Published:Updated:

எது ஜாலியான AMT?

எது ஜாலியான AMT?
பிரீமியம் ஸ்டோரி
எது ஜாலியான AMT?

எது ஜாலியான AMT?

எது ஜாலியான AMT?

எது ஜாலியான AMT?

Published:Updated:
எது ஜாலியான AMT?
பிரீமியம் ஸ்டோரி
எது ஜாலியான AMT?

போட்டி - ஹூண்டாய் சான்ட்ரோ Vs டாடா டியாகோ (AMT)

ட்ஜெட் காம்பேக்ட் கார்களைப் பொறுத்தவரை இதுவரை வாடிக்கையாளர்கள் எந்தக் குறையையும் பெரிதாகச் சொல்லவில்லை. ‘‘க்விட் வாங்கினேன்... சரியில்லை; ஆல்ட்டோ ஏன்டா வாங்கினோம்னு இருக்கு; கிராண்ட் i10 வாங்குனதுக்குப் பதில் வேற எதுனா போயிருக்கலாம்’’ என்று யாரும் குறைபட்டதாகத் தெரியவில்லை.

எது ஜாலியான AMT?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

க்விட், டியாகோ, செலெரியோ, கிராண்ட் i10, ஆல்ட்டோ, வேகன்-ஆர் என எல்லா பிராண்டுகளிலுமே ஹேட்ச்பேக் - முதல் பென்ச் மாணவர்கள்தான். இதற்கு நடுவில் ஏற்கெனவே ஸ்டேட் ஃபர்ஸ்ட் மாணவன் என்று பெயரெடுத்த சான்ட்ரோ, பேக் டு தி பெவிலியன் ஆனதும் சலசலப்பு இருக்கத்தானே செய்யும்? ‘‘சான்ட்ரோ வந்துடுச்சே... அது வாங்கலாமா? இது வாங்கலாமா?’’ என்று நம் வாசகர்கள் மத்தியிலும் சலசலப்பு. அதன் முதல்படியாக இந்த மாதம் சான்ட்ரோவுடன் டாடாவின் டியாகோ காரை மோத விட்டால் என்ன எனத் தோன்றியது. ‘‘சார், AMTதான் எங்க சாய்ஸ்... அதையும் கொஞ்சம் என்னானு பாருங்க...’’ என்று பெண் வாசகர்கள் மத்தியிலிருந்தும் கேள்விகள். அதனால் இரண்டு AMTகளையும் போட்டிக்கு எடுத்துக் கொண்டு விரட்டிப் பார்த்தேன்.

டிரைவிங்கில் எது ஃபன்?


சான்ட்ரோ: பொதுவாக ஹூண்டாய், மைலேஜுக்காக 3 சிலிண்டர் இன்ஜினைத்தான் தன் பட்ஜெட் கார்களில் பெரும்பான்மையாகப் பயன்படுத்தும். இயான், கிராண்ட் i10, எக்ஸென்ட் போன்ற கார்களில் இருப்பவை 3 சிலிண்டர்தான். ரீ-என்ட்ரி என்பதால் என்னவோ, சான்ட்ரோவுக்கு 4 சிலிண்டர் இன்ஜினைப் பயன்படுத்தி இருக்கிறது. இது புது இன்ஜினெல்லாம் இல்லை; பழைய சான்ட்ரோ ஜிங்கில் இருந்த அதே 1.1 லிட்டர், 69 bhp பெட்ரோல் இன்ஜின்தான்.

எது ஜாலியான AMT?

4 சிலிண்டர் என்பதால், அதிர்வுகள் பெரிதாக இல்லை. கியர் லீவரை ‘D’ மோடுக்குத் தள்ளி, த்ராட்டிலில் கால் வைத்ததும் நமக்கு வேண்டியதைச் செய்கிறது இன்ஜின். பொதுவாக AMT கியர்பாக்ஸில், கியர் மாறும்போது ஜெர்க் தெரியும். சான்ட்ரோவில் அது இல்லை. டியாகோவைவிட இதன் ‘நியூ-ஜென்’ எலெக்ட்ரானிக் AMT நன்றாக வேலை பார்ப்பதுபோல் எனக்குத் தோன்றியது. சில AMT-களில் கியர் ஒழுங்காக வேலை பார்க்கிறதா என்று செக் செய்து கொண்டே இருக்க வேண்டும். சான்ட்ரோ ஓட்டும்போது, சாலையில் மட்டும் கவனம் இருந்தால் போதும். அதேபோல், வழக்கமான க்ரீப் ஃபங்ஷன். அதாவது, ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்தாலும் கார் முன்னோக்கி லேசாக நகரும். பாலங்களில் மட்டும் இது பயனுள்ளதாக இருக்கும்.

எது ஜாலியான AMT?

இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். முதல் கியரில் இருந்து இரண்டாவதுக்கு மாறும்போது மட்டும் கொஞ்சம் டிலே இருப்பதுபோல் தெரிந்தது. ஆனால், பெர்ஃபாமென்ஸிலும், க்ளீன் ஆக்ஸிலரேஷனிலும் சான்ட்ரோ சூப்பர். 0-100 கி.மீ-க்கு சான்ட்ரோ 18.20 விநாடிகள் எடுத்துக் கொண்டது. 120-க்கு மேல் அசால்ட்டாகப் பறக்க முடிந்தது. ஆனால், டாப் எண்ட் ஸ்பீடு சோதனையிடவில்லை. ஆனால், டியாகோ போல் டிரைவிங் மோடுகளைத் தர மறந்துவிட்டது ஹூண்டாய்.

டியாகோ: இதில் 3 சிலிண்டர் இன்ஜின். அதிர்ந்துதான் கிளம்பும் டியாகோ. சிலிண்டர்தான் ஒன்று குறைவு. ஆனால், ஹூண்டாயைவிட எல்லாமே எக்ஸ்ட்ரா. சான்ட்ரோவைவிட 100 சிசி அதிகம், 16 bhp பவர் அதிகம், 1.15 kgm டார்க்கும் அதிகம். சான்ட்ரோவைவிட பன்ச் கிடைத்தது. இதனால், ஹைவேஸில் ஓவர்டேக்கிங்கில் டியாகோதான் என்னுடைய சாய்ஸ். இதுவும் 120-க்கு மேல் ஜிவ்வென்று போகிறது. இதன் 0-100 கி.மீ வேகமும் அதிகம்தான். 16.70 விநாடிகளில் பறந்தது டியாகோ.

ரிலாக்ஸாக ஓட்டினால், இதன் 5 ஸ்பீடு AMT செல்லப் பிள்ளையாக இருக்கும். வெறித்தனமாக ஓட்டினால், கியர் மாறுவது தெரிகிறது. இன்னும் சில நேரங்களில் கியர் மாறுவதற்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. டியாகோவில் சிலருக்குப் பிடிக்காத ஒரு விஷயம் இதுவாக இருக்கலாம். சுமார் 40 முதல் 50 கி.மீ ஸ்பீடில், கியர்பாக்ஸ் தானாகவே டாப் கியருக்கு வந்துவிடுகிறது. மைலேஜுக்காக இப்படி ஒரு செட்-அப்பைச் செய்திருக்கிறது டாடா. நான் அதிகமாக என்ஜாய் செய்த ‘ஸ்போர்ட்ஸ்’ மோடிலும் ஒரு பிரச்னை உண்டு. இங்கேயும் கியர்பாக்ஸ் கொஞ்சம் தாறுமாறாக வேலை செய்வதுபோல் தெரிந்தது. அதைவிட மேனுவல் மோடில் டியாகோ இன்னும் ஃபன்னாக இருந்தது. கியர்பாக்ஸ் அவ்வளவாகத் திணறவில்லை.

எது ஜாலியான AMT?

ரைடு அண்ட் ஹேண்ட்லிங்

சான்ட்ரோ: ஹூண்டாய் கார்களில் ஸ்டீயரிங் மீது ஒரு குறை வைப்பார்கள். சான்ட்ரோவில் அதற்கு வாய்ப்பில்லை. இதன் லைட் வெயிட் ஸ்டீயரிங், சரியான எடையில், துல்லியமாக வேலை செய்கிறது. டால் பாய் டிசைன் என்பதாலோ என்னவோ, இதன் டர்னிங் சர்க்கிளும் டைட்டாக இருப்பதால், குறுகலான திருப்பங்களில்கூட யு-டர்ன் அடிப்பது ஈஸி. ஸ்டீயரிங், சென்டருக்கு வருவதற்குக் கொஞ்சம் நேரம் பிடிக்கிறது. சான்ட்ரோ, மோசமான சாலைகளைத் தடையின்றிக் கடந்தாலும், ரைடு குவாலிட்டி கொஞ்சம் அலுப்பை ஏற்படுத்தும். காரணம், இதிலிருக்கும் சஸ்பென்ஷன் டியாகோவை ஒப்பிடும்போது கொஞ்சம் ஸ்டிஃப் ஆகவே இருக்கிறது. இதனால், பின் சீட்டில் இருப்பவர்கள் லேசான 'தையத் தக்கா' ஆட்டம் போட வேண்டும். மற்றபடி, பிரேக்ஸ் நல்ல ஷார்ப். 'பச்சக்' என நிற்கிறது கார்.

எது ஜாலியான AMT?

டியாகோ: சான்ட்ரோவைவிட டியாகோ எடை அதிகம். அதனாலேயோ என்னவோ, எந்த இடத்திலும் ஸ்டேபிளாகப் பறக்கிறது டியாகோ. அதேநேரத்தில் லோ ஸ்பீடுகளிலும் மேடு பள்ளங்களைப் பந்தாடுகிறது. நான் ஏதோ பெரிய காரில் பயணிப்பதைப்போல் உணர்ந்தேன். கேபின் இன்சுலேஷனும் அருமை. இதன் ஸ்டீயரிங்கும் லைட் வெயிட். கார்னரிங்கில் திருப்பி ஓட்டும்போது செம என்டர்டெயின்மென்ட் கிடைக்கிறது. பிரேக்குகளும் சூப்பர். சான்ட்ரோவைவிட வலிமை வாய்ந்த பிரேக்ஸ்போல் தெரிந்தது.

உள்ளே

சான்ட்ரோ: டால்பாய் டிசைன் என்பதால், காரில் உள்ளே போய் வெளியே வர ஈஸியாக இருக்கிறது. இதே காரணத்தால்தான், வெளிச்சாலையும் அருமையாகத் தெரிகிறது. உள்ளேயும் அவ்வளவு இடவசதி. சீட்களும் சப்போர்ட்டிவ் ஆக இருக்கின்றன. உயரமான டிரைவர்களுக்குத்தான் கொஞ்சம் சிக்கல் இருக்கும். காரணம், ஸ்டீயரிங்கும் சீட்டும் அட்ஜஸ்ட் பண்ண முடியாது. இன்டீரியர் தரம் இம்ப்ரஸ் செய்கிறது. கிராண்ட் i10-ல் இருந்து எடுத்துப் பொருத்தியுள்ளார்கள். இதன் ஏர்-வென்ட் ஒன்றே போதும். உயர்தர பென்ஸ் காரை நினைவுப்படுத்துகிறது வென்ட். இந்த செக்மென்ட்டில் ரியர் ஏ.சி வென்ட் இருப்பதும் சான்ட்ரோவில் மட்டுமே! பின் பக்க இடவசதியும் ஓகே. 3 பேர் சொகுசாகப் பயணிக்கலாம். டோர் பாக்கெட்டுகள் பெருசு. அங்கங்கே ஸ்டோரேஜ் ஸ்பேஸ். பூட்டும் ஓகே. 232 லிட்டர் இடவசதி உண்டு. 

எது ஜாலியான AMT?

டியாகோ: இடவசதி கொஞ்சம் நெருக்கியடிப்பதுபோல் இருக்கிறது டியாகோவின் உள்பக்கம். டச் ஸ்க்ரீன் இல்லையென்றாலும், சில பல க்ரோம் மற்றும் டெக்ஷர் வேலைப்பாடுகள் மூலம் ப்ரீமியம் லுக்கை வரவழைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். குஷனிங் சாஃப்ட் ஆக இருக்கிறது. தொடைக்கான சப்போர்ட், சான்ட்ரோவை ஒப்பிடும்போது குறைவுதான். சான்ட்ரோவின் இன்டீரியரையும் டியாகோவின் இன்டீரியரையும் ஒரு சேரப் பார்த்தால், டியாகோதான் அகலமாக இருப்பதுபோல் இருக்கும். ஆனால், சான்ட்ரோவைவிட டியாகோ இடவசதியில் கம்மிதான். காரணம், குறுகலான கண்ணாடிகளும், இருட்டான இன்டீரியரும். அங்கங்கே பாட்டில் ஹோல்டர்கள் உண்டு. பூட் வசதியில் டியாகோதான் வின்னர். 242 லிட்டர்.

வசதிகள், பாதுகாப்பு


சான்ட்ரோ: சந்தேகமே இல்லை; ஹூண்டாய் ஹேட்ச்பேக்குகள் இப்போதெல்லாம் சில ப்ரீமியம் கார்களுக்கே சவால் விடுகின்றன. க்விட் போலவே 7.0 இன்ச் டச் ஸ்க்ரீன்... வாவ்! அதுவும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளேவுடன்! ஸ்டீயரிங் வீலில் சில முக்கியமான கன்ட்ரோல்கள் உண்டு. இந்தச் சின்ன காருக்கு ரியர் ஏ.சி வென்ட்டெல்லாம் வேற லெவல். ரிமோட் கன்ட்ரோல் லாக்கிங், 4 பவர் விண்டோஸ், பனி விளக்குகள், எலெக்ட்ரிக் விங் மிரர்கள், 14 இன்ச் வீல் (அலாய் இல்லை). பாதுகாப்புக்கு ABS, EBD, ஒரே ஒரு டிரைவர் காற்றுப்பைதான். ஒரு குறை - முன் பக்கமும் சரி; பின் பக்கமும் சரி - அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் இல்லை.

எது ஜாலியான AMT?

டியாகோ: டாடாவும் வெல் பேக்கேஜ்டாகத்தான் டியாகோவை வடிவமைத்திருக்கிறது. சான்ட்ரோவில் இருக்கும் அனைத்து வசதிகளும் டியாகோவில் உண்டு. டச் ஸ்க்ரீனுக்கெல்லாம் இன்னும் ரொம்ப காலம் காத்திருக்க வேண்டும்போல. ஆனால், இதில் உள்ள ஸ்க்ரீன், ரிவர்ஸ் கேமரா மாதிரி செயல்படுகிறது. ஹர்மான் 8 ஸ்பீக்கர் சிஸ்டம், டாடாவைக் காப்பாற்றுகிறது. ரியர் ஏ.சி வென்ட்டையும், டச் ஸ்க்ரீனையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்... டியாகோ எங்கோ போய் விட்டது. ரியர் வாஷ்/வைப்பர், ரிவர்ஸ் சென்ஸார், ஸ்பீடு சென்ஸிங் டோர் லாக்ஸ், ஹைட் அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட், ஸ்டீயிரிங் டில்ட் அட்ஜஸ்ட்மென்ட், 14 இன்ச் அலாய் வீல், 175 மிமீ அகலமான டயர்கள், இரண்டு காற்றுப் பைகள், சிட்டி-எக்கோ என இரண்டு டிரைவிங் மோடுகள்.. சூப்பர் டாடா! ஹூண்டாய் இன்னும் ரொம்ப தூரம் வர வேண்டும்.

எது ஜாலியான AMT?

வெளியே

சான்ட்ரோ: புதுசாக சான்ட்ரோவைப் பார்ப்பதே பரவசமாக இருக்கிறது. கீழே அகலமான கிரில்... அதற்குள்ளேயே நம்பர் பிளேட், ஃபாக் லேம்ப்ஸ் எல்லாமே! இந்த கேஸ்கேடிங் கிரில், கிராண்ட் i10-யைப் பார்ப்பது போன்றே தெரிகிறது. கதவின் ஓரத்தில், முன் சக்கரத்துக்கு மேலே அந்த பூமராங் டிசைன்... சட்டெனக் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் கொஞ்சம் விஸிபிளிட்டி தேவை. கறுப்பு ரியர் பம்பர் ஓகே. அந்த ‘லிஃப்ட் டைப்' கதவுக் கைப்பிடிகள்தான் சான்ட்ரோவின் கம்பீரத்தையே காலி செய்வதுபோல் இருக்கின்றன.

எது ஜாலியான AMT?

டியாகோ: டாடாவின் டிசைன் இப்போதெல்லாம் தூக்கல். சிரிப்பதுபோல் இருக்கிறது கிரில். நெக்ஸானில் இப்படித்தான் இருக்கும். சான்ட்ரோவைவிட கொஞ்சம் பில்டு குவாலிட்டியில் கம்பீரமாக இருப்பதுபோல் இருக்கிறது டியாகோ. முன் பக்கம் காரின் ஹெட்லைட் கீழே பனி விளக்குகள் இருக்கின்றன. பின் பக்கம் வாஷ் வைப்பர், டிஃபாகருடன் இருப்பது ப்ரீமியம் லெவல். அங்கங்கே ஷார்ப் லைன்கள் ஓகே. சான்ட்ரோவில் மிஸ் ஆகும் அலாய் வீல்கள், டியாகோவுக்கு இன்னும் ப்ரீமியம் லுக். இது டாப் வேரியன்ட்டான XZA-வில் மட்டும்தான். என்ன. டியாகோவின் டிசைன் தான் கொஞ்சம் பழசாகிவிட்டது போல இருக்கிறது.

தொகுப்பு: தமிழ்

எது ஜாலியான AMT?

எது பெஸ்ட்?

ஹூ
ண்டாய் தெளிவாகத்தான் சான்ட்ரோவைக் களமிறக்கி இருக்கிறது. திணறாத AMT கியர்பாக்ஸ், ஆல் ரவுண்ட் விஸிபிளிட்டி, சிட்டிக்குள் ஈஸி டிரைவிங், லைட் வெயிட் ஸ்டீயரிங், பக்கா ரைடு அண்ட் ஹேண்ட்லிங், பின்/முன் பக்க இடவசதி எல்லாமே அருமை. அதிலும் செக்மென்ட் ஃபர்ஸ்ட்டான 7 இன்ச் டச் ஸ்க்ரீன், ரியர் ஏ.சி வென்ட் - இவற்றுக்காகவே ஹூண்டாய்தான் இந்தப் போட்டியில் ஜெயிக்க வேண்டும். இருந்தாலும் பல முக்கிய வசதிகள் ஹூண்டாயில் மிஸ்ஸிங். ஒரு காற்றுப் பைதான்; அலாய் வீல் இல்லை; 3 சிலிண்டர் டியாகோவுடன் ஒப்பிடும்போது பெர்ஃபாமென்ஸில் ஒரு பன்ச் இல்லை; ரியர் பார்க்கிங் சென்ஸார் இல்லை; ஸ்டீயரிங் டில்ட் அட்ஜஸ்ட்மென்ட் இல்லை... இப்படி சில இல்லைகள். (Sportz - 6.40 Lakhs) 

எது ஜாலியான AMT?

டாடாவிலும் சில குறைகள் உண்டு. கியர்பாக்ஸ், சான்ட்ரோ அளவுக்கு ஸ்மூத் இல்லைதான்; இடவசதி அவ்வளவாக இல்லைதான்; டச் ஸ்க்ரீன்/ரியர் ஏ.சி வென்ட் இல்லைதான். ஆனால், சிக்கலின்றி பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும் இன்ஜின், பெரிய கார் போன்ற ஸ்டெபிலிட்டி, முக்கியமாக பெரியளவு வித்தியாசமில்லாத விலை என்று டாடா வெறித்தனம் காட்டுகிறது. அதைவிட ஹூண்டாயில் மிஸ் ஆகும் அலாய் வீல், ரியர் வாஷ் வைப்பர், ரிவர்ஸ் சென்ஸார், ஸ்டீயரிங் அட்ஜஸ்ட்மென்ட், 8 ஸ்பீக்கர் சிஸ்டம், 2 காற்றுப்பைகள், டிரைவிங் மோடுகள் என்று ஏகப்பட்ட வசதிகளைக் காட்டிச் சிரிக்கும்போது, டியாகோவுக்கு ஓட்டுப் போடாமல் இருக்க முடியவில்லை. (XZA - 6.73 Lakhs)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism