Published:Updated:

டாடாவின் ‘வ்வ்ர்ர்ரூம்’ அண்ணன் தம்பிகள்!

டாடாவின் ‘வ்வ்ர்ர்ரூம்’ அண்ணன் தம்பிகள்!
பிரீமியம் ஸ்டோரி
டாடாவின் ‘வ்வ்ர்ர்ரூம்’ அண்ணன் தம்பிகள்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - டாடா டியாகோ - டிகோர் JTP

டாடாவின் ‘வ்வ்ர்ர்ரூம்’ அண்ணன் தம்பிகள்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - டாடா டியாகோ - டிகோர் JTP

Published:Updated:
டாடாவின் ‘வ்வ்ர்ர்ரூம்’ அண்ணன் தம்பிகள்!
பிரீமியம் ஸ்டோரி
டாடாவின் ‘வ்வ்ர்ர்ரூம்’ அண்ணன் தம்பிகள்!
டாடாவின் ‘வ்வ்ர்ர்ரூம்’ அண்ணன் தம்பிகள்!

வ்வொரு கார் நிறுவனமும் தங்கள் காரின் செல்லப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்து, அதில் ஒரு பெர்ஃபாமென்ஸ் மாடலை ரிலீஸ் செய்யும். ஃபோக்ஸ்வாகனில் போலோ GT, மாருதி சுஸூகியில் பெலினோ RS, ஃபியட்டில் புன்ட்டோ அபார்த் இப்படி சில பெர்ஃபாமென்ஸ் கார்கள், பார்க்கும்போதே ஜிவ்வென்று சூடேற்றும். அந்த வகையில் டாடாவிலும் இப்போது இரண்டு பெர்ஃபாமென்ஸ் கார்கள் வந்துவிட்டன. 

டாடாவின் ‘வ்வ்ர்ர்ரூம்’ அண்ணன் தம்பிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டியாகோ JTP மற்றும் டிகோர் JTP. ஏற்கெனவே டாடா மோட்டார்ஸ், ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் எனும் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து நானோவின் ரேஸ் மாடலைத் தயாரித்தது நினைவிருக்கிறதா? அதே நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப் வைத்துத்தான் இந்த இரண்டு JTP மாடல்களையும் களமிறக்கி இருக்கிறது. ‘ஜெயம் டாடா பெர்ஃபாமென்ஸ்' என்பதுதான் JTP. இரண்டு பெர்ஃபாமென்ஸ் கார்களிலும் ஒரு ஜிவ் ஜாலி ரைடு.

டாடாவின் ‘வ்வ்ர்ர்ரூம்’ அண்ணன் தம்பிகள்!

வெளியே

‘என்ன, டியாகோவோட அவுட்லுக்கில் ஏதோ வித்தியாசம் தெரியுதே’ என்று பார்த்தால்... அதுதான் JTP புது டிசைன் என்றார்கள். புது பம்பர், தேன்கூடு கிரில், அங்கங்கே சிவப்பு நிற வேலைப்பாடுகள் வெள்ளை காருக்கு செமையாக இருந்தது. பானெட்டில் துருத்திக் கொண்டிருக்கும் அழகான வென்ட், சைடு ஃபாக்ஸ் ஏர்வென்ட், JTP பேட்ஜிங், 15 இன்ச் அலாய் வீல்கள், முக்கியமாக புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ்... சும்மா சொல்லக் கூடாது... எல்லாமே ஸ்போர்ட்டினெஸ்தான். டாப் ஆங்கிளில் பார்த்தால்... அட கறுப்பு நிற ரூஃப். பின் பக்கம் பார்த்தால்.. டபுள் எக்ஸாஸ்ட்.. இரண்டு கார்களையும் ரசனையுடன்தான் வடிவமைத்திருக்கிறது ஜெயம். வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் மட்டும்தான் டிகோர் JTP கிடைக்கும். டியாகோவிலும் புது பம்பர், ஏர் டேம், அதே தேன்கூடு கிரில், கறுப்பு ரூஃப், அதே டபுள் எக்ஸாஸ்ட், அதே ரீ-ஸ்டைல்டு பின் பக்க பம்பர்... பார்த்தவுடனேயே டியாகோவின் தம்பி என்று சொல்லிவிடலாம். ஆனால் பானெட்டில் சிவப்பு நிற JTP பேட்ஜிங், சிவப்பு டியாகோவுக்கு எடுபடவில்லை. டியாகோவில் மிரர் மட்டும் கான்ட்ராஸ்ட் நிறத்தில் கொடுத்துள்ளார்கள். இந்த சின்ன காரில் கறுப்பு ஸ்பாய்லர், கறுப்பு ரூஃப், கறுப்பு மிரர் எல்லாமே செம ஸ்போர்ட்டியாக இருக்கிறது.

டாடாவின் ‘வ்வ்ர்ர்ரூம்’ அண்ணன் தம்பிகள்!

உள்ளே

இரண்டு கார்களிலும் உள்ளே ஏ.சி வென்ட்களைச் சுற்றி, ஃப்ளோர் மேட்டைச் சுற்றி, சீட்டைச் சுற்றி... சிவப்பு நிற வேலைப்பாடுகள். கீழே ஸ்போர்ட்ஸ் காருக்கே உரிய பெடல்கள். பார்த்தவுடன் மிதிக்க வேண்டும்போல் இருக்கிறது. லெதர் வேலைப்பாடுகள் கொண்ட ஸ்டீயரிங் ஓகேதான். இரண்டில் ஒன்றிலாவது ஃப்ளாட் பாட்டத்தை எதிர்பார்த்தேன். இல்லை. மற்றபடி ஸ்டாண்டர்டு கார்களின் டிசைன்தான். 5.0 இன்ச் டச் ஸ்க்ரீன், ABS, ரியர் பார்க்கிங் சென்ஸார், ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல்ஸ், 8 ஸ்பீக்கர் சிஸ்டம், டூயல் ஏர்பேக்ஸ் எல்லாம் சூப்பர்! டிகோரில் மட்டும்தான் ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் இருந்தது.

டாடாவின் ‘வ்வ்ர்ர்ரூம்’ அண்ணன் தம்பிகள்!

டிரைவ்

காரின் பெயரே பெர்ஃபாமென்ஸ் என்றால், இன்ஜினில் அது இருக்க வேண்டியது நியாயம்தானே! JTP கார்களை ஓட்டவே ஆசையாக இருக்கிறது. இரண்டு கார்களிலுமே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் டர்போ சார்ஜரைச் சேர்த்திருக்கிறார்கள். இது நெக்ஸானில் இருப்பதுதான். இன்டேக், எக்ஸாஸ்ட்டில் மட்டும் மாற்றம். பவர் 114 bhp, டார்க் 15 kgm இருந்தது. ஸ்டாண்டர்டு டிகோரில் 85 bhpயும், 11.4 kgm-மும்தான். 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் கொஞ்சம் வேலைப்பாடுகள் நடந்திருக்கின்றன.

டாடாவின் ‘வ்வ்ர்ர்ரூம்’ அண்ணன் தம்பிகள்!

பெர்ஃபாமென்ஸ் விரும்பிகளுக்கு 0-100 கி.மீதான் முக்கியம். 10 விநாடிகள் என்கிறது டாடா. நான் சோதனையிட வில்லை. எனக்கென்னவோ மிட்ரேஞ்ச் சுமார்தான் என்று தோன்றியது. அபார்த் புன்ட்டோவில் இந்த மிட் ரேஞ்ச்தான் சூப்பராக இருக்கும். 6,000 rpmதான் இதன் ரெட்லைன். 5,500 வரைதான் வந்தது. 2,500 rpm-ல் டர்போ வேலை செய்ய ஆரம்பித்துவிட்டாலும், டார்க் டெலிவரியில் ஏதோ தொய்வு தெரிந்தது. 3 சிலிண்டர்தானே... அதிர்வுகளை எதிர்பார்க்காமல் இருக்க முடியவில்லை.
 
சிட்டி, ஸ்போர்ட் என இரண்டு மோடுகள் இருந்தன. டிகோரில் எனக்குப் பிடித்தது கியர்பாக்ஸ்தான். ஸ்மூத்தாக மாறியது. ஆக்ஸிலரேஷன் அட்டகாசம். சிட்டி மோடில் 11.5 kgm டார்க் மட்டும்தான் கிடைக்கும்படி செட் செய்துள்ளார்கள் - மைலேஜுக்காக! இதுவே ஸ்போர்ட்ஸ் மோடில் 2,500 rpm-மைத் தாண்டிவிட்டால்... ஜிவ்தான். JTP-யைப் பொறுத்தவரை, மாருதியின் K12 சீரிஸ் அளவுக்கு இந்த இரண்டும் அவ்வளவு பெப்பியாக இல்லை.

டாடாவின் ‘வ்வ்ர்ர்ரூம்’ அண்ணன் தம்பிகள்!

ஹேண்ட்லிங்

டிகோர் சஸ்பென்ஷனிலும் வேலை பார்த்துள்ளார்கள். ரைடு உயரம் 15 மிமீ குறைந்துள்ளது. டேம்பர்களையும் மாற்றியுள்ளார்கள். டயர்கள் டிகோருக்கு ஓகே! சின்ன காரான டியாகோவுக்கு 15 இன்ச் வீல்கள் என்பது சூப்பர்! MRF அல்லது அப்போலோ டயர்கள், JTP கார்களின் ஹேண்ட்லிங்கில் பெரிய வித்தியாசத்தை உணரச் செய்யும் என்கிறார்கள் டாடா இன்ஜினீயர்கள். உண்மைதான். திருப்பங்களில் சூப்பர் கிரிப். லேசான பாடிரோல்தான் தெரிந்தது. ஸ்டீயரிங் எடை அதிகம். கொஞ்சம் டைட்டும் கூட! இதுதான் காருடன் நன்கு கனெக்ட் ஆனதுபோன்ற ஓர் உணர்வைத் தருகிறது. மற்றபடி பிரேக்குகளில் இரண்டிலுமே எந்த மாற்றமும் இல்லை. நைஸ் ஃபீட்பேக்.

ஓகேவா?

சாதாரண டியாகோவைவிட JTP 1.2 லட்சம் விலை அதிகம். இதன் ஆன்ரோடு சுமார் 7.5 லட்சம். இதுவே டிகோரின் ஆன்ரோடு சுமார் 8.8 லட்சம். கொடுக்கும் காசுக்கு மேலேயே எல்லா இடத்திலும் வேலை பார்த்துள்ளார்கள். மைலேஜ் பார்ட்டிகள் சாதா மாடல்களுக்கே போய் விடுங்கள். ஹேட்ச்பேக் பெர்ஃபாமென்ஸ் விரும்பிகளுக்கு டியாகோ, மினி செடான் பெர்ஃபாமென்ஸ் ஆர்வலர்களுக்கு டிகோர்!

தமிழ்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism