அதைப்போலவே இன்னும் சில பொருட்களை நாம் உற்றுநோக்கி, அதிலிருந்து வடிவமைப்பையும் அதன் தாக்கத்தையும் கற்றுக்கொள்ள முடியும்.

- வடிவமைப்போம்

க.சத்தியசீலன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism