Published:Updated:

பிஎம்டபிள்யூவின் - மின்சாரக் கண்ணன்!

பிஎம்டபிள்யூவின் - மின்சாரக் கண்ணன்!
பிரீமியம் ஸ்டோரி
பிஎம்டபிள்யூவின் - மின்சாரக் கண்ணன்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - பிஎம்டபிள்யூ i3S

பிஎம்டபிள்யூவின் - மின்சாரக் கண்ணன்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - பிஎம்டபிள்யூ i3S

Published:Updated:
பிஎம்டபிள்யூவின் - மின்சாரக் கண்ணன்!
பிரீமியம் ஸ்டோரி
பிஎம்டபிள்யூவின் - மின்சாரக் கண்ணன்!

பிஎம்டபிள்யூவின் இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக், வெளிநாடுகளில் விற்பனைக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. தனது தொழில்நுட்பத் திறனை அரசாங்கத்திடம் எடுத்துக் காட்டவும், ஹை-டெக்கான எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக்குக்கு இங்கே மார்க்கெட் இருக்கிறதா என்பதை ஆராயவும், சில i3S கார்களை இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறது பிஎம்டபிள்யூ. 

பிஎம்டபிள்யூவின் - மின்சாரக் கண்ணன்!

இந்தியாவின் சிறிய கார் வரைமுறைகளுக்கு ஏற்றபடி கச்சிதமாக 3,999மிமீ நீளத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது i3S. பார்க்க டால் பாய் ஹேட்ச்பேக் போல இருந்தாலும், தனித்துவமான டிசைன் அம்சங்களால் ஈர்க்கிறது i3S. ரோல்ஸ்ராய்ஸ் பேந்தம் காரை நினைவுபடுத்தும்படி கதவுகள் திறக்கும் விதம் அமைந்திருக்கிறது. காரில் பி-பில்லர் கிடையாது. தவிர காரின் எடையைக் கட்டுக்குள் வைப்பதற்காக, CFRP பாசஞ்சர் ஷெல் & சேஸி அலுமியத்தால் செய்யப்பட்டுள்ளது. எடை அதிகமான பேட்டரிகள் இருந்தாலும், i3S காரின் எடை 1,265 கிலோதான்!

பின் பக்கக் கதவைத் தனியாகத் திறக்க முடியாது. அதாவது, முன்பக்கக் கதவைத் திறக்கும்போது மட்டுமே பின்பக்கக் கதவைத் திறக்க முடியும்! அதேபோல, பின்பக்கக் கதவின் கண்ணாடிகளை இறக்க முடியாது. பானெட்டுக்கு அடியே ஒரு பை வைப்பதற்கு இடம் உண்டு. 260 லிட்டர் பூட் ஸ்பேஸ்!

பர்ஃபாமென்ஸ்

வழக்கமான i3 உடன் ஒப்பிடும்போது, 14bhp கூடுதல் பவரை வெளிப்படுத்துகிறது i3S (மொத்தம் 184bhp). ஆனால் இரண்டிலுமே 33kWh லித்தியம் ஐயான் பேட்டரி Pack-தான். எலெக்ட்ரிக் மோட்டார், பின்புறத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மற்ற பிஎம்டபிள்யூ கார்களைப் போலவே, சிங்கிள் ஸ்பீடு கியர் பாக்ஸ் பின்பக்கச் சக்கரங்களுக்கு பவரைச் செலுத்துகிறது. 0-rpm-ல் இருந்தே பவர் கிடைப்பதால், i3S காரை ஓட்டுவது செம ஃபன். 0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 6.9 விநாடிகளில் எட்டிவிடுகிறது i3S. இவ்வளவு வேகமாகச் செல்லும் இந்த பிஎம்டபிள்யூ கார், எந்த எக்ஸாஸ்ட் சத்தமும் போடாததுதான் நெருடல். கியர் செலெக்டரில் D, N, R, P உண்டு. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிஎம்டபிள்யூவின் - மின்சாரக் கண்ணன்!

ஓட்டுதல் அனுபவம்

Sport, Comfort, Eco Pro, Eco Pro + எனும் நான்கு டிரைவிங் மோடுகள் உண்டு.  ஒருமுறை பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்தால், கார் 200 கி.மீ தூரம் செல்லும் என்கிறது பிஎம்டபிள்யூ. ஆனால் காரை விரட்டி ஓட்ட நேரிடும்போது, இந்த ரேஞ்ச் கணிசமாகக் குறைந்து விடுகிறது. தவிர பேட்டரிகளை ஒருமுறை ஃபுல் சார்ஜ் ஏற்றுவதற்கு 10 மணிநேரம் ஆகிறது என்பதைக் கவனிக்க! பயணத்தின்போதே காரின் பேட்டரியை Regenerative Braking தொழில்நுட்பம் கொஞ்சம் சார்ஜ் ஏற்றுகிறது. என்றாலும் எதிர்பார்த்தபடியே, Eco Pro + மோடில் காரை ஓட்டும்போதுதான் அதிக ரேஞ்ச் கிடைக்கிறது. ஆனால் இதில் ஏ.சி வேலை செய்யாது பாஸ்!

முதல் தீர்ப்பு

பிஎம்டபிள்யூ நிறுவனம் i3S காரை இந்தியாவுக்கு இறக்குமதி செய்தால், CBU கார்களுக்கு இருக்கும் அதிக வரிவிதிப்பை வைத்துப் பார்க்கும்போது, காரின் விலை 50 லட்சத்தைத் தாண்டுவதற்கான சாத்தியம் இருக்கிறது.

தொகுப்பு: ராகுல் சிவகுரு 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism