Published:Updated:

ஆற்றிலும் போகலாம்! காற்றிலும் பறக்கலாம்!

ஆற்றிலும் போகலாம்! காற்றிலும் பறக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆற்றிலும் போகலாம்! காற்றிலும் பறக்கலாம்!

ஃபர்ஸ்ட் ரைடு - SWM சூப்பர்டூயல் 650T

ஆற்றிலும் போகலாம்! காற்றிலும் பறக்கலாம்!

ஃபர்ஸ்ட் ரைடு - SWM சூப்பர்டூயல் 650T

Published:Updated:
ஆற்றிலும் போகலாம்! காற்றிலும் பறக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆற்றிலும் போகலாம்! காற்றிலும் பறக்கலாம்!

து என்ன புது கம்பெனி என ஆச்சரியப்படுவதில் தவறொன்றும் இல்லை. இதுவரை நம் காதுகளில் கேட்டிராத இத்தாலிய பிராண்டு தான் SWM. 70-களில் இருந்தே இது எண்ட்யூரன்ஸ் மோட்டார் சைக்கிள்களை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இடையில் கொஞ்சம் கஷ்ட காலம். 2014-ம் ஆண்டு சீனாவின் ஷின்ரே மோட்டார் சைக்கிள் நிறுவனம் கைகொடுக்க, இப்போது மீண்டும் களத்தில் இறங்கி இருக்கிறது. 

ஆற்றிலும் போகலாம்! காற்றிலும் பறக்கலாம்!

இத்தாலியில் ஹஸ்க்வர்னா தொழிற்சாலையில்தான் SWM பைக்குகள் தயாராகின்றன. நாம் பார்க்கப் போகும் சூப்பர்டூயல் 650T (Superdual 650T) ஹஸ்க்வர்னாவின் TE610 பைக்கை அடிப்படையாகக் கொண்டு உருவானது. அதே இன்ஜின்தான்; ஆனால் Fi, எலெக்ட்ரிக் ஸ்டார்ட், சில மெக்கானிக்கல் மாற்றங்கள் என இந்த இன்ஜினை Euro IV விதிகளுக்கு ஏற்றபடிகொடுத்திருக்கிறார்கள். ‘தியரி’ புக்கையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு பிராக்டிக்கலாக பைக் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆற்றிலும் போகலாம்! காற்றிலும் பறக்கலாம்!

சூப்பர் டூயல் 650T, சாலையை நன்றாகவே அலங்கரிக்கிறது. உயரமான தோற்றமும், ஷார்ப்பான ஃபெண்டர்களும் அட்வென்ச்சருக்கு எப்போதும் தயார் என்று சொல்கின்றன. ஹெட்லைட்டுகள் பார்க்க கேடிஎம் டியூக் 200 போலவே உள்ளன. இதற்கு ஆமாம் போடுவதுபோல, சாலையில் சிலர் பைக்கை நிறுத்தி, ‘390 அட்வென்சரின் ப்ரோட்டோ டைப்பா’ எனக் கேட்டு சென்றார்கள்.

சூப்பர்டூயலைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால்தான் தெரியும் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இருப்பது. டிஸ்பிளே சிறிதாக இருப்பதால் ஸ்பீடோ, ஓடோ, டேக்கோ மற்றும் ட்ரிப் மீட்டர் போன்ற அடிப்படைத் தகவல்கள் மட்டுமே உண்டு. 18 லிட்டர் பிளாஸ்டிக் பெட்ரோல் டேங்க் செம ஸ்லிம்மாக இருக்கிறது. ஆனால், இதன் நெளிந்திருக்கும் வடிவம் எழுந்து நின்று பைக் ஓட்டும்போது முட்டியில் இடிக்கிறது. சென்டர்பேனல்கள் மட்டும் பைக்கை உருவாக்கிய பிறகு கொசுறாகச் சேர்த்திருப்பார்கள் போல. இதன் தரம் மற்ற பாகங்களோடு ஒட்டாமல் இருக்கிறது. ஸ்விட்ச்களின் தரம் ஓகே. ஃபாக் லைட்டின் ஸ்விட்ச்சும் தனியாகத் தெரிகிறது. வழக்கமான அட்வென்ச்சர் பைக்குகள் போல் இல்லாமல் இதன் சீட் மெல்லிசாக இருக்கிறது. ரைடர்களுக்குப் பிரச்னையில்லை. கிரிப்புக்காக பேட்ச் தைத்துள்ளார்கள். பில்லியன் சீட் நீளமாகவும்,  ஒல்லியாகவும் இருப்பதால் பில்லியனாக வருபவர்கள் கஷ்டப்பட வேண்டும்.

சூப்பர்டூயல் பைக்கில் (7.96 லட்ச ரூபாய்)  ஃபாக் லைட், இன்ஜின் கார்டு, ஸ்கிட் பிளேட், Knuckle ப்ரொடக்டர், லக்கேஜ் ரேக் என சில ஆக்சரீஸ்களைச் சேர்த்து 55,000 ரூபாய் கூடுதல் விலை வைத்து சூப்பர்டூயல் T மாடலாக விற்பனை செய்கிறது மோட்டோராயல். இந்த அப்கிரேடுக்கு இந்த விலை கொடுக்கலாம். Givi பேனியர்ஸ் வேண்டும் என்றால், அதற்கு ரூ.63,991 கூடுதல் விலை. வெறித்தனமான அட்வென்ச்சருக்கு  எப்படி இருக்கும் என ஓட்டிப் பார்த்தோம்.

ஆஃப் ரோடுக்கு பைக்கைக் கிளப்ப ரைடிங் பொசிஷன் நம்பிக்கை தருகிறது. ஹேண்டில் பார் அகலமாகவும், ஃபுட் பெக்ஸ் உயரமாகவும் இருப்பதால் எந்த இடத்திலுமே பைக்கை அழுத்திப் பிடிக்கும் சூழ்நிலை வரவில்லை. 898 மிமீ உயரமான சீட் நமக்கெல்லாம் செட்டாகுமா என யோசிக்கத் தேவையில்லை. சீட் குறுகலாக இருப்பதால், குள்ளமான ரைடர்கள்கூட தரையில் கால் வைக்கலாம். 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், உயரமான தோற்றம், ஒல்லி பெல்லி வடிவம் எல்லாம் கவாஸாகி மற்றும் சுஸூகி பைக்குகளிடம் இருந்து சூப்பர் டூயலைத் தனித்துக் காட்டுகிறது. டூரிங் பைக்காக இல்லாமல், இதன் ரைடிங் ஒரு டர்ட் பைக்கைத்தான் நினைவுபடுத்தும். 

ஆற்றிலும் போகலாம்! காற்றிலும் பறக்கலாம்!

ஸ்டார்ட்டர் பட்டனைத் தட்டினால் இதன் 600சிசி லிக்விட் கூல்டு DOHC இன்ஜின் ஸ்டார்ட் ஆகக் கொஞ்சம் நேரம் எடுக்கிறது. சிங்கிள் சிலிண்டரில் இருந்து வரும் இரட்டை எக்ஸாஸ்ட் சத்தமும் டர்ட் பைக்கைத்தான் நினைவுபடுத்துகிறது. ஸ்டார்ட்டிங் மட்டுமே சோம்பேறித்தனம். த்ராட்டிலைத் திருகினால் எந்தச் சோர்வும் இல்லாமல் உடனடியாகப் பதிலளிக்கிறது இன்ஜின். கியர்போடும்போது ‘தட் தட்’ என சத்தம் வரும். ஆனால், கியர் ஸ்மூத்தாகவும் வேகமாக மாறுகிறது.

54.3 bhp பவர் மற்றும் 5.5 Kgm டார்க் தரும் இன்ஜின், பைக்கைக் கிளப்பும்போதே ஒரு வீல்ஸ்பின்/வீலிங் போட்டுத்தான் கிளம்பும். எந்த கியராக இருந்தாலும் இன்ஜின் ரெஸ்பான்ஸ் செம! த்ராட்டிலை முறுக்கினால் இன்ஜின் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறது. ஒரே ஒரு சின்ன வருத்தம், எல்லா வேகங்களிலுமே ஃபுட்பெக்கில் வைப்ரேஷன் தெரிகிறது. இன்ஜின் வேகம் கூடக் கூட ஹேண்டில் பார், டேங்க் என எல்லா இடங்களுக்கும் ‘டெங்கு காய்ச்சல்’போல வைப்ரேஷன் வேகமாகப் பரவுகிறது. 6-வது கியரில் 3200 rpm-ல் 100 கி.மீ வேகத்தில் பைக்கை ஓட்டிச் செல்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. எலெக்ட்ரானிக் ரைடர் அசிஸ்ட் இல்லை என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். இதனால் பெர்ஃபாமென்ஸுக்குப் பாதிப்பு இல்லை. டால் கியர் ரேஷியோவும், எல்லா வேகத்திலுமே தாராளமாகக் கிடைக்கும் டார்க்கும் பைக்குக்கு நம்மை அடிமையாக்கி விடும்.

இன்ஜின் மட்டுமில்லை, 19/17 (முன்/பின்) ஸ்போக் வீல்-Metzeler Tourance டயர்கள் ஜம்முனும்; 300 மிமீ டிஸ்க் பிரேக் கம்முனும்; டிஸ்என்கேஜ் செய்யக்கூடிய டூயல் சேனல் ஏபிஎஸ் கும்முனும் இருக்கின்றன. டபுள் க்ரேடில் டியூபுலர் ஸ்டீல் ஃபிரேமில் கட்டமைக்கப்பட்டுள்ளதால், உடனுக்குடனே திரும்பும்போது பைக்கின் ரெஸ்பான்ஸ் அருமை. முன்பக்கம் இருக்கும் Rebound damping அட்ஜஸ்டபிள் ஃபோர்க் FastAce என்று சீன நிறுவனமும், பின்பக்கம் இருக்கும் அட்ஜஸ்டபிள் மோனோஷாக்கை சாக்ஸ் நிறுவனமும் உருவாக்கியுள்ளார்கள். 

ஆற்றிலும் போகலாம்! காற்றிலும் பறக்கலாம்!

சாலை வளைவுகளில் வேகமாக கார்னர் செய்யும்போது பயத்தை ஏற்படுத்துகிறது இதன் ரவுண்டு புரொஃபைல் டயர்கள். பாதுகாப்பாக இருக்க ஒரு காலை வெளியே நீட்டி டர்ட் பைக் போல கார்னர் செய்வதுதான் சிறந்த வழி. குறைந்த வேகங்களில் சஸ்பென்ஷன் ஸ்டிஃப்பாக இருக்கிறது. ஆஃப் ரோடில் இதே சஸ்பென்ஷன்தான் வேகமாகப் போக உதவுகிறது. ஆஃப் ரோடு ரைடிங்கைப் பொருத்தவரை பைக்கின் இரண்டு வீல்களில் இருந்தும் தேவையான ஃபீட்பேக் கிடைக்கிறது. புதிதாக வந்த அட்வென்சர் மோட்டார் சைக்கிள்களை ஒப்பிடும்போது சூப்பர்டூயல் மண் ரோட்டில் அதகளப்படுத்துகிறது. எந்தக் காட்டையும்,  எந்த ஆற்றையும் கடந்து போகலாம்.

இந்த அட்வென்ச்சர் பைக் செக்மென்ட்டில் விலைதான் வெற்றியை முடிவு செய்கிறது. வைப்ரேஷன், திருப்தி இல்லாத பிளாஸ்டிக்ஸ், எர்கானமிக்ஸ் குறைகள், எந்த பில்லியனுக்கும் போதாத பில்லியன் சீட் என சில பல குறைகள் இருந்தாலும் பைக்கில் ஏறி ஓட்ட ஆரம்பித்துவிட்டால் இந்தக் குறைகள் பெரிதாகத் தெரியாது. ஆனால், 8.51 லட்சம் எனும் சென்னை ஆன்ரோடு விலையைப் பார்த்தால் ‘இதெல்லாம் ஒழுங்கா இருந்திருக்கலாமே!’  என்றுதான் கேட்கத் தோன்றும்.

தற்போது இந்த பைக் SKD (semi knocked down) முறையில் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், விலை கொஞ்சம் அதிகம். இதே பைக்கை இந்தியாவில் தயாரிக்க மோட்டோ ராயல் மனது வைத்தால், இன்னும் பல மடங்கு விலை குறைவாகக் கிடைக்கும். விலையை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், மண் தரையில் செம ஜாலியாக என்ஜாய் பண்ண அட்வென்ச்சர் பிரியர்களுக்கு இன்னுமொரு நல்ல பைக் கிடைத்துவிட்டது.

தொகுப்பு: ரஞ்சித் ரூஸோ  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism